டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

டாடா டியாகோ உரிமையாளர்கள் குழுக்களில் பகிரப்பட்டுவரும் இணையத்தில் கசிந்த படத்தின்படி டாடா டியாகோ காரில் புதிய நிறத்தேர்வு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த தகவல்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் டாடா மோட்டார்ஸின் பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோ நீண்ட காலத்திற்கு தற்போதைய டெக்டோனிக் நீலம் மற்றும் விக்டரி மஞ்சள் நிறத்தில் கிடைக்க பெற போவதில்லை.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

இவற்றிற்கு மாற்றாக டியாகோவில் வழங்கப்படவுள்ள புதிய மஞ்சள் நிற பெயிண்ட் தேர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் தற்போதைக்கு எந்த திட்டமும் இருப்பதுபோல் தெரியவில்லை. நீல நிறம்தான் மீண்டும் வித்தியாசமான டிசைன்களுடன் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

இந்த புதிய நீல நிறத்திற்கு அரிசோனா நீலம் என பெயர் வைக்கப்படும் என தெரிக்கிறது. அதேநேரம் தற்போதைய டெக்டோனிக் நீலம் மற்றும் விக்டரி மஞ்சள் நிறங்கள் முதலாவதாக டியாகோவின் விலை குறைவான வேரியண்ட்டான எக்ஸ்இ ட்ரிம்மில் இருந்து விரைவில் நீக்கப்படவுள்ளன.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

மற்ற வேரியண்ட்கள் டெக்டோனிக் நீல நிறத்திற்கு பதிலாக அரிசோனா நீல நிறத்தை இந்த பிப்ரவரி மாத இறுதியில் பெறலாம். விக்டரி மஞ்சள் டியாகோவில் வழங்கப்படுவது அடுத்த மார்ச் மாத இறுதியில் இருந்து நிறுத்திக் கொள்ளப்படலாம்.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

2016 ஏப்ரல் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான டியாகோ டாடா மோட்டார்ஸுக்கு ஹேட்ச்பேக் பிரிவில் நல்ல இடத்தை பெற்று தந்துள்ளது. இதற்கு அவ்வப்போது டியாகோவில் டாடா நிறுவனம் வழங்கிய அப்கிரேட்களை முக்கிய காரணமாக சொல்லலாம்.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

இந்த வகையில் சமீபத்தில் கூட டியாகோவின் ஸ்பெஷல் லிமிடெட் எடிசன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எல்லாத்தையும் விட டியாகோவின் அடையாளமாக விளங்குவது டாடாவின் லோகோ தான். ஏனெனில் டாடா கார்கள் என்றாலே பாதுகாப்பானவை என்கிற கருத்து எப்போதுமே நமது இந்திய வாடிக்கையாளர்களிடம் உள்ளது.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

என்சிஏபி சோதனையில் டியாகோ ஐந்திற்கு 4 நட்சத்திரங்களை பெற்றிருப்பது இதற்கு ஒரு சான்றாகும். தற்சமயம் டியாகோவில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ற ஒரே ஒரு என்ஜின் தேர்வு மட்டும்தான் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது.

டியாகோவை புதிய நிறத்தில் வழங்கவுள்ள டாடா!! அப்போ தற்போதைய மஞ்சள் நிறத்தில் கிடைக்காதா?

ரூ.4.85 லட்சத்தில் இருந்து ரூ.6.84 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலைகளை கொண்டுள்ள டாடா டியாகோ கடந்த 2021 ஜனவரி மாதத்தில் 6,909 யூனிட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2020 ஜனவரி மாதத்தை காட்டிலும் சுமார் 60 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Tiago To Get New Arizona Blue Colour – Yellow To Discontinue?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X