முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு முன்னணி நிறுவனம் ஒன்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

ஜப்பானின் டோக்கியோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவின் குத்து சண்டை போட்டியில், இந்தியாவின் லவ்லினா போர்ஹோஹெயின் (Lovlina Borgohain) வெண்கல பதக்கம் வென்றார். இந்த சாதனைக்காக அவருக்கு தற்போது Renault India நிறுவனம் தனது Kiger காரை பரிசாக வழங்கி அசத்தியுள்ளது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

டோக்கியோ ஒலிம்பிக் குத்து சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற பிறகு, லவ்லினா போர்ஹோஹெயின் சமீபத்தில் வீடு திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது சாதனையை பாராட்டும் வகையில், Renault India நிறுவனம் Kiger காரை லவ்லினா போர்ஹோஹெயினுக்கு பரிசளித்துள்ளது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

Renault India நிறுவனத்தின் Sales & Marketing பிரிவின் துணை தலைவர் Sudhir Malhotra காரின் சாவியை லவ்லினா போர்ஹோஹெயினிடம் ஒப்படைத்தார். கவுஹாத்தி நகரில், லவ்லினா போர்ஹோஹெயின் Renault Kiger காரை டெலிவரி எடுத்து கொண்டார். இதுதான் தனது முதல் கார் என லவ்லினா போர்ஹோஹெயின் தெரிவித்துள்ளார்.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

எனவே இந்த பரிசு இன்னும் பல்வேறு சாதனைகளை படைப்பதற்கு அவருக்கு ஊக்கம் அளிக்கும் என நாம் நம்பலாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களிடம் லவ்லினா போர்ஹோஹெயின் ஒரு சில வார்த்தைகளை பேசினார். அப்போது தனக்கு கார் ஓட்ட தெரியும் என லவ்லினா போர்ஹோஹெயின் கூறினார்.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

ஆனால் கார் ஓட்டுவதற்கு அதிக நேரம் கிடைக்காத காரணத்தால், தனது டிரைவிங் திறன்களில் தனக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை எனவும் லவ்லினா போர்ஹோஹெயின் தெரிவித்தார். Renault Kiger இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் Sub-4 Meter Compact SUV ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

இந்த புத்தம் புதிய எஸ்யூவி காரில், தனது பெற்றோரை வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என விரும்புவதாக லவ்லினா போர்ஹோஹெயின் கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சாதித்த இந்தியர்களுக்கு Renault India நிறுவனம் Kiger காரை பரிசாக வழங்குவது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று அசத்தியிருந்தார். அவருக்கும் Renault India நிறுவனம் Kiger எஸ்யூவி காரை பரிசாக வழங்கியிருந்தது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் மீராபாய் சானுவிற்கு Renault Kiger கார் பரிசாக வழங்கப்பட்டது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

அதை தொடர்ந்து தற்போது லவ்லினா போர்ஹோஹெயினுக்கு Renault India நிறுவனம் Kiger எஸ்யூவி காரை பரிசாக வழங்கியுள்ளது. இந்திய சந்தையில் Maruti Suzuki Vitara Brezza, Toyota Urban Cruiser, Hyundai Venue, Kia Sonet, Tata Nexon, Mahindra XUV300, Ford EcoSport மற்றும் Nissan Magnite உள்ளிட்ட கார்களுடன் Renault Kiger போட்டியிட்டு வருகிறது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு தற்போது பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், கார்கள் முக்கியமானது. பல்வேறு நிறுவனங்கள் கார்களை பரிசாக வழங்குவதன் மூலம் சாதனை வீரர்களை கௌரவித்து வருகின்றன. முன்னதாக ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு Mahindra XUV700 பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

Mahindra குழுமத்தின் தலைவர் Anand Mahindra இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Mahindra XUV700 எஸ்யூவி கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் ஒரு சில வேரியண்ட்களுக்கான விலைகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனால் இன்னும் ஒரு சில வேரியண்ட்களுக்கான அதிகாரப்பூர்வ விலை இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.

முதல் முறையா கெடச்சிருக்கு... ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினாவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த முன்னணி நிறுவனம்!

Mahindra நிறுவனம் அதனை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள Mahindra XUV700 எஸ்யூவி காரின் உற்பத்தி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யும் பணிகளும் விரைவாக தொடங்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 21, 2021, 12:30 [IST]
English summary
Tokyo olympic bronze medallist lovlina borgohain gets renault kiger compact suv as a gift details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+