என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எடுத்துள்ள திடீர் முடிவால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார் போன்ற பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருவதுடன், லாரி போன்ற வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று என்ற பெருமையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களின் விலை அதிரடியாக உயரவுள்ளது. வர்த்தக வாகனங்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

வரும் அக்டோபர் 1ம் தேதியில் இருந்து இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது. வர்த்தக வாகனங்களின் உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் நடப்பாண்டு வாகனங்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக மாருதி சுஸுகி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற முன்னணி நிறுவனங்களின் வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில், வாகனங்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருவது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி கொண்டுள்ளது. அதுவும் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில் வாகனங்களின் விலை உயர்வது, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் புதிய சஃபாரி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் ஹூண்டாய் அல்கஸார் உள்ளிட்ட எஸ்யூவி கார்களுடன் புதிய டாடா சஃபாரி கார் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ளது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

மேலும் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் உடனும், புதிய டாடா சஃபாரி விற்பனையில் போட்டியிடவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் புதிய டாடா சஃபாரிக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சஃபாரி என்ற பெயரும் கூட இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இதுதவிர புதிய 2021 டிகோர் எலெக்ட்ரிக் காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போதைய நிலையில் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. குறைவான விலை மற்றும் நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்பது போன்ற காரணங்களால்தான், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை இந்தியாவில் தூள் கிளப்பி கொண்டுள்ளது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் டாடா அல்ட்ராஸ் ஐசி இன்ஜின் காரின், எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

என்ன இப்படி பண்ணீட்டாங்க? டாடா நிறுவனம் எடுத்த திடீர் முடிவால் உறைந்து போன வாடிக்கையாளர்கள்... ஏன் தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்து கொண்டுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. எனவே எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் கார் செக்மெண்ட்டிலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 22, 2021, 12:17 [IST]
English summary
Tata to increase prices of its commercial vehicles from october 1 check details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+