அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இந்திய இளைஞர் ஒருவர் தன்னுடைய விலையுயர்ந்த காரில் மிக தரமான வசதி ஒன்றை பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திருக்கின்றார். அது என்ன வசதி என்பது பற்றிய தகவலைக் கீழே காணலாம்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இந்தியர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பது உலகறிந்த ஒன்றே. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓர் சம்பவத்தை நமது நாட்டு இளைஞர் ஒருவர் நிகழ்த்தியுள்ளார். தனது ஆடம்பர கார் ஒன்றில் கழிவறை வசதியை உருவாக்கி அவர் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

பொதுவாக இந்தியாவில் வாகனங்களை மாற்றியமைப்பது என்பது இந்திய வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும். உருவத்தை மாற்றியமைக்கும் வகையில் செய்யப்படும் அனைத்து மாற்றங்களும் அதில் அடங்கும். அவ்வாறு, உருமாற்றம் செய்த வாகனங்கள் பல தற்போது காவலர்களின் பிடியில் சிக்கியிருக்கின்றன.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

சமீபத்தில்கூட பிரபல 'இ புல் ஜெட் யுட்யூப்' சேனலைச் சேர்ந்த சகோதரர்கள் வாகனத்தை மிகக் கடுமையாக மாற்றியமைத்ததற்காக போலீஸாரிடம் சிக்கினர். சகோதரர்களும், அவர்கள் மாற்றியமைத்த வாகனமும் தற்போது சட்டச் சிக்கலில் சிக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இதுபோன்று மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பலர் தங்களின் வாகனங்களை தங்களுக்கு பிடித்த ஸ்டைலுக்கு உருமாற்றம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இத்தகையோருக்கு மத்தியில் ஓர் விநோத மனிதராக டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் தற்போது மாறியிருக்ககின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

ஆம், டொயோட்டா ஃபார்ச்சூனர் காரிலேயே கழிவறை வசதி உருவாக்கப்பட்டிருக்கின்றது. கழிவறை வசதி உடன் உருமாறியிருக்கும் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் பற்றிய வீடியோவை ரெவோகிட் விளாக்ஸ் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இது ஓர் 2021 டொயட்டா ஃபார்ச்சூனர் உயர்நிலை மாடல் ஆகும். மிக சமீபத்திலேயே புதுப்பிக்கப்பட்ட வாகனமாக இதனை டொயோட்டா இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இத்தகைய புத்தம் புதிய காரிலேயே அதன் உரிமையாளர் கழிவறையை வசதி உருவாக்கி அனைவரையும் மிரள செய்திருக்கின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இந்தியாவில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் கழிவறை வசதி உருவாக்குவதே இதுவே முதல் முறையாகும். எனவேதான் பலரையும் இந்நிகழ்வு ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. ஓஜெஸ் கராஜ் எனும் வாகன மாடிஃபிகேஷன் நிறுவனத்தின் வாயிலாக இந்த தரமான சம்பவத்தை ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் அரங்கேற்றியிருக்கின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

கழிவறை வசதி மட்டுமின்றி இன்னும் சில மாற்றங்களையும் ஃபார்ச்சூனர் காரின் உரிமையாளர் செய்திருக்கின்றார். அந்தவகையில், ஏற்கனவே காரில் பொருத்தப்பட்டிருந்த புத்தம் புதிய டயரை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 18 இன்ச் அளவுள்ள குட்ரிச் ஏடி டயர்களை அவர் பொருத்தியிருக்கின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இந்த டயர் அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது. கரடு-முரடான சாலையைச் சமாளிப்பதற்காக இந்த டயரை காரின் உரிமையாளர் பொருத்தியிருக்கின்றார். கழிவறை வசதியானது காரின் பூட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், லக்கேஜ்களை வைப்பதற்கான இடம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இருப்பினும், நெடுந்தூர பயணங்களின்போது கழிவறை என்பது ஓர் அத்தியாவசிய தேவையாகும். நெடுஞ்சாலைகளில் இருக்கும் விடுதிகள் பலவற்றில் கழிவறைகள் சுகாதாரமற்றவையாக காட்சியளிக்கின்றன. இதனாலேயே நம்முடைய வீட்டுக்கு போய் எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம் என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

இந்த மாதிரியான அவசர சூழ்நிலையில் தங்களுக்கு உதவும் விதமாக கழிவறை வசதியை ஃபார்ச்சூனர் உரிமையாளர் கொண்டுவந்துள்ளார். கழிவு நீர் வெளியேற்றுவதற்காக சிறிய தொட்டி மற்றும் நீரை சேமித்து வைப்பதற்கான தொட்டி போன்றவற்றையும் அவர் அக்காரில் நிறுவியிருக்கின்றார்.

அவசரம்னா எங்கும் தேடி அலைய வேண்டாம்! இப்படி ஒரு வசதி எல்லாருடைய காருலையும் இருக்கணுங்க!

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி இந்திய சந்தையில் இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதாவது, டீசல் மற்றும் பெட்ரோல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 2.8 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஃபார்ச்சூனர் 205 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

Image Courtesy: Revokid Vlogs

இதேபோன்று 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் 165 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் வசதி தேர்வு வழங்கப்படுகின்றது. ஆனால், டீசல் எஞ்ஜின் தேர்வில் மட்டும் 4X4 வசதி வழங்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Toyota fortuner gets toilet setup in boot here is video
Story first published: Thursday, August 12, 2021, 11:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X