கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

டாடா டியாகோ லிமிடேட் எடிசன் கார் ஒன்று டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் காட்சி தந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

டியாகோ ஃபேஸ்லிஃப்ட் கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஒரு வருடம் ஆனதை நினைவுக்கூறும் விதமாக டியாகோவின் ஸ்பெஷல் எடிசனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

டியாகோ ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்டி வேரியண்ட்டின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கார் வெறும் 2,000 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. டியாகோ எக்ஸ்டி வேரியண்ட்டின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.49 லட்சம் என்ற அளவில் உள்ளது.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

ஆனால் இந்த ஸ்பெஷல் லிமிடெட் எடிசனின் விலை அதனை காட்டிலும் ரூ.30,000 அதிகமாக ரூ.5.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வேறுபாட்டிற்கு ஏற்ப இந்த புதிய ஸ்பெஷல் எடிசனில் சில அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

இதில் முக்கியமானதாக பிரத்யேகமான டேடோனா க்ரே, முத்தின் வெள்ளை மற்றும் ஃப்ளேம் சிவப்பு என்ற மூன்று சிங்கிள்-டோன் நிறத்தேர்வுகளை சொல்லலாம். வழக்கமான எக்ஸ்டி வேரியண்ட்டில் இரும்பு சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த ஸ்பெஷல் எடிசனில் 14 இன்ச் கருப்பு நிற அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த அப்கிரேடினை தி கார்ஸ் ஷோ பை அர்ஷ் ஜோலி என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவின் மூலம் தெளிவாக பார்க்க முடிகிறது. அப்படியே காரின் உள்ளே சென்றால், ஹர்மனின் 5 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயிமெண்ட் சிஸ்டம் நம்மை கவர்க்கிறது.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் நவி வரைப்படங்களுடன் முப்பரிமாண நாவிகேஷனுக்கும், 4 ஸ்பீக்கர்களுடன் பொழுதுப்போக்கிற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதியை இந்த சிஸ்டம் பெறவில்லை. இதே திரை ஆனது ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களுக்கான திரையாகவும் செயல்படும்.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

பின்பக்கத்தில் பார்சல் அலமாரி (வழக்கமான எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படுவதில்லை), ஃபாலோ மீ ஹெட்லேம்ப்கள், பவர் ஜன்னல்கள் & பின்புறம் பார்க்க உதவும் கண்ணாடிகள், கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், கீலெஸ் எண்ட்ரீ மற்றும் இரட்டை காற்றுப்பைகள் உள்ளிட்டவை இந்த ஸ்பெஷல் எடிசனில் சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் கருப்பு நிறத்தில், ஷோரூமில் காட்சிதந்த டாடா டியாகோ ஸ்பெஷல் எடிசன்!!

இவற்றுடன் கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் இபிடி உள்ளிட்டவையும் இந்த லிமிடெட் எடிசன் பெற்றுள்ளது. மற்றப்படி டியாகோ எக்ஸ்டி ட்ரிம்-இல் வழங்கப்படும் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. இந்த பெட்ரோல் என்ஜின் உடன் டியாகோ ஸ்பெஷல் எடிசனை 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனில் மட்டுமே பெற முடியும்.

Most Read Articles

English summary
2021 Tata Tiago Limited Edition Arrives At Dealer Showroom.
Story first published: Monday, February 15, 2021, 23:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X