Just In
- 1 hr ago
ஐரோப்பாவிற்கான 2021 மினி 5-கதவு ஹேட்ச்பேக் கார் வெளியீடு!! இந்தியா பக்கம் வர வாய்ப்பிருக்கா?
- 9 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 11 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 14 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
Don't Miss!
- News
மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா டியாகோ காரின் சேல்ஸ் பட்டைய கௌப்புது... காரணம் தெரிஞ்சா உடனே வாங்க முடிவு பண்ணீருவீங்க...
இந்தியாவில் டாடா டியாகோ காரின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த ஜனவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2021ம் ஆண்டு வலுவான விற்பனை எண்ணிக்கையுடன் டாடா மோட்டார்ஸ் தொடங்கியிருப்பது இதன் மூலம் நமக்கு தெரியவந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களை போல், டியாகோவும் (Tata Tiago) கடந்த ஜனவரி மாதம் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஜனவரி மாதம் 6,909 டியாகோ கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 4,313 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 60.19 சதவீத வளர்ச்சியை டாடா டியாகோ கார் பதிவு செய்துள்ளது.

இதேபோல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிட்டாலும், டாடா டியாகோ சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,066 டியாகோ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. எனவே அதற்கடுத்து வந்து ஜனவரியில் டாடா டியாகோ காரின் விற்பனை 13.9 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாடா டியாகோ காரின் பிரபலம் அதிகரித்து கொண்டே வருவதற்கு பாதுகாப்புதான் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திர ரேட்டிங்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கையும் டாடா டியாகோ பெற்றுள்ளது.

இதன் மூலம் தனது செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக டாடா டியாகோ திகழ்கிறது. டாடா டியாகோ காரின் விற்பனை உயர்ந்து வருவதற்கு, இந்த மிக சிறப்பான பாதுகாப்பு அம்சமே முக்கிய காரணமாக உள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் முன்பு போல் அல்லாமல், கார்களை வாங்கும்போது பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கியுள்ளனர்.

இந்த விஷயத்தில் டாடா டியாகோ வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து விடுகிறது. டாடா டியாகோ கார், சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை பலமுறை காப்பாற்றியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. டியாகோவை போல், டாடா நிறுவனத்தின் மற்ற கார்களான அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் ஆகியவையும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளன.

இந்த இரண்டு கார்களுமே, குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில், டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலும், டாடா நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டிலும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையே டாடா டியாகோ காரில், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்லைன்-3 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி என டாடா டியாகோ காரில் மொத்தம் 2 டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.