வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ ஹேட்ச்பேக் காரின் விலை குறைவான வேரியண்ட்டாக புதிய எக்ஸ்டி(O)-ஐ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. எக்ஸ்டி ட்ரிம்-ஐ காட்டிலும் ரூ.15,000 குறைவாக இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.5.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

டியாகோவின் ஆரம்ப நிலை வேரியண்ட்டை காட்டிலும் இதன் விலை ரூ.50,000 மட்டுமே அதிகமாக உள்ளது. குறை கடத்தி பாகங்களுக்கு உலகளவில் பெரிய தேவை நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக டியாகோ கார்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்ய முடியாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தவித்து வந்தது.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

இந்த பிரச்சனையை களையவே குறைவான அம்சங்களுடன் இந்த மலிவான வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏனெனில் புதிய எக்ஸ்டி(O) வேரியண்ட்டில் 2-டின் ஸ்டேரியோ சிஸ்டம் வழங்கப்படவில்லை.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

ஆனால் எக்ஸ்டி வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. இதனால் குறைக்கடத்திகளின் தேவை இல்லாததினால், ஒரு வகையில் டியாகோவை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் டாடா நிறுவனத்திற்கு பிரச்சனை தீர்ந்துள்ளது.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

இதனால் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இந்த புதிய வேரியண்ட்டில் வழங்கப்படுவதில்லை. இருப்பினும் எக்ஸ்டி ட்ரிம்-இல் வழங்கப்படும் ஸ்பீக்கர்கள் மற்றும் வயரிங் பாகங்கள் அனைத்தும் புதிய எக்ஸ்டி(O) வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளன.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

எனவே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை கஸ்டமைஸ்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கி பொருத்தி கொள்ள தயாராக இருக்கும் வாடிக்கையாளர்கள் டியாகோ எக்ஸ்டி(O) வேரியண்ட்டை தாராளமாக வாங்கலாம் என்ற நிலை இருந்தது.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

அதேநேரம் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் டியாகோவிற்கு தனது தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஆண்ட்ராய்டு சார்ந்த தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பை கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கி வருகிறது.

இந்த கூடுதல் ஆக்ஸஸரீ பொருத்தப்பட்ட டியாகோ காரினை திகார்ஸ்ஷோ என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள மேலே உள்ள வீடியோவில் பார்க்கலாம். அதாவது கஸ்டமைஸ்ட் நிறுவனத்திற்கு கொடுக்கும் பணத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடமே கொடுத்து இன்ஃபோடெயின்மெண்ட் ஆக்ஸஸரீயாக பெற்று கொள்ளலாம்.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

டாடா நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட் யூனிட் ஆனது கூகுள் வரைப்படங்கள், குரல் கட்டளைகள் உடன் கூகுள் உதவி என ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது. இந்த சிஸ்டத்திற்கான விலை ரூ.24,000 ஆக உள்ளது.

வெறும் ரூ.25,000 மட்டும் தான்!! டாடா பிராண்டின் ஆண்ட்ராய்டு தொடுத்திரை உடன் டியாகோ எக்ஸ்டிஒ காரை வாங்கலாம்!

அதேநேரம் அதனை காரில் பொருத்துவதற்கு ரூ.1,000 என மொத்தம் ரூ.25,000 வாடிக்கையாளர் செலுத்த வேண்டியதாக இருக்கும். மற்றப்படி ஸ்பீக்கர் & வயரிங் பாகங்களை காரில் பொருத்த வேண்டிய வேலை இருக்காது. ஏனெனில் அவை அனைத்தும் ஏற்கனவே டியாகோ எக்ஸ்டி(O) வேரியண்ட்டில் நிலையாக வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Tata Tiago XTO Gets Tata Branded Android Touchscreen Infotainment Worth Rs 25k.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X