மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

கடந்த மே மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 காம்பேக்ட் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கியா சொனெட் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த மூன்றாவது தயாரிப்பு இதுவாகும். முன்னதாக செல்டோஸ், கார்னிவல் ஆகிய கார்களை கியா விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

கடந்த மே மாதம் கியா நிறுவனம் 6,627 சொனெட் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 7,724 ஆக இருந்தது. விற்பனையில் 14 சதவீத வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, முதல் இடத்தை பிடித்து கியா சொனெட் அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை டாடா நெக்ஸான் பிடித்துள்ளது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில், முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா கார் இதுவாகும். இதன் காரணமாக டாடா நெக்ஸான் வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. கடந்த மே மாதம் டாடா நிறுவனம் 6,439 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

ஆனால் அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் டாடா நிறுவனம் 6,938 நெக்ஸான் கார்களை விற்பனை செய்திருந்தது. இது 7 சதவீத வீழ்ச்சியாகும். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த மே மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையான இருந்தன. இதன் காரணமாக இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து கார்களும் விற்பனையில் வீழ்ச்சியைதான் சந்தித்துள்ளன.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் வெனியூ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக வெனியூ உள்ளது. கடந்த மே மாதம் ஹூண்டாய் நிறுவனம் 4,840 வெனியூ கார்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரலில் இந்த எண்ணிக்கை 11,245 ஆக இருந்தது. இது 57 சதவீத வீழ்ச்சியாகும்.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா கார் பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மே மாதம் வெறும் 2,648 விட்டாரா பிரெஸ்ஸா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 11,220 ஆக இருந்தது. இது 76 சதவீத வீழ்ச்சியாகும்.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை ரெனால்ட் கைகர் பிடித்துள்ளது. இது இந்த செக்மெண்ட்டிற்கு புது வரவாகும். கடந்த ஏப்ரலில் 2,800 ஆக இருந்த இதன் விற்பனை எண்ணிக்கை மே மாதத்தில் 1,326 ஆக குறைந்துள்ளது. இது 53 சதவீத வீழ்ச்சியாகும். இதற்கு அடுத்த 6வது இடத்தை நிஸான் மேக்னைட் பிடித்துள்ளது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

நிஸான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் ஆகிய இரண்டு கார்களும் பல்வேறு அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரல் மாதம் 2,904 ஆக இருந்த நிஸான் மேக்னைட் காரின் விற்பனை எண்ணிக்கை மே மாதத்தில் வெறும் 1,200 ஆக குறைந்துள்ளது. இது 59 சதவீத வீழ்ச்சியாகும்.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இந்த பட்டியலில் 7வது இடத்தை ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 3,820 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை கடந்த மே மாதம் வெறும் 503 ஆக குறைந்துள்ளது. இது 87 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டொயோட்டா அர்பன் க்ரூஸ்ர் 8வது இடத்தை பிடித்துள்ளது. சுஸுகி மற்றும் டொயோட்டா ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இந்த கூட்டணி அடிப்படையில் இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீபேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்தான் டொயோட்டா அர்பன் க்ரூஸர். விட்டாரா பிரெஸ்ஸா காரில் சில மாற்றங்களை செய்து டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்கிறது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

கடந்த ஏப்ரல் மாதம் டொயோட்டா நிறுவனம் 2,115 அர்பன் க்ரூஸர் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், கடந்த மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 373 ஆக குறைந்துள்ளது. இது 82 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 9வது இடத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி300 பிடித்துள்ளது. தற்போதைய நிலையில் மேட் இன் இந்தியா கார்களிலேயே இதுதான் மிகவும் பாதுகாப்பானது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

இதுவரை 3 மேட் இன் இந்தியா கார்கள் மட்டுமே க்ளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன. டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகியவைதான் அந்த 3 கார்கள். இதில், மற்ற இரண்டு கார்களை விடவும், மஹிந்திரா எக்ஸ்யூவி300 அதிக பாதுகாப்பு புள்ளிகளை பெற்றுள்ளது.

மக்கள் எந்த காம்பேக்ட் எஸ்யூவி காரை அதிகம் லைக் பண்றாங்க தெரியுமா? மே மாத சேல்ஸ் ரிப்போர்ட்...

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 4,144 எக்ஸ்யூவி300 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 251 ஆக குறைந்துள்ளது. இது 94 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஹோண்டா டபிள்யூஆர்-வி பிடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 1,194 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை மே மாதம் 192 ஆக குறைந்துள்ளது. இது 84 சதவீத வீழ்ச்சியாகும்.

Most Read Articles
English summary
Top 10 Most Sold Compact SUVs In May 2021 – Kia Sonet Tops The List. Read in Tamil
Story first published: Friday, June 4, 2021, 22:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X