டியாகோ என்ஆர்ஜி காரின் அறிமுகத்தை மீண்டும் உறுதிப்படுத்திய டாடா மோட்டார்ஸ்!! புதிய டீசர் வெளியீடு!
டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் அறிமுகம் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த டாடாவின் டீசர் படத்தினை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

முதன்முதலாக 2018ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ என்.ஆர்.ஜி வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. ஸ்டாண்டர்ட் டியாகோவில் இருந்து வேறுபடுவதற்காக இந்த ஸ்பெஷல் வேரியண்ட்டில் குறிப்பிடத்தக்க காஸ்மெட்டிக் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இத்துடன் முரட்டுத்தனமான தோற்றத்திற்காக ஃபாக்ஸ் பாடி க்ளாடிங் மற்றும் பளிச்சிடும் நிறத்தேர்வுகள் டியாகோ என்.ஆர்.ஜி காரில் வழங்கப்பட்டன. அறிமுகத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுவந்த டியாகோ என்ஆர்ஜி காரின் விற்பனை கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

இந்த நேரத்தில் தான் அப்டேட் செய்யப்பட்ட டியாகோ கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் டியாகோ என்ஆர்ஜி காரை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது.

வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி டியாகோ என்ஆர்ஜி கார் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில் இந்த ஹேட்ச்பேக் கார் தொடர்பான புதிய டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தில் ‘மிக விரைவில்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர்த்து உறுதியான அறிமுக தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அப்டேட் செய்யப்பட்ட டியாகோ காரின் அடிப்படையில் புதிய என்ஆர்ஜி உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் தற்சமயம் டாடா டியாகோ ஹேட்ச்பேக் கொண்டுள்ள டிசைன் ஹைலைட்களை அதன் புதிய என்ஆர்ஜி வெர்சனிலும் எதிர்பார்க்கலாம்.

அதேநேரம் ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக ஃபாக்ஸ் க்ளாடிங் உடன் ரீடிசைனில் பம்பர்கள், என்ஆர்ஜி முத்திரை மற்றும் ஃபாக்ஸ் சறுக்கு தட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன. இவற்றுடன் புதிய தொகுப்பு அலாய் சக்கரங்களையும் என்ஆர்ஜி கார் பெற்றுவரலாம்.

மற்றப்படி டியாகோ என்ஆர்ஜி காரின் உட்புறம் குறித்த விபரங்கள் தற்போதைக்கு தெரியவரவில்லை. தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல் போன்றவற்றை இந்த புதிய டியாகோ காரின் உட்புறத்தில் எதிர்பார்க்கிறோம்.

இவற்றுடன் இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், அதிவேக எச்சரிக்கை உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றுவரலாம் என கூறப்படும் டியாகோ என்ஆர்ஜி காரில் வழக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படும்.

இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 84 பிஎச்பி மற்றும் 3,300 ஆர்பிஎம்-இல் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இதனுடன் மேனுவல் & ஏஎம்டி என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








