ரொம்ப ரொம்ப அதிகம்... விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை வாங்கி ஐம்பது பேரில் ஒருவராக மாறிய ராம் சரண்...

பிரபல நடிகையைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த நடிகர் ராம் சரண் மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் சொகுசு காரை வீட்டுக்கு ஓட்டி வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன கார், எவ்வளவு விலைக் கொண்டு உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களையும் இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தின் புதுமுக கார் மாடலாக மேபேக் ஜிஎல்எஸ்600 (Maybach GLS 600) இருக்கின்றது. இந்த காருக்கு தொழிலதிபர்கள் மற்றும் திரைநட்சத்திரங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. பொதுவாகவே, நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சொகுசு வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

அதிலும், இக்காருக்கு (மேபேக் ஜிஎல்எஸ்600) தற்போது திரை நட்சத்திரங்கள் மிகப்பெரிய டிமாண்டே ஏற்பட தொடங்கியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல திரைப் பிரபலங்கள் தங்களின் சொகுசான பயணத்திற்காக புதிதாக மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை வாங்கி வருகின்றனர்.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

அந்தவகையில், மிக சமீபத்தில் ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் ஆகியோர் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை வங்கினர். இவர்களைத் தொடர்ந்து, பிரபல நடிகை க்ரித்தி சனோன் சொகுசு காரை வாங்கினார். இவர் வாங்கிய காரின் விலை ரூ. 2.43 கோடி ஆகும். பல முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இக்காரை நடிகை வாங்கினார்.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

இவர்கள் அனைவர்களுக்கும் டஃப் கொடுக்கும் வகையில் தற்போது பிரபல தெலுங்கி நடிகர் ராம் சரண்-உம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் வாங்கியிருக்கும் காரின் விலை ரூ. 4 கோடிக்கும் அதிகம் ஆகும்.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

ராம் சரண் டீலரிடத்தில் இருந்து சொகுசு காரை டெலிவரி பெறுவது போன்ற படங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இத்துடன் அவர் காரை ஓட்டிச் செல்வது போன்ற படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ராம் சரண் இடத்தில் ஏற்கனவே ஆஸ்டன் மார்டின் வி8 விண்டேஜ், ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோபையோகிராஃபி, ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்350 உள்ளிட்ட பல்வேறு சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

அவற்றின் வரிசையில் புதிதாக மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 சொகுசு காரை சேர்த்திருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றே இக்காரை அவர் டெலிவரி பெற்றிருக்கின்றார். ஷங்கரின் 'ஆர்சி15' ராம் சரண் தற்போது புக்காகியிருக்கின்றார். இப்படத்தின் காட்சிப்பதிவு பணிகள் மிகவும் விரு விருப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

இந்த மாதிரியான சூழ்நிலையில் தனது சொகுசு பயணங்களுக்காக புதிய மேபேக் ஜிஎல்எஸ்600 காரை ராம் சரண் வாங்கியிருக்கின்றார். இக்கார் பன்முக சிறப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட கார் மாடலாகும். மெர்சிடிஸ் மேபக் ஜிஎல்எஸ் 600 ஓர் சொகுசு எஸ்யூவி ரக காராகும்.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

இக்காரில் லேசான ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட 4.0 லிட்டர், ட்வின்-டர்போ வி8 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 558 எச்பி பவர் மற்றும் 730 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 9 ஸ்பீடு தானியங்கி டிரான்ஸ்மிஷன் வாயிலாக இது இயங்குகின்றது.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

இதன் இக்யூ பூஸ்ட் வசதிக் கொண்ட ஹைப்ரிட் சிஸ்டம் கூடுதலாக 22 எச்பி பவர் மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடியது. இந்த காரை ஒட்டுமொத்தமாக இந்திய சந்தைக்காக வெறும் 50 யூனிட்டுகளை மட்டுமே பென்ஸ் நிறுவனம் களமிறக்கியது. இவையனைத்தும் விற்பனையாகிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

பிரபல நடிகையை அடுத்து மிக மிக விலையுயர்ந்த பென்ஸ் காரை வீட்டுக்கு ஓட்டி வந்த ராம் சரண்... விலைய கேட்டு தலை கிருகிருனு ஆகுது!

ஆகையால், இதன் அடுத்த பேட்சை வரும் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. பிரீமியம் தர லெதர், பெரிய பனோரமிக் சன்ரூஃப், அதிக இட வசதி என பல்வேறு சிறப்பு வசதிகளுடன் மேபேக் ஜிஎல்எஸ்600 விற்பனைக்குக் கிடைக்கிறது. ஆகையால், சொகுசு வசதிக் கொண்ட வீடு போன்று இது காட்சியளிக்கின்றது.

https://www.facebook.com/plugins/video.php?height=315&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgmk.charan%2Fvideos%2F181091947466983%2F

இதுமட்டுமின்றி, ஆக்டிவ் டிஸ்டன்ஸ் அசிஸ்ட் டிஸ்ட்ரோனிக், ஆக்டிவ் லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆக்டிவ் ப்ளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஆக்டிவ் பிரேக் அசிஸ்ட், ஆக்டிவ் ஸ்டீயரிங் அசிஸ்ட், அடாப்டிவ் ஹை பீம் அசிஸ்ட் பிளஸ் அடாப்டிவ் எல்இடி டெயில் விளக்குகள், 8 ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ், 360 டிகிரி பார்வைத் திறன் கொண்ட கேமரா உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, September 13, 2021, 20:11 [IST]
English summary
Telugu actor ram charan buys mercedes maybach gls 600 worth rs 4 crore
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+