ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

ரொம்ப நாட்கள் காரை நிறுத்து போறீங்கனா என்ன செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பது பற்றிய தகவலை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

கோவிட்-19 வைரஸ் பரவலின் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கி எடுக்கத் தொடங்கி உள்ளது. தொற்று பரவும் விகிதம் மற்றும் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு புதிய உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கின்றது. அதிலும், சமீபகாலமாக பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் உயர்ந்த வண்ணம் இருக்கின்றது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இதனால், வைரஸ் பரவல் அதிகம் உள்ள மாநிலங்கள் தங்களை பூட்டுதலுக்கு ஆளாக்கி வருகின்றன. அதாவது, மீண்டும் முழு முடக்கத்தை செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் எப்போதும் வேண்டுமானாலும் இதுமாதிரியான அறிவிப்பு வெளியாகலாம் என்ற சூழ்நிலையே தென்படுகின்றது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இந்த மாதிரியான நேரத்தில் வாகனங்களை எப்போது பத்திரமாக பாதுகாப்பது என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு எழும்புகின்றது. ஏதோ ஒரு நாள், ரெண்டு நாள் வாகனங்கள் இயங்காமல் இருக்கும்போது எந்த பிரச்னையும் ஏற்படாது. ஆனால், வாரக் கணக்கில் வாகனங்கள் நிற்க போகிறதென்றால் சில விஷயங்களை நிச்சயம் நாம் கவனித்தாக வேண்டும். அது என்ன என்பது பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

ஹேண்ட் பிரேக் வேண்டாம்

நாள்பட்ட நிறுத்தத்தின்போது ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த வேண்டாம். நீண்ட நாட்கள் பிரேக் பேட்கள் இருக்கமாக பற்றிக் கொண்டிருந்தால் அது அப்படியே ஸ்ட்ரக் ஆக வாய்ப்புகள் உண்டு. ஆகையால், வெகு நாட்கள் கழித்து மீண்டும் காரை வெளியே எடுக்கும்போது நகர்த்தவே முடியாத நிலைக்கு தள்ளப்படலாம்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இதற்கு பதிலாக கார் உருண்டு செல்வதைத் தவிர்க்க பிற லாக்குகளைப் பயன்படுத்துவது சிறந்தது. அல்லது முதல் கியரை பயன்படுத்தலாம் என்றும் வாகன வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

பார்க்கிங்

வெயில் மற்றும் மழை ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து காரை காப்பது முக்கியமான ஒன்று. ஆகையால், பாதுகாப்பான பார்க்கிங் கட்டிடத்தில் காரை நிறுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக, வெகு நாட்களுக்கு காரை எடுக்கப்போவதில்லை என அறிந்த பின்னர் வாகனங்களை கவர் கொண்டு முழுமையாக போர்த்துவது மிக சிறந்தது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இது தேவையற்ற பொலிவு இழப்பை தவிர்க்க உதவும். குறிப்பாக, தூசி மற்றும் பிற சேதங்களில் இருந்து காக்க இந்த செயல்முறை உதவும். நல்ல பார்க்கிங் வசதி இல்லாதவர்கள் நல்ல கவரை தேர்வு செய்து மூடுவதே மிக சிறந்தது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

சுத்தம் செய்ய வேண்டும்

நீண்ட நாட்கள் வாகனங்களை எடுக்கப் போவதில்லை என அறிந்த பின்னர் காரின் உட்பகுதியை சுத்தம் செய்வது மிக மிக சிறந்தது. குறிப்பாக, உணவு துகள்கள், உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அனைத்தையும் காரில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

வீணடிக்க உணவுப் பொருட்கள் காருக்குள் விஷ ஜந்துக்களை குடியேற வழி வகுக்கும். இதுமட்டுமின்றி, காரின் உட்பகுதி உணவு கழிவுகள் துர்நாற்றம் அடிக்கச் செய்து விடும். ஆகையால், காரை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் முன்னர் முழுமையாக சுத்தம் செய்துவிடுவது மிக மிக சிறந்தது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

பெட்ரோல் டேங்கை நிரப்பவும்

வாகனங்களை நீண்ட நாட்கள் நிறுத்து முன் பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பிக் கொள்ள வேண்டும். ஏனெனில், குறைவான அளவில் எரிபொருள் இருக்கும்போது ப்யூவல் டேங்கிற்குள் ஈரப்பதம் உருவாகும். இது எரிபொருள் சேமிப்பு தொட்டி துரு பிடிக்க வைக்கும். இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் டேங்கை நிரப்புவது நல்லது. மேலும், எரிபொருள் தொட்டி நன்றாக மூடியிருக்கின்றதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

