ஒரே மாதத்தில் இத்தனை கார்களை விற்பனை செய்துள்ளதா மாருதி?! இதெல்லாம் உண்மையில் அசாத்தியமான காரியம்
கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் விற்பனையான டாப்-10 கார்களின் பெயர்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கையுடன் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கார்கள் விற்பனை என்றாலே அதில் எப்போதுமே மாருதிதான் முன்னிலையில் இருக்கும் என்ற விஷயம் உங்கள் எல்லாருக்குமே நன்றாகவே தெரியும். அது வழக்கம்போல் கடந்த டிசம்பர் மாதத்திலும் தொடர்ந்துள்ளது.

கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனையான டாப்-10 கார்களில் மாருதியின் தயாரிப்புகள் மட்டுமே 7 இடங்களை நிரப்பியுள்ளன. அதிலும் முதல் ஐந்து இடங்களை மாருதி கார்கள்தான் பிடித்துள்ளன.

முதலிடத்தில் மாருதியின் ஆல்டோ 18,140 மாதிரிகளின் விற்பனையுடன் உள்ளது. மாருதிக்கு பல ஆண்டுகளாக விற்பனையில் முக்கிய பங்காற்றிவரும் ஆல்டோவின் இந்த டிசம்பர் மாத விற்பனை எண்ணிக்கை 2019 டிசம்பரை காட்டிலும் 17 சதவீதம் அதிகமாக 15,489 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

இரண்டாவது இடத்தில் உள்ள மாருதி ஸ்விஃப்ட் கடந்த 2019 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 23 சதவீதம் அதிகமாக 2020 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போது 14,749 ஸ்விஃப்ட் கார்களே விற்பனையாகி இருந்தன.

மூன்றாவது, 4-வது மற்றும் 5-வது இடங்களில் ஏற்கனவே கூறியதுபோல் மாருதியின் தயாரிப்புகளான பலேனோ, வேகன்ஆர் மற்றும் டிசைர் கார்களே உள்ளன. இதில் நெக்ஸா டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பலேனோ மற்றும் டிசைரின் விற்பனை உண்மையில் 2019 டிசம்பரை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.
| Rank | Model | Dec-20 | Dec-19 | Growth (%) |
| 1 | Maruti Alto | 18,140 | 15,489 | 17 |
| 2 | Maruti Swift | 18,131 | 14,749 | 23 |
| 3 | Maruti Baleno | 18,030 | 18,464 | -2 |
| 4 | Maruti WagonR | 17,684 | 10,781 | 64 |
| 5 | Maruti Dzire | 13,868 | 15,286 | -9 |
| 6 | Hyundai Venue | 12,313 | 9,521 | 29 |
| 7 | Maruti Vitara Brezza | 12,251 | 13,658 | -10 |
| 8 | Maruti Eeco | 11,215 | 7,634 | 47 |
| 9 | Hyundai Creta | 10,592 | 6,713 | 58 |
| 10 | Hyundai Grand i10 | 10,263 | 7,598 | 35 |
Source: Autopunditz

ஆனால் மாருதியின் பிரதான ஹேட்ச்பேக் மாடலான வேகன்ஆர் கடந்த 2020 டிசம்பரில் சுமார் 64 சதவீத விற்பனை வளர்ச்சியுடன் 17,684 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 6வது இடத்தில் மாருதி தயாரிப்பு அல்லாத ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூபி கார் உள்ளது. இதன் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 12,313 ஆகும்.

7வது மற்றும் 8வது இடங்களை மீண்டும் மாருதியே ஆக்கிரமித்துள்ளது. இந்நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஈக்கோ மாடல்கள் முறையே 12,251 மற்றும் 11,215 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளன. இதில் மாருதி ஈக்கோவின் விற்பனை 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 47 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களை ஹூண்டாய் மோட்டார்ஸின் க்ரெட்டா மற்றும் ஐ10 க்ராண்ட் நியோஸ் கார்கள் 2019 டிசம்பர் உடன் ஒப்பிடுகையில் 58 மற்றும் 35 சதவீத முன்னேற்றத்துடன் உள்ளன. மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸை தவிர்த்து வேறெந்த நிறுவனங்களது கார்களும் இந்த லிஸ்ட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








