நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

கடந்த நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்தியாவில் இருந்து கடந்த நவம்பர் மாதம் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,243 டிசையர் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 5,856 ஆக உயர்ந்துள்ளது. இது 371.12 சதவீத வளர்ச்சியாகும்.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 898 ஸ்விஃப்ட் கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 3,623 ஆக உயர்ந்துள்ளது. இது 303.45 சதவீத வளர்ச்சியாகும்.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,527 ஆக இருந்த மாருதி சுஸுகி பலேனோ காரின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 3,359 ஆக உயர்ந்துள்ளது. இது 32.92 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,910 ஆக இருந்த இந்த காரின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,472 ஆக குறைந்துள்ளது. இது 15.05 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமான காராக ஹூண்டாய் கிரெட்டா திகழ்கிறது.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை நிஸான் சன்னி பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,265 ஆக இருந்த இந்த காரின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,379 ஆக உயர்ந்துள்ளது. இது 5.03 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் வெர்னா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,698 ஆக இருந்த இந்த காரின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,374 ஆக குறைந்துள்ளது. இது 12.01 சதவீத வீழ்ச்சியாகும்.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

இந்த பட்டியலில் கியா செல்டோஸ் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,184 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் ஏற்றுமதி எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,308 ஆக உயர்ந்துள்ளது. இது 5.68 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 எட்டாவது இடத்தை பிடித்துள்ளது.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,269 ஆக இருந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பர் மாதம் 2,202 ஆக குறைந்துள்ளது. இது 2.95 சதவீத சரிவாகும். இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 305 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி ஏற்றுமதி செய்திருந்தது.

நவம்பர் மாதம் இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள்... முதலிடத்தில் இருப்பது எது தெரியுமா?

நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,825 ஆக உயர்ந்துள்ளது. இது 498.36 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை மாருதி சுஸுகி ஆல்டோ பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 845 ஆல்டோ கார்களை ஏற்றுமதி செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு நவம்பரில் 1,700 ஆக உயர்ந்துள்ளது. இது 101.18 சதவீத வளர்ச்சியாகும்.

Most Read Articles

English summary
Top 10 car exports november 2021 maruti suzuki dzire leads chart
Story first published: Sunday, December 19, 2021, 8:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X