எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

ஹூண்டாய் கார்களை இந்தியர்கள் அளவு கடந்து நேசிப்பதற்கு என்ன காரணம்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

இந்திய சந்தையில் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ஹூண்டாய். ஒவ்வொரு மாதமும் இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுஸுகிக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் 2வது இடத்தை பிடித்து வருகிறது.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களை இந்தியர்கள் இந்த அளவிற்கு விரும்புவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமான காரணங்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் காரை வாங்குவதாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

எக்கச்சக்கமான வசதிகள்

ஹூண்டாய் கார் வைத்துள்ள யாரிடமாவது, உங்கள் காரில் உள்ள வசதிகள் பற்றி சொல்லுங்கள் என கேட்டு பாருங்கள். நிச்சயமாக ஒரே மூச்சில் அவரால் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களில் வசதிகளை வாரி வழங்கி வருகிறது. செக்மெண்ட் ஃபர்ஸ்ட் வசதிகளை வழங்குவதில் ஹூண்டாய் எப்போதும் கில்லிதான்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

உதாரணத்திற்கு ஹூண்டாய் கிரெட்டாவை எடுத்து கொள்ளலாம். இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்யூவி கார்களில் ஒன்றாகும். இந்த காரில், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியுடன் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், போஸ் 8 ஸ்பீக்கர் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், ப்ளூலிங்க் கனெக்டட் கார் தொழில்நுட்பம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

இதுதவிர பனரோமிக் சன்ரூஃப், முன்பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள், மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் 7 இன்ச் டிஎஃப்டி கலர் டிஸ்ப்ளே, ஸ்மார்ட் ஏர் ப்யூரிஃபையர், டிரைவ் மோடு செலக்ட், பேடில் ஷிஃப்டர்கள் என ஏராளமான வசதிகளையும் ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

சக்தி வாய்ந்த இன்ஜின்கள்

ஒரு காரில் வசதிகள் நிரம்பியிருக்கும் அதே நேரத்தில் சக்தி வாய்ந்த இன்ஜின்கள் இருப்பதும் அவசியம். உங்களின் இந்த தேவையையும் ஹூண்டாய் சரியாக பூர்த்தி செய்கிறது. ஹூண்டாய் நிறுவன கார்களில் சக்தி வாய்ந்த பல்வேறு இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு இந்த விஷயத்திலும் ஹூண்டாய் கிரெட்டாவையே எடுத்து கொள்ளலாம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

ஹூண்டாய் கிரெட்டா காரில் 2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.4 லிட்டர் கப்பா டர்போ ஜிடிஐ பெட்ரோல், 1.5 லிட்டர் எம்பிஐ பெட்ரோல், 1.5 லிட்டர் யூ2 டீசல் என மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகளை ஹூண்டாய் கிரெட்டா பெற்றுள்ளது. எனவே விரும்பிய இன்ஜினை தேர்வு செய்யும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

சூப்பரான ரீசேல் வேல்யூ

ஹூண்டாய் கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல மறுவிற்பனை மதிப்பு உள்ளது. 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட ஒரு ஹூண்டாய் காரை தற்போது நீங்கள் விற்பனை செய்தாலும் கூட, காரின் உண்மையான மதிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத தொகை உங்களுக்கு திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

இங்கே நாங்கள் கூறியிருப்பது குறைந்தபட்ச தொகைதான். நீங்கள் காரை நல்ல நிலையில் பராமரித்திருந்தால் உங்களுக்கு இன்னும் அதிகமான தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. எனவே மறு விற்பனையிலும் ஹூண்டாய் கார்கள் உங்களை நிச்சயமாக கைவிடாது என நம்பலாம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

அனைவருக்குமான கார்கள்

நீங்கள் ஒரு செக்மெண்ட்டை குறிப்பிடுங்கள். அந்த செக்மெண்ட்டில் ஒரு ஹூண்டாய் காரையாவது எங்களால் கூற முடியும். செடான், எஸ்யூவி, ஹேட்ச்பேக் என எந்த செக்மெண்ட் என்றாலும், ஹூண்டாய் நிறுவன கார்கள் இருக்கின்றன. எனவே நீங்கள் எந்த செக்மெண்ட் காரை வாங்குவதாக இருந்தாலும், ஹூண்டாய் நிறுவனத்தை பற்றி யோசிக்கலாம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

பிரீமியம்

ஹூண்டாய் நிறுவன கார்கள் பிரீமியமான உணர்வை தரும். தரமான அப்ஹோல்ஸ்ட்ரி, லக்ஸரியான பாடி பேனல்கள் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். கட்டுமான தரத்திலும் ஹூண்டாய் கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன. 2005 மாடல் ஹூண்டாய் சாண்ட்ரோ காரை உதாரணத்திற்கு எடுத்து கொள்ளலாம்.

எல்லாருக்குமே பிடிக்கும்... ஹூண்டாய் கார்கள் மீது இந்தியர்கள் பைத்தியமாக இருப்பது ஏன் தெரியுமா? 5 ரகசியங்கள்

இந்த காரில் இன்றளவும் கூட நீங்கள் ஒரிஜினல் பேட்ஜிங்கை பார்க்கலாம். அத்துடன் பெரும்பாலான பாகங்கள் ஒரிஜினலாகதான் இருக்கும். இவற்றுடன் நல்ல மைலேஜ், பாதுகாப்பு, கவர்ச்சிகரமான டிசைன் போன்ற அம்சங்களிலும் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன. எனவேதான் வாடிக்கையாளர்களின் மனதில் நல்ல இடத்தை அந்த நிறுவனத்தால் பிடிக்க முடிந்துள்ளது.

Most Read Articles

English summary
Top 5 Reasons: Why You Should Buy Hyundai Car. Read in Tamil
Story first published: Monday, July 5, 2021, 19:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X