எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

டாடா பன்ச் கார் எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் வெனியூ முதலிடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 8,828 வெனியூ கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது 10,554 ஆக உயர்ந்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இதன் மூலம் 19.5 சதவீத வளர்ச்சியுடன், கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 எஸ்யூவி கார்களின் பட்டியலில் ஹூண்டாய் வெனியூ முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கியா செல்டோஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8,900 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 10,448 ஆக உயர்ந்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இது 17.8 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெறும் 6,888 நெக்ஸான் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 10,096 ஆக உயர்ந்துள்ளது. இது 46.5 சதவீத வளர்ச்சியாகும்.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள எஸ்யூவி கார்களில் மிக அதிக விற்பனை வளர்ச்சியை பெற்ற கார் என்ற பெருமை டாடா நெக்ஸானை சேரும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமை டாடா நெக்ஸானுக்கு உள்ளது. இதன் காரணமாகவே டாடா நெக்ஸான் காரின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இந்த பட்டியலில் டாடா பன்ச் கார் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டாடா பன்ச் கார் கடந்த அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்டுள்ள டாடா பன்ச், கடந்த அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்களின் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

கடந்த அக்டோபர் மாதம் டாடா நிறுவனம் 8,453 பன்ச் கார்களை விற்பனை செய்துள்ளது. முதல் மாதத்திலேயே இவ்வளவு அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மிக சிறப்பான விஷயம். டாடா நெக்ஸான் காரை போலவே, டாடா பன்ச் காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

அத்துடன் மிகவும் குறைவான விலையில் டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது (ஆரம்ப விலை 5.49 லட்ச ரூபாய்). இதன் காரணமாக வரும் மாதங்களில் டாடா பன்ச் காரின் விற்பனை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12,087 ஆக இருந்த மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபர் மாதம் 8,032 ஆக உயர்ந்துள்ளது. இது 33.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹூண்டாய் நிறுவனம் 14,023 கிரெட்டா கார்களை விற்பனை செய்திருந்தது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் வெறும் 6,455 ஆக குறைந்துள்ளது. இது 53.9 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் கியா சொனெட் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 11,721 ஆக இருந்த கியா சொனெட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு அக்டோபரில் 5,443 ஆக குறைந்துள்ளது. இது 53.5 சதவீத வீழ்ச்சியாகும்.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் 4,882 ஆக இருந்த எக்ஸ்யூவி300 காரின் விற்பனை நடப்பாண்டு அக்டோபரில் 4,203 ஆக குறைந்துள்ளது. இது 13.9 சதவீத வீழ்ச்சியாகும். மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

ஆனால் இதன் விற்பனை இன்னும் பெரிய அளவில் உயரவில்லை. இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. நடப்பாண்டு அக்டோபரில் மஹிந்திரா நிறுவனம் 3,407 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

இந்த காருக்கு ஏற்கனவே 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. எனவே வரும் மாதங்களில் மஹிந்திரா டெலிவரி செய்யும் எண்ணிக்கையை பொறுத்து, இதன் விற்பனை எண்ணிக்கை உயரலாம். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை நிஸான் மேக்னைட் பிடித்துள்ளது. நடப்பாண்டு அக்டோபரில் நிஸான் நிறுவனம் 3,389 மேக்னைட் கார்களை விற்பனை செய்துள்ளது.

எடுத்த எடுப்பிலேயே டாப் கியரை போட்ட Tata Punch... குறைவான விலை, 5 ஸ்டார் ரேட்டிங்... வேற என்னங்க வேணும்?

நிஸான் மேக்னைட் கார் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை நடப்பாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட முடியாது. தற்போது பண்டிகை காலம் என்பதால், நடப்பு நவம்பர் மாதத்தில் கார்களின் விற்பனை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் செமி கண்டக்டர் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது.

Most Read Articles

English summary
Top 10 suv s in october 2021 hyundai venue leads chart
Story first published: Tuesday, November 2, 2021, 23:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X