Just In
- 1 min ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 2 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 3 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 3 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- News
ஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்
- Finance
டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உத்தரவிட்ட பாஜக அமைச்சர்... 4 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்... ஏன் தெரிஞ்சா கடுப்பாய்ருவீங்க!
மத்திய அமைச்சரின் கான்வாயை ஓவர்டேக் செய்த காரணத்திற்காக சுற்றுலா பயணிகள் தற்போது இக்கட்டான சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

சிறை பிடிக்கப்பட்ட சுற்றுலாப் பயணியின் வாகனம்.
ஒடிசா மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை 16-லேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் ஷா. இவர், அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் என ஒட்டுமொத்தமாக ஐவருடன் அண்மையில் ஒடிசா மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருக்கின்றனர்.

இந்த பயணத்தின்போதே அவர்கள் மத்திய அமைச்சரின் கான்வாயை ஓவர் டேக் செய்ததாகக் கூறப்படுகின்றது. இவர்களின் இச்செயலுக்காக அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய வாகனத்தையும், அவர்களையும் சிறைப்பிடித்திருக்கின்றனர். அதிகாரிகளின் இச்செயல் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரதாப் சந்திரா சாரங்கியின் கான்வாயையே சுற்றுலாப் பயணிகள் ஓவர் டேக் செய்திருக்கின்றார். ஒடிசாவின் பாலசூரைச் சேர்ந்த இவர் மக்களவை உறுப்பினர் மற்றும் மாநிலங்களுக்கான எம்எஸ்எம்இ மத்திய அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகின்றார்.

தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாக உறுப்பினராகவும் பணியாற்றி வருகின்றார். ஆகையால், இவருக்கு அரசு சார்பில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு, மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கான்வாய் சென்றுக் கொண்டிருந்தபோதே சுற்றுலாப் பயணிகள் அவரை ஓவர் டேக் செய்திருக்கின்றனர்.

இந்த ஒற்றைக் காரணத்திற்காக குடும்பத்துடன் அனைவரையும் ஒடிசா மாநில போலீஸார் சிறைப் பிடித்து நான்கு மணி நேரம் கழித்து, தீவிர விசாரணைக்கு பின்னர் விடுவித்திருக்கின்றனர். முன்னதாக, அமைச்சரின் கான்வாயை ஓவர்டேக் செய்ததற்காக மன்னிப்பு கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக் கொண்ட போலீஸார், இனி இதுபோன்ற எந்தவொரு தவறுகளிலும் ஈடுபட மாட்டேன் என்ற வாக்குறுதியையும் வாங்கிக் கொண்ட பின்னரே விடுவித்திருக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து பிரதாப் சந்திரா சாரங்கியின் உதவியாளரிடம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தியா டுடேவைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஆனால், நீண்ட நேர முயற்சிக்கு பின்னரும் அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளை சிறைபிடித்த ஐஐசி பாஸ்டா காவல்நிலை காவலரை தொடர்பு கொண்டிருக்கின்றனர்.

"இரு கார்கள் அமைச்சரின் கான்வாயை ஓவர் டேக் செய்தது. இதன் பின்னர், அமைச்சரே அவர்களை பிடிக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரிலேயே அமைச்சரின் பைலட் வாகனம் ஒன்று அவர்களை விரட்டிச் சென்று பிடித்து எங்களிடம் ஒப்படைத்தது" என பாஸ்டா காவல்நிலை காவலர் தெரிவித்திருக்கின்றார்.

போலீஸார் சுற்றுலாப் பயணிகளிடம் விசாரித்ததில், "தாங்கள் அந்த வாகனத்தை அமைச்சருடைய வாகனம் என நினைக்கவில்லை. ஆம்புலன்ஸ் என்றே நினைத்தோம். அதேசமயம், அந்த வாகனத்திற்கு எந்தவொரு தொந்தரவையும் வழங்காமலே நாங்கள் கடந்துச் சென்றோம்" என்றனர்.

கான்வாய்:
இந்தியாவில் உயிருக்காக போராடும் குடிமக்களுக்கு (ஆம்புலன்ஸ்) தடையில்லா போக்குவரத்துக் கிடைக்கின்றதோ, இல்லையோ அமைச்சர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தங்கு தடையில்லா போக்குவரத்திற்காகன தடம் கிடைக்கின்றது. ஆகையால், இவர்களின் கான்வாய் எப்போதுமே சற்று சீரிய வேகத்தில் செல்வதுண்டு. அந்த சமயத்தில் வேறு ஏதேனும் பொதுமக்களின் வாகனம் கான்வாயை கடக்க நேரிட்டால், பாதுகாப்பு வாகனம் இடையில் வந்து அவ்வாகனத்தின் வேகத்தை தடை செய்யும் வகையில் செயல்படும். ஆனால், ஒடிசா சம்பவத்தில் இதுபோன்று ஏதேனும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.

கான்வாய் சற்று குறைந்த வேகத்தில் சென்ற காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் கடந்து சென்றிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது. அதேசமயம், இந்திய அரசின் உத்தரவின்படி, அவசர வாகனங்களைத் தவிர பிற எந்த வாகனங்களிலும் ஃபிளாஷர்கள் மற்றும் சைரன்கள் இருக்கக் கூடாது என்பதே உத்தரவாகும். இது நாட்டின் பிரதமர் முதல் முதலமைச்சர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

இந்த விதியை அமைச்சரின் வாகனம் மீறியிருப்பதை சுற்றுலாப் பயணி சந்தோஷ் ஷா கூறிய தகவலின் அடிப்படையில் தெரிய வந்திருக்கின்றது. இதற்காக போக்குவரத்துத்துறை ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என தெரியவில்லை. தற்போது, சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தின்மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கின்றது என்பது பற்றி தெரிய வரவில்லை.