இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

கொரோனா வைரஸ் பரவலினால் நாம் அனைவரும் கிட்டத்தட்ட 1 வருடமாக வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கிறோம். இதற்கு முன் தினந்தோறும் ஒவ்வொரு ஊராக சுற்றி வந்தவர்களும் தற்போது வீட்டிற்குள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

வெளிநாடுகளிலும் இதே நிலை தான். ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தற்போதைய சூழலிலும் ஊர் சுற்ற வெவ்வேறு விதமான வழிகளை கண்டறிந்து வருகின்றனர். அவ்வாறு தேடுபவர்களின் அடுத்த இலக்காக மாறியிருப்பவை மோட்டார் வீடுகள்.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

குடும்பத்துடன் தொலைத்தூரமாக 1, 2 நாட்கள் சுற்றுலா செல்வதற்கு மோட்டார் வீடுகள் மிகவும் ஏற்றவையாகும். ஏனெனில் வீடு போன்ற கட்டமைப்பை நகர்த்தி கொண்டு செல்வதை போன்றதுதான் மோட்டார் வீடாகும்.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

ஆனால் மோட்டார் வீடுகள் வளர்ந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டினருக்கே காஸ்ட்லீயானதாக உள்ளது. அதனால்தான் நாம் நாட்டில் இவ்வாறான வாகனங்களை யாரும் உருவாக்குவது இல்லை. இப்படியிருக்க, மஞ்சள் நிற 1969 பீட்லே கார் ஒன்று மோட்டார் வீடாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

Image Courtesy: Mecum.com

மெக்கம் என்ற இணையத்தள ஏலத்தில் விற்கப்பட்டுள்ள இந்த மோட்டார் வீட்டிற்கு ஃபோக்ஸ்வேகன் சூப்பர் பக்கர் கேம்பர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பழமையான பீட்லே காரை இவ்வாறு மாற்றுவதற்கு 19,800 டாலர்கள் செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.14.5 லட்சமாகும். இந்த பணத்தில் நம்மூரில் ஒரு நிலத்தை வாங்கியே வீட்டை கட்டியிருக்கலாம். இந்த நகரும் வீடு ஒன்றும் இப்போது உருவாக்கபட்டது கிடையாது.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

கலிஃபோரினியாவை சேர்ந்த கம்பெனி ஒன்றின் மூலமாக இந்த பீட்லே காரின் உரிமையாளர் 1977ல் இந்த மோட்டார் வீட்டை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த நகரும் வீடு உட்புறத்தில் 1970, 80களின் ஸ்டைலில் உள்ளது.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

சுற்றிலும் சுவர்கள் மரப்பலகையால் எழுப்பப்பட்டுள்ளன. மேற்கூரையில் காற்று வசதிக்காக சில ஜன்னல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார் வீட்டிற்குள் சவுகரியமாக இருவர் தங்கலாம். உட்புறத்தில் கேஸ் அடுப்பு உள்ளிட்டவையும் உள்ளன.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

பழமையான வாகனம் என்பதால் பொழுது போக்கிற்கு பெரிய அளவில் எதுவுமில்லை. எஃப்.எம் ரேடியோ மட்டுமே உள்ளது. மற்றப்படி ஃபோக்ஸ்வேகன் பீட்லே காரில் அந்த சமயத்தில் வழங்கப்பட்ட 1.6 லிட்டர் என்ஜின் தான் இந்த நகரும் வீட்டை நகர்த்தி செல்கிறது.

இந்த பணத்தில் புது வீட்டையே கட்டியிருக்கலாமே!! ஏலத்தில் விற்கப்பட்ட ‘மோட்டார் வீடு’!

இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. பின்பக்க வீட்டின் கூடுதல் எடையை தாங்குவதற்காக சஸ்பென்ஷன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பின்பக்கத்தில் டயர்களும் நன்கு அகலமானவைகளாக பொருத்தப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
This $19,800 converted 1969 Volkswagen Beetle is the perfect mini camper.
Story first published: Thursday, May 20, 2021, 9:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X