தொடரும் வெளியேற்றம்... Ecosportஐ அடுத்து இந்தியாவை விட்டு வெளியேறுகிறது Toyota-வின் பிரபல கார் மாடல்!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் யாரிஸ் (Yaris) செடான் ரக காரும் ஒன்று. இந்த காரையே நிறுவனம் தற்போது விற்பனையில் இருந்துநீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த முக்கிய விபரத்தை இப்பதிவில் காணலாம், வாங்க.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

பிரபல டொயோட்டா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாக யாரிஸ் உள்ளது. இது ஓர் செடான் ரக கார் மாடலாகும். இக்கார் மாடலையே வர்த்தகத்தில் இருந்து டொயோட்டா தற்போது விற்பனையில் இருந்து நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்தியாவில் இனி டொயோட்டா யாரிஸ் செடான் விற்பனைக்குக் கிடைக்காத நிலை உருவாகி இருக்கின்றது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

மிக சமீபத்தில் பிரபல கார் உற்பத்தியாளரான ஃபோர்டு (Ford) நிறுவனம். இந்தியாவை விட்டே ஒட்டுமொத்தமாக வெளியேறியது. இதை அடுத்து நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களை விற்பனையில் இருந்து நீக்கியது. குறிப்பாக, நிறுவனத்தின் மிகவும் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் ஒன்றான ஈகோஸ்போர்ட் (Ecosport) வெளியேற்றப்பட்டது. இந்தியாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

இது ஓர் அதிக பாதுகாப்பு வசதிகள் கொண்ட மற்றும் அதிக திடமான உடல் அமைப்பைக் கொண்ட கார் மாடலாகும். ஆகையால், இது வெளியேற்றப்பட்டது ஒட்டுமொத்த இந்தியாவையுமே சோகத்தில் மூழ்க வைத்தது. ஃபோர்டு நிறுவனத்தின் வெளியேற்றத்திற்கு தொடர்ச்சி விற்பனை சரிவு மற்றும் இழப்புகள் மட்டுமே காரணமாக இருக்கின்றன. எனவேதான் ஒட்டுமொத்தமாக நாட்டை விட்டே ஃபோர்டு வெளியேறியது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

இந்த நிலையிலேயே தற்போது டொயோட்டா நிறுவனம் அதன் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றான யாரிஸ்-ஐ நிறுவனம் வெளியேற்றியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கின்றது. ஆகையால், நிறுவனத்தின்கீழ் கிளான்ஸா, அர்பன் க்ரூஸர், இன்னோவா க்ரிஸ்டா, ஃபார்ச்சூனர், கேம்ரி மற்றும் வெல்ஃபையர் ஆகிய கார் மாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

புதிய மாடல்களை விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு யாரிஸ் செடான் வெளியேற்றப்பட்டிருக்கின்றது. மக்கள் மத்தியில் மிகவும் குறைவான விற்பனை விகிதத்தை பெற்று வருவதும் இதன் வெளியேற்றத்திற்கு ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. இன்று (செப்டம்பர் 27) முதல் இருந்தே யாரிஸ் கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

டொயோட்டா நிறுவனம் மிக விரைவில் மாருதி சுசுகியின் ஓர் காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது. சுசுகியின் சியாஸ் கார் மாடலே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டொயோட்டாவின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார் மாடலாகும். டொயோட்டா க்ளான்ஸா (மாருதி பலினோ) [Toyota Glanza (Maruti Baleno)] மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் (மாருதி விட்டாரா ப்ரெஸ்ஸா) [Toyota Urban Cruiser (Maruti Vitara Brezza)] ஆகிய இரு கார் மாடல்கள் தற்போது ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்கப்படும் கார் மாடல்களாக இருக்கின்றன.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

இதன் வரிசையிலேயே மாருதியின் சியாஸ் கார் மாடல் டொயோட்டாவின் பெல்டா-வாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இதற்கான வர்த்தக போன்ற அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், மிக விரைவில் இக்கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. இதன் வருகையும் தற்போதைய யாரிஸ் வெளியேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

மாருதி சுசுகி சியாஸ் சிக்மா, டெல்டா, ஜெட்டா, ஆல்ஃபா மற்றும் எஸ் ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதே தேர்வே பெல்டாவிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. எந்த பெயர் மாற்றமும் இன்றி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்டெக்ட் பிளாட்பாரத்தை பயன்படுத்தி இலகு ரக வாகனமாக இதனை உருவாக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ வசதிக் கொண்ட 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட்டிக் கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஆட்டோ ஃபோல்டிங் ஓஆர்விஎம்-கள், பின் பக்கத்திற்கும் ஏசி வெண்டுகள், க்ரூஸ் கன்ட்ரோல், சாவியில்லா நுழைவு, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி ஆகிய அம்சங்கள் டொயோட்டா பெல்டாவில் இடம் பெற இருக்கின்றது.

தொடரும் வெளியேற்றம்... Ford Ecosport-ஐ தொடர்ந்து இந்தியாவை விட்டு ஒட்டுமொத்தமாக வெளியேறும் Toyota-வின் பிரபல கார் மாடல்!

இத்துடன், பாதுகாப்பு அம்சமாக இரட்டை ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய வசதிகளும் இதில் இடம் பெற இருக்கின்றன. டொயோட்டா பெல்டா 1.5 லிட்டர் கே15பி மைல்டு ஹைபிரிட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த எஞ்ஜின் 104.7 எச்பி பவர் மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. டொயோட்டா பெல்டா டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota announced yaris sedan discontinued from india
Story first published: Monday, September 27, 2021, 17:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X