எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

எக்ஸ்பிரஸ் (XPRES) என்ற புதிய பிராண்டை டாடா மோட்டார்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளீட் வாடிக்கையாளர்களுக்கு (Fleet Customers) என்று பிரத்யேகமாக இந்த எக்ஸ்பிரஸ் பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நிறைய வாகனங்களை மொத்தமாக வைத்து வாடகைக்கு விடுவது போன்ற சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களை ஃப்ளீட் ஆபரேட்டர்கள் எனலாம்.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

டாக்ஸி சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்களும் கூட ஃப்ளீட் ஆபரேட்டர்கள்தான். அவர்களுக்கு என்றே பிரத்யேகமாக எக்ஸ்பிரஸ் பிராண்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்பிரஸ் பிராண்டின் கீழ், ஃப்ளீட் ஆபரேட்டர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

ஃப்ளீட் ஆபரேட்டர்களுக்கு ஏற்ற பாதுகாப்பு வசதிகள், பயணிகளின் சௌகரியம், மிக குறைவான பராமரிப்பு செலவு ஆகிய அம்சங்களில் இந்த தயாரிப்புகள் தலைசிறந்தவையாக இருக்கும். ஃப்ளீட் செக்மெண்டிற்காக களமிறக்கப்படும் அனைத்து வாகனங்களிலும் எக்ஸ்பிரஸ் பேட்ஜ்தான் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

தனிப்பட்ட வாகனங்களில் இருந்து ஃப்ளீட் வாகனங்களை வேறுபடுத்தி காட்டுவதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. எக்ஸ்பிரஸ் பிராண்டின் கீழான முதல் வாகனம் வெகு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது எலெக்ட்ரிக் செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் வாகனம் (XPRES-T EV) என்ற பெயரில் இது அழைக்கப்படும்.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

இது டாடா டிகோர் எலெக்ட்ரிக் வாகனத்தின் (Tata Tigor EV) ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. இது எலெக்ட்ரிக் வாகனம் என்பதால், பராமரிப்பு செலவு மிகவும் குறைவாக இருக்கும் என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவத்தையும் வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

புதிய எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் செடான் காருக்கான முன்பதிவு குறிப்பிட்ட டீலர்ஷிப்களில் வெகு விரைவில் தொடங்கப்படும். 213 கிலோ மீட்டர் மற்றும் 165 கிலோ மீட்டர் என இரண்டு வகையான ரேஞ்ச் தேர்வுகளுடன் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் செடான் கார் கிடைக்கும். இது அராய் சான்று வழங்கிய ரேஞ்ச் ஆகும். எனவே நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

21.5 kWh மற்றும் 16.5 kWh என 2 பேட்டரி தேர்வுகளில் எக்ஸ்பிரஸ்-டி எலெக்ட்ரிக் செடான் கிடைக்கும். இந்த பேட்டரிகளை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையின் மூலமாக பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு முறையே 90 நிமிடங்கள் மற்றும் 110 நிமிடங்கள் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் முறையின் மூலம் பேட்டரிகளை வேகமாக சார்ஜ் செய்து விடலாம்.

எக்ஸ்பிரஸ் என்ற புதிய பிராண்டின் கீழ் வாகனங்களை அறிமுகம் செய்யப்போகும் டாடா... யாருக்காக தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் இந்த காரை வாங்கலாம். எனவே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக இது உள்ளது. இதுதவிர அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

Most Read Articles

English summary
Tata Xpres Brand Introduced For Fleet Customers: Check All Details Here. Read in Tamil
Story first published: Wednesday, July 14, 2021, 20:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X