3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

பிரபல கார் உற்பத்தி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அண்மைக் காலங்களாக வரவேற்பு மிக அதிகளவில் கிடைத்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக உலகளவில் விற்பனையில் புதிய வரலாற்று சாதனையை அந்நிறுவனம் படைத்திருக்கின்றது. இதுகுறித்த முழு தகவலைக் கீழே காணலாம், வாங்க.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் டெஸ்லா (Tesla). இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்நிறுவனமே வாகன விற்பனையில் ஓர் புதிய வரலாற்றைச் சாதனையை படைத்திருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

டெஸ்லா நிறுவனம், 2003ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அன்றே இந்த உலகில் முதல் முறையாக கால் தடம் பதித்தது. கால் தடம் நாளில் இருந்து தற்போது வரை நிறுவனம் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

அதிலும், கடைசி மூன்று ஆண்டுகளில் நிறுவனம் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் கார்களை விற்பனைச் செய்திருக்கின்றது. ஆரம்பத்தில் மிகவும் குறைவான அளவிலேயே நிறுவனத்தின் எலெக்ட்ரிக் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த 2018ம் ஆண்டின் நான்காவது காலாண்டு வரை நிறுவனம் வெறும் 5 லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனைச் செய்திருந்தது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

இந்த குறைந்த விற்பனை மளமளவென உயர்ந்து 2021ம் ஆண்டின் காலாண்டில் 20 லட்சம் யூனிட்டாக மாறியது. முன்னதாக 2020ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஒரு மில்லியன் இ-வாகன விற்பனை என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு தொடர்ச்சியாக மின்சார வாகன விற்பனையில் நிறுவனம் வரலாற்று சாதனையைப் படைத்து வருகின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

இதுமாதிரியான தொடர் சாதனையை வேறு எந்த மின்சார வாகன விற்பனையாளர்களும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மாடல் 3 மற்றும் மாடல் ஒய் ஆகிய எலெக்ட்ரிக் கார்களே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களாக காட்சியளிக்கின்றன. ஆம், தற்போதைய ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் மாடல் மற்றும் மாடல் ஒய் ஆகியவற்றுடையதாக இருக்கின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

இதற்கு அடுத்தபடியாக மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகிய இருக்கின்றன. இத்துடன், ரோட்ஸ்டர் மாடலும் கணிசமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இவை அனைத்தைக் காட்டிலும் மாடல்3 எலெக்ட்ரிக் காரே நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக காட்சியளிக்கின்றது. இதுவே, மிக மிக அதிகம் விற்பனையாகும் காராகவும் இருக்கின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்கள் மிக விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதற்கான முயற்சியில் நிறுவனம் நிறுவனம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிறுவனம், தனது மாடல் 3 எலெக்ட்ரிக் காரையே முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. சிபியூ எனப்படும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இது விற்பனைக்குக் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

டெஸ்லா மடால் 3 எலெக்ட்ரிக் காரை முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 568 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதுவே இக்காரின் அதிகபட்ச ரேஞ்ஜ் திறன் ஆகும். மேலும், வெறும் 3.1 செகண்டுகளிலேயே இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 96 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனைக் கொண்டிருக்கின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

இக்காரை சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 15 நிமிடங்களில் 175 மைல் தூரம் வரை பயணிக்கக் கூடிய சார்ஜ் திறனை பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய அதிக சிறப்பு வாய்ந்த மின்சார காராகவே டெஸ்லா மாடல் 3 எலெக்ட்ரிக் கார் உலக நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இதனையே தனது முதல் எலெக்ட்ரிக் காராக இந்தியாவில் டெஸ்லா களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

3 வருடங்களில் பத்து லட்சம் கார்களை விற்பனை செய்த நிறுவனம்... இப்படி ஒரு சாதனையை எந்த நிறுவனமும் இதுவர செய்யல!

உலகளவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை உறுதி செய்யும் வகையில் டெஸ்லா நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு கிடைத்து வரவேற்பு அமைந்துள்ளது. இந்தியாவிலும் மின்சார வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நாட்டில் மின் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla sells 10 lakh e cars globally in less than 3 years
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X