ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரிய வந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

கியா சொனெட், நிஸான் மேக்னைட், ரெனால்ட் கிகர் போன்ற புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் கடந்த ஒரு வருடத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் காம்பெக்ட் எஸ்யூவி காராக கடந்த மாதத்திலும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா தான் தொடர்ந்துள்ளது.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொத்தமாக 12,906 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2020 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் சுமார் 87 சதவீதம் அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 6,903 விட்டாரா பிரெஸ்ஸா கார்களையே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது
Rank Model Aug-21 Aug-20 Growth (%)
1 Maruti Vitara Brezza 12,906 6,903 87
2 Tata Nexon 10,006 5,179 93
3 Hyundai Venue 8,377 8,267 1
4 Kia Sonet 7,752 - -
5 Mahindra XUV300 5,861 2,990 96
6 Nissan Magnite 2,984 - -
7 Renault Kiger 2,669 - -
8 Toyota Urban Cruiser 2,654 - -
9 Honda WR-V 672 729 -8
10 Ford Ecosport 396 2,757 -86

விட்டாரா பிரெஸ்ஸா மட்டுமின்றி பல காம்பெக்ட் எஸ்யூவி கார்களின் விற்பனை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2020 ஆகஸ்ட் மாதத்தில் சற்று குறைவாகவே இருந்துள்ளது. இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் நம் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் வகையில் டாடா நெக்ஸான் உள்ளது.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெக்ஸானின் விற்பனை ஒருவழியாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆனால் 2020 ஆகஸ்ட்டில் வெறும் 5,179 நெக்ஸான் கார்களையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை சுமார் 93% உயர்ந்துள்ளது.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

மூன்றாவது இடத்தை 8,377 யூனிட்களின் விற்பனை உடன் ஹூண்டாய் வென்யூ பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான வென்யூ கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆண்டு இறுதியில் கியா பிராண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட சொனெட் இந்த வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

கடந்த மாதத்தில் 7,752 சொனெட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஐந்தாவது இடத்தில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி300-இன் விற்பனை 2020 ஆகஸ்ட்டை காட்டிலும் கிட்டத்தட்ட 96% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் 2,990 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த எக்ஸ்யூவி300 கார் கடந்த மாதத்தில் 5,861 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

ஏற்கனவே கூறியதுபோல், கடந்த 1 வருடத்தில் இந்திய சந்தையில் புதியதாக களமிறக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்களான நிஸான் மேக்னைட், ரெனால்ட் கிகர் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் உள்ளிட்டவை முறையே 6வது, 7வது மற்றும் 8வது இடங்களை பெற்றுள்ளன. இவை மூன்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை முறையே 2984, 2669 மற்றும் 2,654 ஆகும்.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

மூன்றிற்கும் இடையே பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லாததை பார்க்க முடிகிறது. ரெனால்ட் கிகர், நிஸான் மேக்னைட் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 1.0 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் & 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தேர்வுகள், மேனுவல் & ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்பட்டுள்ளன. டொயோட்டா அர்பன் க்ரூஸர் என்பது மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ்டு வெர்சன் ஆகும்.

ஒரே மாதத்தில் 10 ஆயிரம் டாடா நெக்ஸான் கார்கள் விற்பனை!! ஹூண்டாய் வென்யூவை எளிதாக முந்தியது

இதுவே இந்த டொயோட்டா காம்பெக்ட் எஸ்யூவி காரின் விற்பனை நம் நாட்டில் பெரிய அளவில் எடுப்படாததற்கு காரணமாகும். இதற்கடுத்து இந்த லிஸ்ட்டில் உள்ள கார்கள் 1000 யூனிட்கள் கூட விற்பனையாகவில்லை. ஒன்பதாவது இடத்தில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி வழக்கம்போல் 672 என 500- 1000க்கு இடையேயான விற்பனை எண்ணிக்கையையே பதிவு செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 8, 2021, 12:09 [IST]
English summary
Top 10 Compact SUVs In August, Brezza In Top.
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+