விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!

Tataவின் குட்டி எஸ்யூவி ரக காரான Punch பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய 7 முக்கிய விபரங்களை இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

இந்திய வாகன உலகின் ஜம்பவான் நிறுவனமான Tata அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறிய எஸ்யூவ ரக கார் குறித்த முக்கியமான விபரத்தை நேற்றைய தினம் வெளியிட்டது. காரின் பெயர் குறித்த தகவலையே நிறுவனம் வெளியிட்டிருக்கின்றது. 'Punch' எனும் வித்தியாசமான பெயரையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதுமுக காருக்கு நிறுவனம் வைத்திருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

முன்னதாக இக்காரை H2X, HBX மற்றும் Hornbill என நிறுவனம் குறிப்பிட்டு வந்த நிலையில் 'Punch' எனும் பெயரை நிறுவனம் வைத்திருக்கின்றது. மேலே கூறப்பட்ட ஏதேனும் ஓர் பெயரிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென Tata நிறுவனம் 'Punch' எனும் பெயரிலேயே தங்களின் மிக சிறிய உருவத்தில் தயாராகி வரும் கார் வரும் என அதிரடியாக அறிவித்தது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

இந்த தகவல் அதன் வாடிக்கையாளர்கள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர அளித்துள்ளது. இத்துடன் சேர்த்து கூடுதல் மிகழ்ச்சியை அளிக்கும் விதமாக Tata Punch பல்வேறு சிறப்பு வசதிகளுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. அந்தவகையில் புதுமுக காரில் இடம் பெற இருக்கும், நாம் கவனிக்க வேண்டிய ஏழு முக்கிய அம்சங்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

ALFA கட்டமைப்பு தளத்தில் உருவாக்கப்படும் முதல் எஸ்யூவி

Tata Motors அதன் ALFA கட்டமைப்பு தளத்தை பயன்படுத்தியே Altroz காரை உறுவாக்கி வருகின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் காராகும். இந்த தளத்தை பயன்படுத்தியே புதிய Punch மைக்ரோ எஸ்யூவி ரக காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. ஆகையால், இது Altroz காரைப் போல மிகவும் கவர்ச்சியான மற்றும் அதிகம் பிரீமியம் தர வசதிகள் கொண்ட வாகனமாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

மேலும், Altroz ஓர் அதிக பாதுகாப்பான காராகும். இது பாதுகாப்பு தரம் குறித்து குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. எனவே Punchம் ஓர் அதிக பாதுகாப்பான மற்றும் உறுதியான காராக வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

2.0 டிசைன் தாத்பரியம்

Tata Motors தற்போது புதிய டிசைன் அம்சங்களை வாகன தயாரிப்பில் கையாளத் தொடங்கியிருக்கின்றது. இதனடிப்படையில் உருவாக்கப்பட்ட மிக சிறந்த கார் என்பதற்கான உதாரணமாக Altroz இருக்கின்றது. இதுமட்டுமின்றி, Harrier உள்ளிட்ட கார்களும் புதிய டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

Tata அதன் Punch காருக்கு Harrier ஸ்டைலை லேசாகக் கொடுத்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் Punch இன் முகப்பு உள்ளது. ஆம், இக்காரின் முன் பக்க ஸ்டைல் Harrier இன் ஸ்டைலை ஒத்ததாகக் காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, தனித்துவமான ஸ்டைலாக கருப்பு நிற கிளாடிங், சதுர ஆர்ச்சுகள் கொண்ட வீல், ரூஃப் ரெயில், உயரமான பானெட் உள்ளிட்டவை இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

அறிமுகம் எப்போது?

Tata Punch நடப்பாண்டு விழாக் காலத்தை மையமாகக் கொண்டு அறிமுகமாக இருக்கின்றது. இதன்படி, தீபாவளி பண்டிகையின்போது அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முன்னதாக அறிமுகமாவதற்கும் அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றன.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்

Tata நிறுவனம் Punch காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் 3 சிலிண்டர் எஞ்ஜினை பயன்படுத்த இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது நேட்சுரல்லி அஸ்பயர்டு மோட்டாராகும். இதே எஞ்ஜின்தான் Altroz கார் மாடலிலும் பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

7 இன்ச் ஹார்மோன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

Tata Punch காரில் இடம் பெற இருக்கும் மற்றுமொரு சிறப்பம்சமே ஏழு அங்குலத்திலான தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கின்றது. இந்த சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, இவற்றுடன் ஐஆர்ஏ கார் இணைப்பு தொழில்நுட்பம் உள்ளிட்டவை இடம் பெற இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

என்ன விலையில் எதிர்பார்க்கலாம்

Tata Punch ஓர் மைக்ரோ (சிறிய) எஸ்யூவி ரக கார் என்பதாலும், பல பிரீமியம் அம்சங்களை தாங்கிய வாகனமாக வர இருப்பதாலும் அக்கார் ரூ. 4.5 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் உயர்நிலை மாடல் ரூ. 7.8 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விரைவில் அறிமுகமாக இருக்கும் Tata-வின் குட்டி எஸ்யூவி ரக கார்... Punch பற்றி அறிய வேண்டிய 7 முக்கிய விபரங்கள்!!

யாருக்கெல்லாம் போட்டியை தர இருக்கிறது Tata Punch

Maruti Suzuki Ignis, Ford Freestyle, Mahindra KUV100 போன்ற அனைத்து சிறிய உருவம் கொண்ட எஸ்யூவி கார்களுக்குமே Tata Punch போட்டியை வழங்க இருக்கின்றது. விலை மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அனைத்திலும் மிகக் கடுமையான போட்டியை நிறுவனம் வழங்க இருக்கின்றது.

Most Read Articles

English summary
Top 7 things about upcoming tata punch micro suv
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X