இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

செல்போன் பயன்படுத்தியபடி சென்றதால் நேர்ந்த கொடூர விபத்துகுறித்த வீடியோவை இங்கிலாந்து நாட்டு போலீஸார் வெளியிட்டிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

போக்குவரத்து விதிகளை மீறுதல், மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்குதல் போன்றவற்றால் அதிக விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இவற்றினால் எந்த அளவு விபத்துகள் அரங்கேறுகின்றதோ அதே அளவு செல்போன் பயன்படுத்துவதாலும் அதிக விபத்துகள் அரங்கேறுகின்றன.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

இது சமீப காலமாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை நம்மில் பலர் செல்போனுக்கு அடிமையாகியுள்ளோம். கழிவறை தொடங்கி படுக்கையறையில் உறங்க செல்லும் முன் வரை செல்போனும், கையுமாகவே சுற்றி வருகின்றோம்.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

இந்த மாதிரியான இடங்களில் செல்போனைப் பயன்படுத்துவதையே மிக ஆபத்தானது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் பலர் வாகனத்தை ஓட்டும்போதே செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

அவ்வாறு, செல்போனைப் பயன்படுத்தியபடி வாகனத்தை ஓட்டியதால் நேர்ந்த கடும் விபத்து சம்பவம் பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். செல்போன் பயன்படுத்தியபடி வாகனத்தை இயக்கினால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மக்களுக்கு உணர்த்தும் நோக்கில் வீடியோவை சூசெக்ஸ் காவல்நிலை அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்றனர்.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

இங்கிலாந்து நாட்டிலேயே இந்த கொடூர விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. சீஃபோர்ட்டைச் சேர்ந்த 52 வயதான லாரி ஓட்டுநராலேயே விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இவருக்கே இந்கிலாந்து போலீஸார் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியிருக்கின்றனர்.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

லாரியை ஓட்டிக் கொண்டே இவர் தனது செல்போனை பயன்படுத்தியிருக்கின்றார். மேலும், செல்போனில் மூழ்கியபடி, அதி வேகத்தில் அவர் லாரியை இயக்கியிருக்கின்றார். இவ்வாறு தனது பயணத்தைத் தொடர்ந்தநிலையில் எதிரில் பொறுமையாக சென்றுக் கொண்டிருந்த மற்றுமொரு ட்ரக் மீது லாரி மோதியிருக்கின்றது.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

செல்போனில் அதிக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்ததால் இவ்விபத்து அரங்கேறியிருக்கின்றது. தனக்கு முன்னால் ஓர் வாகனம் சென்றுக் கொண்டிருப்பதை உணர்ந்தும் அவரால் அவ்விபத்தை தவிர்க்க முடியவில்லை. மிக அருகில் வாகனத்தை நெருங்கிய பின்னரே அவர் தனக்கு முன்னாள் வாகனம் சென்றுக் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கின்றார்.

அது கடந்த சில நிமிடங்களிலேயே சீல் பெல்டை கழட்டிவிட்ட ஓட்டுநர், மிகவும் கெத்தாக ஒற்றைக் கையில் செல்போனைப் பிடித்தபடியும், மற்றொரு கையில் ஸ்டியரிங் வீலை பிடித்தபடியும் அவர் பயணித்தார். இதன் விளைவாகவே அவர் கடும் விபத்தில் சிக்கினார்.

இதுக்குதான் வண்டி ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாதுனு சொல்றாங்க... காவல்துறை வெளியிட்ட வைரல் வீடியோ!

இந்த விபத்தில் மூன்று பேருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்திருக்கின்றனர். இத்துடன் மக்கள் பயணங்களின்போது செல்போனை தவிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் விபத்துகுறித்த வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். விபத்தின் வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Texting Lorry Driver Crashes Into A Van Video. Read In Tamil.
Story first published: Thursday, July 29, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X