மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் Tata Tigor EV-இன் வேரியண்ட் வாரியான வசதிகள் விபரத்தை இப்பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த முழு விபரத்தையும் இப்பதிவில் பார்க்கலாம்.

மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

இந்தியாவின் மிக மிக மலிவு விலை எலெக்ட்ரிக் காராக Tata Tigor EV (டாடா டிகோர் இவி) விற்பனைக்கு வந்திருக்கின்றது. ரூ. 11.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இக்கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. முன்னதாக டாடாவின் நெக்ஸான் இவி-யே நாட்டின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் என்ற புகழுக்கு சொந்தமான எலெக்ட்ரிக் காராக இருந்தது.

மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

சொந்த நிறுவனத்தின் தயாரிப்பையே பின்னுக்கு தள்ளி நாட்டின் மிகவும் குறைந்த மின்சார கார் என்ற புகழை டிகோர் இவி சூடியிருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, XE (எக்ஸ்இ), XM (எக்ஸ்எம்), XZ+ (எக்ஸ்இசட் ப்ளஸ்) மற்றும் XZ+ (DT) (எக்ஸ்இசட் ப்ளஸ் இரு நிற தேர்வு) ஆகிய நான்கு ட்ரிம்களிலேயே டாடா டிகோர் இவி விற்பனைக்குக் கிடைக்கும்.

மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

இந்த அனைத்து ட்ரிம்களிலும் தனது புத்தம் புதிய ஜிப்ட்ரான் (ZipTron) Powertrain- தொழில்நுட்பத்தை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, இன்னும் பல அம்சங்கள் புதிய டாடா டிகோர் இவி-இல் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், எந்தெந்த ட்ரிம்களில் என்னென்ன மாதிரியான வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

XE (எக்ஸ்இ)

விலை: ரூ. 11.99 லட்சம்

டாடா டிகோர் இவி-யின் ஆரம்ப நிலை ட்ரிம்மாக XE (எக்ஸ்இ) இருக்கின்றது. இந்த ஆரம்ப நிலை ட்ரிம்மிலேயே பல்வேறு சிறப்பம்சங்களை டாடா மோட்டார்ஸ் வழங்கியிருக்கின்றது. என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

அம்சங்களின் பட்டியல்:

 • எல்இடி வால் பகுதி மின் விளக்கு
 • தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல்
 • உயரத்தை மாற்றியமைக்கும் வசதியுடன் கூடிய டிரைவர் இருக்கை
 • டில்ட் அட்ஜஸ்டபிள் ஸ்டியரிங் வீல்
 • முன்பக்கத்தில் பவர் விண்டோ
 • முன்பக்க பயணிகளுக்கான சார்ஜிங் பாயிண்ட்
 • மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள்
 • டிஜிட்டல் டிரைவர் திரை
 • இரு ஏர்-பேக்
 • இபிடி உடன் கூடிய ஏபிஎஸ்
 • பின்பக்க பார்க்கிங் செய்யும் சென்சார்கள்
 • மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

  XM (எக்ஸ்எம்)

  விலை: ரூ. 12.49 லட்சம்

  ஆரம்ப நிலை மாடலைக் காட்டிலும் ஐம்பாதியிரம் ரூபாய் அதிக விலைக் கொண்டதாக XM (எக்ஸ்எம்) ட்ரிம் இருக்கின்றது. இந்த கூடுதல் விலைக்கு கூடுதல் பிரீமியம் அம்சங்கள் இடம் பெற்றிருப்பதே காரணமாக இருக்கின்றது.

  மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

  அம்சங்களின் பட்டியல்:

  • ஃபுல் வீல் கவர்கள்
  • ஃப்ளிப் சாவியை பயன்படுத்தி லாக் செய்யும் வசதி
  • நான்கு கதவுகளிலும் பவர் விண்டோக்கள்
  • 2-டிஐஎன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (யுஎஸ்பி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டது)
  • நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் சவுண்ட் சிஸ்டம்
  • வேகத்தை பொருத்து தானாக லாக் செய்யும் கதவுகள்
  • பின் பக்க பார்க்கிங் கேமிரா
  • மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

   XZ+ (எக்ஸ்இசட் ப்ளஸ்)

   விலை: ரூ. 12.99 லட்சம்

   XZ+ (எக்ஸ்இசட் ப்ளஸ்), எக்ஸ்எம் மற்றும் எக்ஸ்இ ஆகிய இரு ட்ரிம்களைக் காட்டிலும் கூடுதல் பிரீமியம் வசதிகளைக் கொண்டிருக்கின்றது. எனவேதான் எக்ஸ்எம்-ஐக் காட்டிலும் ஐம்பதாயிரம் ரூபாயும், எக்ஸ்இ-ஐக் காட்டிலும் ஒரு லட்ச ரூபாயும் அதிக விலையைக் கொண்டிருக்கின்றது.

   மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

   சிறப்பம்சங்களின் பட்டியல்

   • எல்இடி டிஆர்எல்கள்
   • ஹாலோஜன் புரஜெக்டர் முகப்பு மின் விளக்கு
   • முன்பக்கத்தில் பனி மின் விளக்கு
   • பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளில் டர்ன் இன்டிகேட்டர்கள்
   • பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்ட ஸ்டீல் வீல்
   • சாவியில்லா நுழைவு வசதி
   • புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி
   • பின்னிருக்கையாளர்களுக்கும் ஃபோன் சார்ஜர் வசதி
   • கூல்டு குளோவ் பாக்ஸ்
   • எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்ட் செய்யக் கூடிய மடிக்கக் கூடிய ஓஆர்விஎம்கள்
   • 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
   • கார் இணைப்பு தொழில்நுட்பம்
   • 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் மியூசிக் சிஸ்டம்
   • ரியர் டிஃபாக்கர்
   • ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்
   • மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

    XZ+ (DT) இரு நிற தேர்வு:

    டாடா மோட்டார்ஸ் டிகோர் இவி காரில் இரு நிற தேர்வையும் வழங்கப்படுகிறது. XZ+ ட்ரிம்மிலேயே இவ்வசதியை நிறுவனம் வழங்குகின்றது. கருப்பு நிற ரூஃப் வசதியை வாடிக்கையாளர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையில் நிறுவனம் வழங்குகின்றது. இதற்கு கூடுதலாக ரூ.15 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.

    மலிவு விலை Tata Tigor EV வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்... அட ஒவ்வொரு ட்ரிம்மிலும் இவ்ளோ வசதிகளா?

    டாடா இக்காரில் 75 பிஎஸ் திறனை வெளியேற்றும் மின் மோட்டார் மற்றும் 26kWh பேட்டரி பேக்கை வழங்குகின்றது.

    இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 306கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே போதும். சிறப்பு நிற தேர்வாக டேடோனா கிரே மற்றும் டீல் சிக்னேச்சர் நீலம் ஆகிய இரு நிறங்கள் வழங்கப்படுகின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata tigor ev variant wise features details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X