Tata-வின் பாதுகாப்பான கார்களை வாங்க இதுவே சரியான நேரம்... செப்டம்பரை முன்னிட்டு பெரும் சலுகைகள் அறிவிப்பு!
வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு Tata நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தைக் கீழே காணலாம், வாங்க.

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்ற புகழுக்கு உரிய நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata) இருக்கின்றது. நிறுவனத்தை இவ்வாறு அழைப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இத்தகைய ஓர் நிறுவனமே தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களுக்கு செப்டம்பர் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை அறிவித்திருக்கின்றது. இதுகுறித்த முக்கிய விபரங்களையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

Tata Tiago மற்றும் Tigor
டாடா நிறுவனம் அதன் டியாகோ கார் மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் வரை பண தள்ளுபடியை அறிவித்திருக்கின்றது. இத்துடன், ரூ. 15 ஆயிரம் எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் மற்றும் கார்பரேட் தள்ளுபடியாக ரூ. 3 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. டிகோர் காருக்கும் இதேபோல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், பண தள்ளுபடி மற்றும் கார்பரேட் டிஸ்கவுண்டுகள் ஒரே மாதிரியானதாக வழங்கப்பட்டிருக்கின்றன. அதேவேலையில், எக்ஸ்சேஞ்ஜ் மட்டும் சற்று அதிகமாக ரூ. 20 ஆயிரம் வரை கூடுதலாக வழங்கப்பட இருக்கின்றது.

Altroz காருக்கான சலுகையாக ரூ. 15 ஆயிரம் பண தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எக்ஸ்இசட் ட்ரிம்மிற்கு மட்டுமே இத்தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பிரீமியம் தர காருக்கு வேறு எந்த சலுகையையும் நிறுவனம் அறிவிக்கவில்லை. இதேபோல் சமீபத்திய அறிமுகமான Tigor EV-க்கும் எந்த சலுகையும் அறிவிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.

டாடா நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. நாட்டின் மலிவு விலைக் கொண்ட எலெக்ட்ரிக் காராக இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Nexon
நெக்ஸான் கார் பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை அனைத்திற்கும் தனி தனியாக தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், பெட்ரோல் தேர்விற்கு கார்பரேட் டிஸ்கவுண்டாக ரூ. 3 ஆயிரம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் டீசல் எஞ்ஜின் தேர்விற்கு எக்ஸ்சேஞ்ஜ் போனசாக ரூ. 15 ஆயிரமும், கார்பரேட் டிஸ்கவுண்டா ரூ. 5 ஆயிரமும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோல், எலெக்ட்ரிக் வெர்ஷன் நெக்ஸானுக்கு ரூ. 10 ஆயிரம் வரை பண தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது எக்ஸ்இசட் ப்ளஸ் ட்ரிம்மிற்கு மட்டுமே பொருந்தும். இதேபோல், ரூ. 15 ஆயிரம் கேஸ் தள்ளுபடியை எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ட்ரிம்மிற்கு நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

Harrier எஸ்யூவி காருக்கு அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் வரை பண தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இது ஹாரியர் எஸ்யூவியின் அனைத்து வேரியண்டுகளுக்கும் பொருந்தும். ஆனால், கேமோ மற்றும் டார்க் எடிசனுக்கு இது பொருந்தாது. இத்துடன் எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் ரூ. 40 ஆயிரம் மற்றும் கார்பரேட் டிஸ்கவுண்ட் ரூ. 5 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதுபோன்ற சிறப்பு சலுகையே நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்மிக்க கார் மாடலான Safari-க்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு எக்ஸ்சேஞ்ஜ் போனஸாக ரூ. 25 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

நிறுவனத்தின் இச்சலுகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு காணப்படுவதாகவும், சில பகுதிகளில் இருக்கும் டீலர்கள் கூடுதல் சலுகைகளை பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மிக விரைவில் Punch எனும் புதுமுக காரை இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

இந்த காரின் அறிமுகம் விரைவில் அரங்கேற இருக்கின்றது. மைக்ரோ எஸ்யூவி கார்கள் பிரிவில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. மஹிந்திரா கேயூவி100 என்எக்ஸ்டி மற்றும் ஃபோர்டு ஃப்ரீஸ்டைல் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் பஞ்ச் மிக விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

இதன் விலை மிகவும் குறைவாகவும், அதேநேரத்தில் அதிக பாதுகாப்பு அம்சங்களுடனும் பஞ்ச் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆகையால், இக்காரின் வருகை இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Source:GaadiWaadi
| மாடல் | பண தள்ளுபடி | எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் மற்றும் கார்பரேட் தள்ளுபடி |
| Tata Tiago | ₹20,000 | ₹15,000 + ₹3,000 |
| Tata Tigor | ₹20,000 | ₹20,000 + ₹3,000 |
| Tata Tigor EV | 0 | 0 |
| Tata Altroz | ₹15,000 (XZ) | 0 |
| Tata Nexon (petrol) | 0 | 0 + ₹3,000 |
| Tata Nexon (diesel) | 0 | ₹15,000 + ₹5,000 |
| Tata Nexon EV | ₹10,000 (XZ+)/₹15,000 (XZ+ Lux) | 0 |
| Tata Harrier (Camo, Dark Eiditon) | 0 | ₹40,000 + ₹5,000 |
| Tata Harrier (other variants) | ₹25,000 | ₹40,000 + ₹5,000 |
| Tata Safari | 0 | ₹25,000 + 0 |
மேலும் தள்ளுபடி பற்றிய விபரங்களுக்கு உங்களுக்கு அருகாமையில் இருக்கும் டாடா கார் விற்பனையாளர்களை அணுகவும்.


Click it and Unblock the Notifications








