புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்வதற்கு டொயோட்டா விண்ணப்பித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதற்காக மிகப்பெரிய திட்டத்தை வகுத்துள்ளது. வரும் 2025ம் ஆண்டுக்குள் 7 புதிய எலெக்ட்ரிக் கார்களை உலக அளவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

மேலும், தனது புதிய எலெக்ட்ரிக் கார்களை BZ(Beyond Zero) என்ற பெயர் வரிசையில் அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் முதல் கார் மாடலாக வர இருக்கும் BZ4X என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் மாடலையும் டொயோட்டா வெளியிட்டு இருக்கிறது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

டொயோட்டா நிறுவனத்தின் e-TNGA என்ற எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார்கள் சுபரு கார் நிறுவனத்துடன் இணைத்து தயாரிக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

இந்த நிலையில், BZ வரிசையில் அறிமுகம் செய்யப்பட உள்ள BZ, BZ1, BZ2, BZ3, BZ4 மற்றும் BZ5 ஆகிய எலெக்ட்ரிக் கார்களின் பெயர்களை இந்தியாவில் பதிவு செய்வதற்கு விண்ணப்பம் செய்துள்ளது டொயோட்டா கார் நிறுவனம்.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

இதனால், பிஎஸ் வரிசையில் உலக அளவில் விற்பனைக்கு செல்லும் டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவிலும் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

பிஎஸ் வரிசையில் வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்4எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் கான்செப்ட் மாடலானது கிட்டத்தட்ட தயாரிப்பு நிலை மாடலுக்கு உரிய டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, சிறிய மாற்றங்களுடன் விரைவில் தயாரிப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

டொயோட்டா பிஎஸ்4எக்ஸ் காரின் டிசைன் கவரும் வகையில் உள்ளது. இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி விளக்கு பட்டை ஆகியவற்றுடன் வசீகரிக்கிறது. இதன் ஸ்டீயரிங் வீல் வித்தியாசமாக உள்ளது. ஆனால், தயாரிப்பு நிலை மாடலில் வேறுபடும்.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

அதேபோன்று, பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டேஷ்போர்டு மேல்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவற்றுடன் சற்று வித்தியாசமான உட்புற டிசைன் அமைப்புடன் இந்த கான்செப்ட் காட்சி தருகிறது.

புதிய எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயர்களை இந்தியாவில் பதிவு செய்ய டொயோட்டா விண்ணப்பம்!

டொயோட்டா பிஎஸ்4எக்ஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், இந்த கார் மிகவும் சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டாரை பெற்றிருக்கும். சுபரு நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota has registered trademark for BZ series in India.
Story first published: Thursday, April 22, 2021, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X