ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

கடந்த 2021 செப்டம்பரில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட முழு-அளவு எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி தொடர்ந்து பார்ப்போம்.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

கடந்த சில வருடங்களில் நம் இந்திய சந்தையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, எஸ்யூவி கார்களின் வளர்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் செவ்ரோலெட், ஃபோர்டு, ஹார்லி-டேவிட்சன் போன்ற முன்னணி பிராண்ட்கள் இந்தியாவில் இருந்து விடைபெற்று சென்றுள்ளன.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நாட்டு சந்தையில் வெளியேறுவது அந்த நிறுவனத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது. மறுப்பக்கம் மற்ற போட்டி மாடல்களுக்கு நல்ல வாய்ப்பாகவும் அமைந்துவிடுகிறது. இவ்வாறான சூழல் தான் ஃபோர்டு நிறுவனத்தின் வெளியேற்றத்தால் இந்திய முழு-அளவு எஸ்யூவி கார்கள் பிரிவில் உருவாகியுள்ளது.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

கடந்த செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது தொழிற்சாலை தயாரிப்பு பணிகளை விற்பனை போதாமையின் காரணமாக நிறுத்தி கொள்ளவுள்ளதாக அறிவித்தது. இதன்படி குஜராத் மாநிலத்தில் உள்ள ஃபோர்டின் முக்கியமான இந்திய தொழிற்சாலையில் வாகன தயாரிப்பு பணிகள் ஒவ்வொன்றாக நிறுத்தி கொள்ளப்பட்டு வருகின்றன.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

முழுவதுமாக இந்த ஆண்டிற்குள் நிறுத்தப்பட்டுவிடும் என தெரிகிறது. இதன் எதிரொலியாக கடந்த மாதத்தில் ஒரு ஃபோர்டு கார் கூட இந்தியாவில் விற்பனையானதாக செய்திகள் இல்லை. முழு-எஸ்யூவி பிரிவை பொறுத்தவரையில், ஃபோர்டு பிராண்ட்டில் இருந்து ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகிய எண்டேவியரும் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

எண்டேவியரின் வீழ்ச்சி டொயோட்டா ஃபார்ச்சூனரின் வளர்ச்சியாக அமைந்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட முழு-அளவு எஸ்யூவி காராக ஃபார்ச்சூனர் 1,869 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளது. இது ஃபார்ச்சூனரின் 2020 செப்டம்பர் மாத விற்பனை உடன் ஒப்பிடுகையில் சுமார் 78.85% அதிகமாகும்.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தமாக 1,045 ஃபார்ச்சூனர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேநேரம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 694 எண்டேவியர் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது எண்டேவியரை வாங்க திட்டமிட்டபவர்களில் பெரும்பாலானோர் ஃபார்ச்சூனர் பக்கம் சென்றிருப்பது தெரிய வருகிறது.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

இந்த 2021ஆம் துக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எம்ஜி க்ளோஸ்டர் பிரிமீயம் தரத்திலான எஸ்யூவி இந்த லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும் முதல் இடத்தில் உள்ள ஃபார்ச்சூனருக்கும் க்ளோஸ்டர் மாடலுக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளதை பார்க்கலாம். இதில் இருந்து இந்திய வாடிக்கையாளர்கள் ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரை தங்களது மனதில் எந்த இடத்தில் வைத்துள்ளனர் என்பதை அறியலாம்.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

மூன்றாவது இடத்தில் ஹூண்டாய் டக்ஸன் 139 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே 2020 செப்டம்பரில் ஹூண்டாயின் இந்த விலைமிக்க எஸ்யூவி கார் 85 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த வகையில் கடந்த மாதத்தில் 54 டக்ஸன் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திராவின் சொகுசு வாகனமான அல்டுராஸ் ஜி4 கடந்த 2021 செப்டம்பரில் 51 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

ஆனால் 2020 செப்டம்பரில் 73 அல்டுராஸ் ஜி4 கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்ததால், இந்த வகையில் இந்த மஹிந்திரா சொகுசு காரின் விற்பனை 30.14% குறைந்துள்ளது. இவை நான்கும் தான் தற்போதைக்கு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் முழு அளவு கொண்ட எஸ்யூவி கார்களாகும்.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

எண்டேவியரின் தயாரிப்பு நிறுத்தம் டொயோட்டா ஃபார்ச்சூனர் மட்டுமின்றி எம்ஜி க்ளோஸ்டர் மற்றும் டக்ஸன் கார்களின் விற்பனையிலும் பிரதிப்பலித்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த எஸ்யூவி கார் பிரிவில் ஒட்டுமொத்தமாக 2,351 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2020 செப்டம்பரில் 1,897 கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஃபோர்டு வெளியேற்றத்தால், ஃபார்ச்சூனர் விற்பனையில் கல்லா கட்டியுள்ள டொயோட்டா!! 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர்

இதன்படி பார்க்கும்போது, இந்திய சந்தையில் முழு-அளவு எஸ்யூவி காரின் விற்பனை கிட்டத்தட்ட 23.93% அதிகரித்துள்ளது. இந்தியாவில் இவ்வாறான அளவில் பெரிய எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை ஸ்கோடா கோடியாக்கின் மூலம் விரைவில் அதிகரிக்க உள்ளது. ஸ்கோடா பிராண்டில் இருந்து குஷாக் எஸ்யூவி கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கோடியாக் அடுத்த ஆண்டில் அறிமுகமாகலாம்.

Most Read Articles

English summary
Toyota Fortuner leads large SUV race as Ford Endeavour exits.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X