செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

ரூ. 10,000 கோடியை மின்சார வாகனங்களுக்கான மானியத்திற்காக மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்திய அரசு ஃபேம் (Faster Adoption and Manufacturing of (Hybrid &) Electric Vehicles) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின்கீழ் புதிய மின் வாகனங்களை வாங்குவோர்க்கு மானியம் உட்பட பல்வேறு சிறப்பு சலுகைகளை அரசு வழங்கி வருகின்றது.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

இந்த நிலையில் ஃபேம் திட்டத்தின்கீழ் இன்னும் பல புதிய மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க இருப்பதாக தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கின்றார். இதுகுறித்து நேற்று (வியாழக்கிழை) பாராளுமன்றத்தில் பேசிய அமைச்சர், "62 ஆயிரம் பயணிகள் பேருந்து மற்றும் கார்களுக்கும், 15 லட்சம் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கும் மானியம் வழங்கப்பட இருக்கின்றது" என்று கூறினார்.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

மின்வாகன பயன்பாடு ஊக்குவிப்பு மட்டுமின்றி மின்சார சார்ஜிங் உள்கட்டமைப்பை உருவாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

இதற்காக (ஃபேம்2 திட்டத்திற்காக) ரூ. 10 கோடி பட்ஜெட்டை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். இம்முறை பொது மற்றும் பகிர்வு போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். இதன்படி, 7000 இ-பேருந்துகள், 5 லட்சம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 55,000 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 10 லட்சம் பேட்டரி இருசக்கர வாகனங்களுக்கு மானியம் மற்றும் பிற சிறப்பு சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

இதுதவிர, மின் வாகனங்களின் மீது விதிக்கப்பட்டு வரும் வரியைக் குறைக்கு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவாதக அமைச்சர் கூறியிருக்கின்றார். தற்போது 5 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகின்றது. இதனையே மின் வாகன ஊக்குவிப்பிற்காக மேலும் குறைக்க அரசு பரசீலித்து வருகின்றது.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

இதன் மூலம் மின் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உருவாகும். இத்துடன், மானியமும் கூடுதலாக வழங்குவதால் பெருமளவில் இதன் விலையைக் குறைக்க முடியும். ஆகையால், நிச்சயம் மக்கள் மத்தியில் மின் வாகனங்கள் பிரபலமடையும். இந்த நம்பிக்கையிலேயே அரசு மின் வாகனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றது.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

மின்சார வாகனம் எதுவாக இருந்தாலும் அதன் கிலோவாட் (KWh) அடிப்படையிலேயே ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி, ஒரு கிலோவாட்டிற்கு ரூ. 10 என வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. பசுமையான (மாசில்லா) இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசு இந்த சிறப்பு நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது.

செம்ம... பெட்ரோல்-டீசல் வாகனங்களை வாங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இந்த செய்திய கொஞ்சம் படிச்சிடுங்க!

இதுமட்டுமின்றி, காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்ட பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவை அதிகரிக்கச் செய்தல், பழைய (20 ஆண்டுகள் பழைய தனியார் மற்றும் 15 ஆண்டுகள் பழைய வர்த்தக) வாகனங்களையும் பயன்பாட்டில் இருந்து அடியோடு ஒழித்துக் கட்டும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
To Boost Electric Mobility Government Aims To Support Through Subsidies - Said Minister Nitin Gadkari. Read In Tamil.
Story first published: Friday, March 12, 2021, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X