எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

கடந்த ஜூன் மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள், விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

கொரோனா இரண்டாவது அலையால் கடந்த மே மாதத்தில் பெரிய அளவில் வாகன விற்பனை இந்தியாவில் சரிந்திருந்தது. ஆனால் 2021 ஜூன் மாத விற்பனை எண்ணிக்கைகள் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மிக பெரிய ஆறுதலாக அமைத்திருக்கும்.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

குறிப்பாக கடந்த மாதத்தில் கார்களின் விற்பனை பல நிறுவனங்களுக்கு தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்ற உந்துக்கோலாக அமைந்துள்ளது. ஏனெனில் பெரும்பாலான கார்கள் முந்தைய 2021 மே மாதத்தை காட்டிலும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

இந்த வகையில் இந்திய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களின் விற்பனை மீண்டும் பலம் பெற்றுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட நடுத்தர அளவு எஸ்யூவி காராக மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா முதலிடத்தில் உள்ளது.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

கடந்த மாதத்தில் மொத்தம் 12,833 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 ஜூன் மாதத்தில் வெறும் 4,542 விட்டாரா பிரெஸ்ஸா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

Rank Model June 2021 June 2020 Growth (%)
1 Maruti Vitara Brezza 12,833 4,542 182.5
2 Hyundai Creta 9,941 7,207 37.9
3 Kia Seltos 8,549 7,114 20
4 Tata Nexon 8,033 3,040 164
5 Kia Sonet 5,963 - -
6 Hyundai Venue 4,865 4,129 17.8
7 Mahindra XUV 300 4,615 1,812 154.6
8 Mahindra Scorpio 4,160 2,574 61.6
9 Ford Ecosport 3,511 1,212 189.6
10 Nissan Magnite 3,252 - -
எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்தியாவில் விட்டாரா பிரெஸ்ஸா கார்களின் விற்பனை சுமார் 182.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தை போல் 2020 ஜூன் மாதத்திலும் நீண்ட ஊரடங்கு உத்தரவுகளுக்கு பிறகு நிலைமை மெல்ல மெல்ல சீராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா 9,941 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் உள்ளது. 2020 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து புதிய தலைமுறை க்ரெட்டா தான் சிறந்த விற்பனை நடுத்தர-அளவு எஸ்யூவி காராக விளங்கி வந்தது.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

ஆனால் கடந்த மாதத்தில் க்ரெட்டா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மற்ற கார்களின் விற்பனை வெகுவாக குறைந்திருந்த 2020 ஜூன் மாதத்திலும் 7,207 யூனிட்கள் விற்பனையாகி இருந்த க்ரெட்டாவை பொறுத்தவரையில், 9,941 என்பது சற்று குறைவாகும்.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

மூன்றாவது இடத்தில் கியா செல்டோஸ் மாடல் உள்ளது. கடந்த மாதத்தில் 8,549 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள செல்டோஸும், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்கப்பட்டு இருந்தது. ஆனால் க்ரெட்டாவிற்கு அடுத்து தான் இருந்தது.

எஸ்யூவி விற்பனையில் மீண்டும் முதலிட அரியணையில் ஏறிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா!! 2வது இடத்தில் க்ரெட்டா!

கடந்த மாதத்தில் 8,033 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு நான்காவது இடத்தில் உள்ள டாடா நெக்ஸானின் விற்பனை 2020 ஜூன் மாதத்தை காட்டிலும் 164% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தான் கியா நிறுவனத்தில் இருந்து அறிமுகமான சொனெட் 5,963 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Top 10 SUVs Sold In June 2021, All Details In Tamil. Check Out Table.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X