பேட்டரி பராமரிப்பு

வாகனத்தை வெளியே எடுத்து செல்ல முடியவில்லை என்றாலும் அவற்றை அவ்வப்போது ஸ்டார்ட் செய்து கொஞ்சம் நேரம் எஞ்ஜினை ரன் செய்ய வேண்டும். இதன் மூலம் பேட்டரியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். ஏனெனில், கார்களைப் பொருத்தவரை பேட்டரி எப்போதுமே இயங்கு நிலையில் இருத்தல் அவசியம். இது இல்லை என்றால் காரை ஸ்டார்ட் செய்வதே மிக கடினமாகிவிடும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

குறிப்பாக, பேட்டரியில் மின் முனைக் கம்பிகள் இணைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கிரீஸ் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை தடவி விட வேண்டும். இது துருப்பிடித்தலை தவிர்க்க உதவும். இந்த செயல்கள் பேட்டரியை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

பெயிண்ட் பூச்சு பாதுகாப்பு

காரை பாதுகாப்பாக நிறுத்த எந்தவொரு வசதியும் இல்லை என நினைப்பவர்கள், நிச்சயம் நீண்ட நாட்கள் காரை நிறுத்தும் முன் அதன் பெயிண்டை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். அதாவது, பாலிஷ் அல்லது மெழுகு கோட் செய்து பெயிண்டிற்கான பாதுகாப்பு கவசத்தை உருவாக்க வேண்டும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இவ்வாறு செய்வதன் மூலம் தூசி படிவு அல்லது அதிக வெயில் அல்லது வெயில் ஆகியவற்றில் இருந்து காரின் பொலிவு மற்றும் பெயிண்டைப் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

டயர்

டயர்களில் காற்றழுத்தம் சீரான அளவில் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சீரான அழுத்தத்தில் காற்றை வைத்திருப்பதன் மூலம் தேவையற்ற டயர் சிதைவுகளை ஏற்படாமல் தடுக்க முடியும். நீண்ட நாட்கள் வாகனம் ஒரே குறைந்த காற்றில் நிற்கும்போது டயரின் பக்கவாட்டு சுவர் வெடிப்படைய நேரிடும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

இதனை தவிர்க்க வேண்டுமானால் காற்று முழுமையாக இருத்தல் அவசியம். இத்துடன், டயரில் வால்வு இருக்கமாக மூடப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இது லேசாக இருந்தால் காற்றிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகையால், நீண்டா நாட்கள் காரை நிறுத்தும் முன்பு காற்றை நிரப்பி விட்டு நிறுத்துங்கள். காரை நிறுத்த தானே போறோம் எதுக்கு காற்றை நிரப்பிவிட்டு என்று எண்ண வேண்டாம்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

அனைத்து ஆவணங்கள் மற்றும் மின்சாதன பொருட்களையும் வெளியேற்றவும்

பாதிவு சான்றிதழ், காப்பீடு மற்றும் பியூசி உள்ளிட்ட சான்றிதழ்களை வாகனங்களில் இருந்து வெளியேற்றி விட வேண்டும். இதுதவிர, மின்சாதன பொருட்கள் ஏதேனும் காருக்குள் வைக்கப்பட்டிருக்குமானால் அதனையும் வெளியேற்ற வேண்டும். இது வாகனத்தின் பாதுகாப்பிற்கு மிக உதவியாக இருக்கும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

அனைத்தையும் செய்து முடித்த பின் கவனிக்க வேண்டியவை

எல்லாம் செய்துவிட்டாச்சு இப்போ கிளம்பலாம் என புறப்படும் முன் மேலே கூறப்பட்ட அனைத்தையும் சரியாக செய்திருக்கின்றோமா என்பதை ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, காருக்குள் அனைத்து ஸ்விட்சுகள் அனைத்து வைக்கப்பட்டிருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கின்றதா என்பதையம் ஒரு முறை ஆராய வேண்டும்.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

அடிக்கடி வந்து பாத்துட்டு போங்க

நீண்ட நாட்கள் கார் நிறுத்தியே இருக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கும்போது நாம் எப்போது வாகனத்தை வெளியே எடுப்போம் என்று தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. அந்த மாதிரியான நேரத்தில் நேரம் கிடைக்கும்போது வாகனத்தை ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்வது மிகி சிறந்தது. குறிப்பாக, காரின் இயக்க நிலையை பரிசோதித்து பார்த்துவிட்டு செல்வது மிக சிறந்தது.

ரொம்ப நாட்கள் காரை நிறுத்த போறீங்களா? அப்போ நிச்சயம் இதை எல்லாம் செஞ்சிடுங்க... எந்த பிரச்னையும் ஏற்படாது!!

குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு பின்னர் வாகனத்தை கையாளும்போது முக மூடி அல்லது கவசம் அணிந்து வாகனத்தை முதலில் சுத்தப்படுத்த வேண்டும். இதன் பின்னரே நீங்கள் வாகனத்திற்குள் நுழைய வேண்டும். இவ்வாறு செய்யும்போது தேவையற்றை டஸ்ட் அலர்ஜியை நம்மால் தவிர்க்க முடியும்.

Most Read Articles

English summary
Top 10 Tips For Store Your Car Safely During Covid-19 LockDown & Curfew. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X