ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களை பற்றிய விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

கொரோனா வைரஸ் பரவலினால் கொண்டுவரப்பட்ட முழு ஊரடங்கினால் கடந்த 2020ஆம் ஆண்டில் சில மாதங்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி முற்றிலுமாக தடைப்பட்டு போனது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஆனால் தற்போது அத்தகைய சூழ்நிலை பெரிய அளவில் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 51,204 கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 34,257 கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த மாதத்தில் கார்கள் ஏற்றுமதி கிட்டத்தட்ட 50% அதிகரித்துள்ளது.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!
Rank Exports Model Aug-21 Aug-20 Growth (%)
1 Ford Ecosport 5,015 6,361 -21.16
2 Maruti Baleno 4,000 2,001 99.90
3 Hyundai Verna 3,761 2,806 34.03
4 Maruti S-Presso 3,274 2,399 36.47
5 Maruti Swift 3,051 1,329 129.57
6 Volkswagen Vento 2,954 1,808 63.38
7 Kia Seltos 2,626 3,592 -26.89
8 Maruti Dzire 2,606 389 569.92
9 Hyundai Grand i10 2,555 1,194 113.99
10 Maruti Vitara Brezza 2,452 102 2,304

2020 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, கடந்த மாதத்தில் பல கார் மாடல்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் 2020 ஆகஸ்ட்டை காட்டிலும் 21.16% குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் ஈக்கோஸ்போர்ட்டை பெரும்பான்மையாக வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவே இந்தியாவில் தயாரித்து வருகிறது. ஏனெனில் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி செய்தல் மற்ற நாடுகளை காட்டிலும் செலவு குறைவானது. இருப்பினும் போதிய விற்பனை இல்லாததால் இந்திய சந்தையை விட்டு வெளியேறவுள்ளதாக ஃபோர்டு சமீபத்தில் அறிவித்திருந்தது.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

இதனால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களின் ஏற்றுமதி வரும் மாதங்களில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 5,015 ஈக்கோஸ்போர்ட் கார்கள் வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதுவே 2020 ஆகஸ்ட்டில் 6,361 ஈக்கோஸ்போர்ட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

இந்தியாவில் கார்கள் ஏற்றுமதியில் மற்ற பிரபலமான, மலிவான கார்களை காட்டிலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடல் தான் கடந்த பல மாதங்களாக முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் ஃபோர்டின் இந்திய வெளியேற்றத்தால் இந்த நிலை நீண்ட காலத்திற்கு நீடிக்க போவதில்லை. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் மாருதியின் பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காரான பலேனோ உள்ளது.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

மாருதி பலேனோ கடந்த மாதத்தில் சரியாக 4 ஆயிரம் யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 ஆகஸ்ட்டில் 2,001 பலேனோ கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்படி பார்த்தோமேயானால், பலேனோ கார்களின் வெளிநாட்டு ஏற்றுமதி சுமார் 99.90% அதிகரித்துள்ளது. மூன்றாவது இடத்தை 3,761 யூனிட்கள் ஏற்றுமதி உடன் ஹூண்டாய் வெர்னா பிடித்துள்ளது.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

ஹூண்டாயின் செடான் மாடலான வெர்னா கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட்டில் 2,806 யூனிட்களே விற்கப்பட்டு இருந்தது. இந்த வகையில் இந்த ஹூண்டாய் செடான் காரின் ஏற்றுமதி 34.03% உயர்ந்துள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் மாருதி சுஸுகி கார்களான எஸ்-பிரெஸ்ஸோ (3,274) மற்றும் இந்தியாவின் சிறந்த விற்பனை கார்களுள் ஒன்றான ஸ்விஃப்ட் (3,051) உள்ளன.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

இதில் குறிப்பாக ஸ்விஃப்ட்டின் ஏற்றுமதி எண்ணிக்கை சுமார் 129.57% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு அடுத்துள்ள கார்கள் 3 ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்களே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி 2,954 யூனிட்களின் ஏற்றுமதி உடன் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ ஆறாவது இடத்திலும், கியா செல்டோஸ் 2,626 யூனிட்களின் ஏற்றுமதி உடன் ஏழாவது இடத்திலும் உள்ளன.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

இதில் கியா செல்டோஸ் எஸ்யூவி கார் 2020 ஆகஸ்ட் மாதத்தில் 3,592 யூனிட்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில், முன்னணி நிறுவனத்தின் காரின் ஏற்றுமதி குறைந்துள்ளது என்றால், அது கியா செல்டோஸ் உடையதுதான்.

ஏற்றுமதியில் முதலிடத்தில் நீடிக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்!! இரண்டாவது இடத்தில் மாருதி பலேனோ!

நமக்கு கிடைத்துள்ள இந்த விபரங்களின்படி பார்க்கும்போது, பெரும்பாலான மாருதி கார்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும் கடந்த ஆகஸ்ட்டில் அதிக எண்ணிக்கைகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு 8வது இடத்தில் உள்ள மாருதி டிசைர். 2020 ஆகஸ்ட்டில் வெறும் 389 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த இந்த மாருதி கார் கடந்த ஆகஸ்ட்டில் 2,606 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 19, 2021, 8:30 [IST]
English summary
Top 10 Car Exports Aug 2021 – EcoSport No 1, Brezza At No 10.
மேலும்... #ஏற்றுமதி #export
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+