காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க

காவல்நிலையத்தை நம்பி தனது காரை விட்டுட்டு சென்றவருக்கு மிகவும் சோகமான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

காவல்நிலையங்கள் சார்ந்து பல்வேறு முறைகேடுகள் அரங்கேறினாலும், இன்னும் பலரின் நம்பிக்கை நிலையமாக அவை இருக்கின்றன. தங்களுக்கான நியாமும், பாதுகாப்பும் இங்கு கிடைக்கும் என்பதை பலரும் நம்புகின்றனர். இதற்கேற்ப, பல காவல்நிலையங்கள் மனித நேயத்துடனும், மாண்புடனும் செயல்பட்டு வருவதை நம்மால் காண முடிகின்றது.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

இந்த நிலையில், காவல்நிலையத்தின் மீதிருந்த அதிகளவு நம்பிக்கையின் தனது காரை இரவில் விட்டு சென்றவருக்கு மறுநாள் பெருத்த அதிர்ச்சியான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. அதாவது, காவல்நிலையத்திற்கு மிக அருகில் (எதிர்புறத்தில்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து அலாய் சக்கரங்களும் திருடப்பட்டிருக்கின்றது.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

காவல்நிலையத்திற்கு மிக மிக அருகில் இத்திருட்டு சம்பவம் அரங்கேறியிருப்பதால் மக்கள் பலர் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். குறிப்பாக, கொள்ளையர்கள் அச்சமின்றி வலம் தொடங்கியிருக்கின்றனரோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

சமீப காலமாக வாகன திருட்டு, வாகனங்களின் பாகம் திருட்டு என்பது தலையோங்கிக் காணப்படுகின்றது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் வாகனங்களின் வீல் மற்றும் பிற முக்கிய கூறுகள் திருட்டு அதிகளவில் நடைபெற்று வந்தது. இந்த நிலையிலேயே மஹாராஷ்டிரா மாநிலத்தில் இந்த விநோத திருட்டு சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் வசித்து வருபவர் ரவிந்திர பகத்சந்த் (30). இவர் மாருதி சுசுகி செலிரியோ காரை பயன்படுத்தி வருகின்றார். கடந்த திங்கள் அன்று இவரது வீட்டில் சிறு விசேஷம் நடைபெற்றிருக்கின்றது. இதற்காக அவரது உறவினர்கள் பலர் அவரின் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்திருக்கின்றனர். அவர்களின் வாகனத்தை நிறுத்த போதிய இடம் இல்லாத காரணத்தினால், தனது காரை வெளியே வேறு பாதுகாப்பான இடத்தில் நிறுத்த நினைத்தார்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

இதற்காக அவர் தேர்வு செய்தது சிகாலி காவல்நிலையம். இந்த காவல்நிலையத்திற்கு சுமார் 50 மீட்டர் தள்ளி ஓர் சாலையோர பார்க்கிங் ஏரியாவில் தனது செலிரியோ காரை திங்கள் இரவு அன்று நிறுத்தியிருக்கின்றார். பாவம், அப்போது அவருக்கு தெரியாது, இங்கு பாதுகாப்பு மிக குறைவு என்று. மறு நாள் காலை காரை எடுக்கலாம் என திரும்பி வந்தபோதே அந்த அதிர்ச்சியான காட்சியை அவர் பார்த்திருக்கின்றார்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

காரில் வீல்கள் இருந்த இடங்களில் பெரிய கற்கள் நிற்பதைக் கண்டு அவர் அதிர்ந்துபோனார். உடனே அருகில் இருந்த காவல்நிலையத்தில் நடந்ததை விளக்கி, ஓர் புகார் மனுவையும் கொடுத்தார். அதிக விலைக் கொண்ட வீல்கள் திருட்டு போனதை வழக்காக பதிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

அதில், நான்க பேர் கொண்ட கும்பல் வெவ்வேறு வாகனங்களில் வந்து வீல்களை திருடிச் செல்வதைக் கண்டறிந்தனர். தற்போது அந்த அடையாளம் தெரியாத நபர்களை உருவத்தைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்கள், காரின் அலாய் வீலை மட்டுமின்றி பிரேக் காலிபர்கள் மற்றும் டிஸ்க்குகளையும் திருடிச் சென்றிருக்கின்றனர்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

இதில் காரில் பொருத்தப்பட்டிருந்த டயர்கள் மட்டுமே சுமார் 20 ஆயிரம் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதனைத்தொடர்ந்தே காரின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் ஐபிசி பிரிவு 379ன் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, இவ்வழக்கை மிக தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், மிக விரைவில் திருடர்களை பிடித்து விடுவோம் என போலீஸார் கூறியிருக்கின்றனர்.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

இதுபோன்ற சம்பவங்கள் வாகன உரிமையாளர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, பாதுகாப்பான பார்க்கிங் வசதி இல்லாத வாகன உரிமையாளர்களின் தூக்கத்தை இத்தொடர் திருட்டு சம்பவங்கள் கலைத்தே விட்டன. இதுபோன்ற அவல நிலைகளைத் தவிர்க்க முறையான பார்க்கிங் இடங்களை நாடுவதை தவிர வேறு வழியே இல்லை.

காவல்நிலையம் எதிரே அரங்கேறிய துணிகரம்! என்ன நடந்தது தெரிஞ்சா இனி வாகனத்தை அங்கு நம்பி விட்டுட்டு போக மாட்டீங்க!!

அதேசமயம், சிசிடிபி போன்ற செக்யூரிட்டி கேமிராக்கள் இருக்கும் பகுதிகளில் காரை நிறுத்தி வைப்பதன் மூலமும் நம்முடைய வாகனங்களைப் பாதுகாக்க முடியும். இருப்பினும், இதற்கும் உத்தரவாதம் இல்லை என்கின்றனர் வாகன ஆர்வலர்கள்.

Source: Pune Mirror

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Thieves Steal All Four Wheels & Tires Of The Car Parked In Front Of The Police Station. Read In Tamil.
Story first published: Friday, February 19, 2021, 10:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X