இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

'சூப்பர் உமன்' என்ற கேப்ஷனுடன் இணையத்தில் ஓர் வீடியோ வைரலாகி வருகின்றது. நெகிழ்ச்சி சம்பவம்குறித்து வைரலாகி வரும் வீடியோ பற்றிய சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் காணலாம்.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

உலகின் குறிப்பிட்ட சில நாடுகளில் பனி பொழிவு மிகக் கடுமையாக காணப்படுகின்றது. அந்தவகையில், அதிக பனி பொழிவால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடந்த சில நாட்களாக இந்நாட்டில் மிக அதிகளவில் பனி பொழிவு காணப்படுகின்றது. இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து மிக பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

அவ்வாறு, பனி பொழிவு அதிக உள்ள ஓர் சாலையில் பால் வாகனம் ஒன்று மிகவும் சிரமத்துடன் சென்றிருக்கின்றது. அந்த நேரத்தில் தனது மகள்களுடன் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் அந்த பிரமாண்ட உருவம் கொண்ட வாகனத்திற்கு உதவி செய்திருக்கின்றார். அவர் செய்த உதவிகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

இந்த வீடியோ வைரலானதை அடுத்து அப்பெண்ணுக்கு, பால் நிறுவனம் ஆண்டு முழுவதும் இலவச பால் விநியோகத்தை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த சுவாரஷ்யமான சம்பவம் பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறிப்பாக இந்த வீடியோ இங்கிலாந்து நாட்டு மக்களையும், நெட்டிசன்கள் மத்தியிலும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

பலர் அப்பெண்ணை 'சூப்பர் பெண்' என்றழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். இவரின் நிஜ பெயர் சர்லினா லெஸ்லி (33) ஆகும். இவர் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகின்றார். ரிஹானா மற்றும் ஹன்டர் எனும் இரு மகள்களுடன் வெளியே சென்றுக் கொண்டிருந்தபோதே மிக சிரமத்துடன் பயணித்தக் கொண்டிருந்த கிரஹாம் நிறுவனத்திற்கு சொந்தமான பால் ட்ரக்கிற்கு அவர் உதவியிருக்கின்றார்.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

சர்லினாவின் இச்செயலை அப்பகுதி வாசிகள் வியந்துபோய் பார்த்தனர். அவ்வாறு சம்பவத்தை வியந்து பார்த்த நபர்களில் ஒருவரே பெண்ணின் துணிச்சலான செயலை தனது செல்போனில் படமாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார். இவ்வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் 'சூப்பர் உமன்' வீடியோ... உன்னத செயலுக்காக ஒரு வருட இலவச பால் சேவை அறிவிப்பு!!

அவ்வாறு, வீடியோ வைரலானதை அடுத்தே பெண்ணின் வியத்தகு செயலைக் கண்டு ஒரு வருட இலவச பால் விநியோகத்தை கிரஹாம் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. பொதுவாகவே, சர்லினா பிறருக்கு உதவும் மனம் கொண்டவர் என கூறப்படுகின்றது. இவரின் முன்பாக யாரும் கஷ்டம் என வந்தால் அவருக்கு உடனடியாக உதவு வழக்கத்தை கொண்டிருக்கின்றார்.

இதனடிப்படையிலேயே அதிக சிரமத்தைச் சந்தித்தவாறு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவருக்கு அவர் உதவியிருக்கின்றார். அதேசமயம், "தான் சன்மானங்களை எதிர்நோக்கி எவருக்கும் உதவியைச் செய்வதில்லை. பிறருக்கு உதவுவது எனது இயல்பு" என செர்லினா கூறியிருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
The Woman Who Helped Drive The Milk Cart On The Icy Road. Here Is Viral Video. Read In Tamil.
Story first published: Wednesday, February 17, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X