கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 3,212 கிரெட்டா எஸ்யூவிக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 7,527 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இதன் மூலம் 134.3 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 597 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 7,005 ஆக உயர்ந்துள்ளது. இது 1,073.4 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை கியா சொனெட் பிடித்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் 6,627 சொனெட் காம்பேக்ட் எஸ்யூவிக்களை கியா விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார் ஆகும். எனவே கடந்த ஆண்டு மே மாதத்துடன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி பிடித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் 623 ஆக இருந்த டாடா நெக்ஸான் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 6,439 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 933.5 சதவீத வளர்ச்சியை டாடா நெக்ஸான் பதிவு செய்து அசத்தியுள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இங்கே நாம் காணும் பெரும்பாலான கார்கள் கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. உண்மையில் நடப்பாண்டு மே மாதம் கார்களின் விற்பனை குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்தாண்டு மே மாதம் கொரோனா பிரச்னையில் தீவிரம் காரணமாக கார் விற்பனை இதை காட்டிலும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இதன் காரணமாக நடப்பாண்டு மே மாதம் பிரம்மாண்ட வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் 5வது இடத்தை மாருதி சுஸுகி டிசையர் பிடித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் 2,215 ஆக இருந்த டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 5,819 ஆக குறைந்துள்ளது. இது 162.7 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்த பட்டியலில் 6வது இடத்தை ஹூண்டாய் வெனியூ பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 1,242 ஆக இருந்த இந்த காம்பேக்ட் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 4,840 ஆக உயர்ந்துள்ளது. இது 289.7 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 7வது இடத்தை மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

கடந்த ஆண்டு மே மாதம் 1,587 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 4,803 ஆக உயர்ந்துள்ளது. இது 202.6 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் 165.5 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் கியா செல்டோஸ் 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 1,611 ஆக இருந்த கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை எண்ணிக்கை 4,277 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

இந்த பட்டியலில் 429.8 சதவீத வளர்ச்சியுடன் 9வது இடத்தை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் பிடித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம் வெறும் 718 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 3,804 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை மஹிந்திரா பொலிரோ பிடித்துள்ளது.

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார் எதுன்னு தெரியுமா? மாருதி தயாரிப்பு கிடையாது...

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் 1,715 பொலிரோ கார்களை மஹிந்திரா விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 3,517 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 105.1 சதவீத வளர்ச்சியை மஹிந்திரா பொலிரோ பதிவு செய்துள்ளது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால், வரும் நாட்களில் கார் விற்பனை படிப்படியாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Top 10 Most Sold Cars In May 2021 - Hyundai Creta Tops The List. Read in Tamil
Story first published: Wednesday, June 2, 2021, 22:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X