புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

குறைவான காத்திருப்பு காலத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்கள் பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

வருஷம் முடிவிற்கு வர இருக்கின்றது. பலர் 2022ம் ஆண்டின் தொடக்கத்தை புதிய காருடன் கொண்டாட விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவிலோ சில கார் மாடல்கள் இப்போது புக் செய்தால் தான் அடுத்த ஆண்டில் கைகளுக்கு கிடைக்கும் என்ற நிலை தென்படுகின்றது. ஏன், மஹிந்திரா எக்ஸ்யூவி 700 மற்றும் தார் போன்ற கார் மாடல்களுக்கு வருட கணக்கில் காத்திருப்பு காலம் நிலவுகின்றன.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

இந்த கார்களைக் கொண்டு 2022ம் ஆண்டைக் கொண்டாட நினைத்தால் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். அப்படினா புதிய ஆண்டை எங்களால் புதிய காருடன் கொண்டாட முடியாத?.. என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். கவலையேப்படாதீங்க, இந்தியாவில் குறைந்த காத்திருப்பு காலம் கொண்ட கார்களும் இருக்கின்றன. அவைகுறித்த தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

மாருதி சுசுகி செலிரியோ (Maruti Suzuki Celerio)

காத்திருப்பு காலம்: நான்கு வாரங்கள்

தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைப்பது புதிய தலைமுறை செலிரியோ ஆகும். இந்த புதிய தலைமுறை வெர்ஷனை மாருதி சுசுகி நிறுவனம் மிக சமீபத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த கார் மாடலுக்கு தற்போது ஒட்டுமொத்தமாகவே காத்திருப்பு 4 வாரங்களாக இருக்கின்றது. இப்போது புக் செய்தால் நிச்சயம் அடுத்த மாதம் விற்பனைக்குக் கிடைத்துவிடும் இதற்கு அர்த்தம் ஆகும். மாருதி சுசுகி செலிரியோ இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் மாடலாக இருக்கின்றது.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 26.68 கிமீ வரை மைலேஜ் தரும். ஆகையால், இந்த காருக்காக எத்தனை வாரங்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். தற்போது இந்தியாவில் அதிகபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எரிபொருள் விலை உயர்வை சமாளிக்க இதுமாதிரியான வாகனங்களே நமக்குக் கை கொடுக்கும்.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

செலிரியோவின் ஏஎம்டி தேர்வே அதிகபட்ச மைலேஜை தரும். புதிய தலைமுறை செலிரியோவில் ட்யூவல் ஜெட் கே10 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 67 எச்பி மற்றும் 89 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய தலைமுறை செலிரியோ இந்தியாவில் ரூ. 4.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

மாருதி சுசுகி எஸ்-ப்ரெஸ்ஸோ (Maruti Suzuki Spresso)

காத்திருப்பு காலம்: 3 முதல் 4 வாரங்கள்

மாருதி சுசுகியின் இந்த தயாரிப்பிற்கு இந்தியாவில் டிமாண்ட் சற்றே அதிகம். ஆகையால், இதற்கு காத்திருப்பு காலம் மூன்று வாரங்கள் முதல் 4 வாரங்களாக நிலவுகின்றது. இந்த காரை இப்போது புக் செய்தால் அடுத்த மாதத்தின் முதல் பாதிக்குள்ளாகவே டெலிவரி பெற்றுவிட முடியும்.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

மாருதி சுசுகி இக்காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வை வழங்குகின்றது. இந்த தேர்வில் கிடைக்கும் எஸ்-ப்ரெஸ்ஸோ அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 21.7 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த காரை மாருதி சுசுகி நிறுவனம் சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதன் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 3.78 லட்சம் ஆகும்.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

ஹூண்டாய் சேன்ட்ரோ (Hyundai Santro)

காத்திருப்பு காலம்: 4 வாரங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் சிறிய ஹேட்ச்பேக் ரக வாகனமாக சேன்ட்ரோ இருக்கின்றது. இக்காருக்கும் நாட்டு மக்கள் மத்தியில் சற்று வரவேற்பு அதிகம் என்பதால் இதற்கு காத்திருப்பு காலம் 4 வாரங்களாக நீடிக்கின்றது. இந்த காரில் சிறப்பு அம்சங்கள் சற்று அதிகம். நல்ல இட வசதி, சிறப்பான மைலேஜ் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட காராக சேன்ட்ரோ இருக்கின்றது.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

ஹூண்டாய் சேன்ட்ரோ இந்தியாவில் ரூ. 4.76 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சேன்ட்ரோ அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 20.3 கிமீ வரை மைலேஜ் தரும். இத்துடன், பின் பக்கத்தில் ஏசி துவாரங்களை பெற்ற முதல் காராகவும் இது விளங்குகின்றது.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

ஹூண்டாய் அவுரா (Hyundai Aura)

காத்திருப்பு காலம்: 3 முதல் 4 வாரங்கள்

ஹூண்டாய் அவுரா காருக்கு இந்தியாவில் காத்திருப்பு காலம்ம மூன்று முதல் நான்கு வாரங்களாக நிலவுகின்றது. இந்த காரிலும் பன்முக சிறப்பு வசதிகளை ஹூண்டாய் வழங்குகின்றது. அந்தவகையில், அதிக இட வசதி, ஸ்மார்ட் கீ (புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்), க்ரூஸ் கன்ட்ரோல், ஒயர்லெஸ் சார்ஜர், யுஎஸ்பி சார்ஜர், பவர் விண்டோக்கள், கூல்டு க்ளோவ்பாக்ஸ், பாசஞ்ஜர் வேனிட்டி மிரர், டில்ட் ஸ்டியரிங், சாவியில்லா நுழைவு உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த கார் இந்தியாவில் ரூ. 5.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

புக் செஞ்ச கொஞ்ச நாளிலேயே டக்குனு கிடைச்சிரும்... குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார் மாடல்களின் பட்டியல்!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 NIOS)

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் இந்தியாவில் குறுகிய காத்திருப்பு காலத்துடன் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று. இக்காருக்கு மூன்று வாரங்கள் முதல் 4 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் நிலவுகின்றது. ஆகையால், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என பன்முக எஞ்ஜின் தேர்வுகளில் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் இக்காரில் வழங்கப்படுவது. குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Top five cars with one month waiting period
Story first published: Wednesday, December 22, 2021, 13:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X