ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் கார் விற்பனை!

காம்பெக்ட் & சப்-காம்பெக்ட் பிரிவுகள் போட்டி மிகுந்ததாக இருக்கும் அளவிற்கு முழு-அளவு எஸ்யூவி கார்கள் பரபரப்பாக விற்பனையாகக்கூடியவைகளாக இல்லை என்பதை கூறிதான் ஆக வேண்டும். தற்போதைக்கு இந்தியாவில் மொத்தம் நான்கு முழு அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் ஹூண்டாய் டக்ஸன் என்பவை தான் அந்த 4 மாடல்களாகும். இவை கடந்த 2021 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

பிரபல அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் இருந்து வெளியேறி உள்ளதால், முழு அளவு எஸ்யூவி கார்கள் பிரிவு சற்று வலுவிழந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த பிரிவில் டொயோட்டா ஃபார்ச்சூனரும், ஃபோர்டு எண்டேவியரும் தான் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மாடல்களாக இருந்தன. ஆனால் தற்போது எண்டேவியரின் விற்பனை நிறுத்தத்தால், ஃபார்ச்சூனரின் கை முற்றிலுமாக ஓங்கியுள்ளது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

முன்பு எண்டேவியருக்கு இணையாக 600, 700 யூனிட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஃபார்ச்சூனரின் கடந்த நவம்பர் மாத விற்பனை 1,844 ஆகும். இதற்கு முந்தைய 2021 அக்டோபரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த மாதத்தில் இருந்துதான் ஃபோர்டு எண்டேவியரின் விற்பனை எண்ணிக்கை 0-வாக பதிவாக ஆரம்பித்தது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

2020 நவம்பரில் 656 ஃபார்ச்சூனர் கார்களையே டொயோட்டா இந்திய சந்தையில் விற்பனை செய்திருந்தது. இந்த விஷயம் எவ்வாறு நம்மை ஆச்சிரியப்படுத்துகிறதோ அதேபோல், நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்தகைய, ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட முழு அளவு எஸ்யூவி கார்கள் லிஸ்ட்டில் இரண்டாவது இடத்தை ஹூண்டாய் டக்ஸன் எஸ்யூவி மாடல் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டக்ஸன் கார்களின் எண்ணிக்கை 108.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இது வழக்கமாக மாதந்தோறும் ஹூண்டாய் டக்ஸன் கார்கள் விற்பனை செய்யப்படும் எண்ணிக்கையே. உதாரணத்திற்கு, கடந்த 2021 அக்டோபரில் 119 டக்ஸன் கார்களும், 2020 நவம்பரில் 76 டக்ஸன் கார்களும் விற்கப்பட்டு இருந்தன. இந்த பிரிவில், இம்முறை ஃபார்ச்சூனரை தவிர்த்து மற்றவை அனைத்தின் விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது. இதில் விற்பனையில் பெரிய அளவில் தடுமாற்றம் அடையாததால் ஹூண்டாய் டக்ஸன் 2வது இடத்தை பெற்றுள்ளது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

கடந்த 2020 நவம்பரில் 627 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு டொயோட்டா ஃபார்ச்சூனர் & ஃபோர்டு எண்டேவியருக்கு சரிக்கு சமமாக போட்டியிட்ட எம்ஜி மோட்டாரின் க்ளோஸ்டர் முழு-அளவு எஸ்யூவி கடந்த நவம்பர் மாதத்தில் வெறும் 102 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த அக்டோபரிலாவது பரவாயில்லை, 260 க்ளோஸ்டர் கார்களை எம்ஜி விற்பனை செய்திருந்தது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இதன் மூலமாக அந்த மாதத்தில் இந்த லிஸ்ட்டில் ஃபார்ச்சூனருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் க்ளோஸ்டர் மாடல் இருந்தது. கடைசி, நான்காவது இடத்தில் மஹிந்திரா அல்டுராஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாகவே 80 அல்டுராஸ் ஜி4 கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. இருப்பினும் உண்மையில், 2021 அக். மற்றும் 2020 நவம்பர் மாதங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் அல்டுராஸ் ஜி4 கார்களின் விற்பனை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இந்த இரு மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட அல்டுராஸ் ஜி4 கார்களின் எண்ணிக்கைகள் முறையே 40 மற்றும் 23 ஆகும். இதில் இருந்து அல்டுராஸ் ஜி4 மாடலுக்கும் எண்டேவியருக்கு செல்ல வேண்டிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர் என்பது தெளிவாகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த 2021 நவம்பர் மாதத்தில் 2,134 முழு-அளவு எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இந்த எண்ணிக்கை 2020 நவம்பர் மாதத்தை (2,029 கார்கள்) காட்டிலும் 5.17% அதிகம் என்றாலும், 2021 அக்டோபரை காட்டிலும் 7.70 குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 2,312 முழு-அளவு எஸ்யூவி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஃபோர்டு எண்டேவியரின் விற்பனை நிறுத்தத்தால் நிச்சயமாக இந்த பிரிவில் ஓர் வெற்றிடம் உருவாகியுள்ளது.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இதனை நிரப்பும் விதத்தில் அடுத்ததாக, ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் கமெண்டர் (மெரிடியன்) என்ற புதிய முழு-அளவு எஸ்யூவி கார்கள் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. பொதுவாகவே இத்தகைய பிரீமியம் எஸ்யூவி கார்களின் அறிமுகங்கள் பெரிதும் கவனத்தை ஈர்க்கும். ஆனால் விற்பனை எண்ணிக்கைகள் குறைவாகவே பதிவாகும். ஏனெனில் முழு-அளவு எஸ்யூவி கார்களை சில குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே தேர்வு செய்கின்றனர்.

ஃபோர்டு கிளம்பியது டொயோட்டாவிற்கு ரொம்ப சாதகமா போயிடுச்சு!! தொடர்ந்து உச்சத்தில் ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனை!

இதில் பெரும்பாலானோர் டொயோட்டா ஃபார்ச்சூனரையே தற்போதைக்கு முதன்மையான தேர்வாக கொண்டுள்ளனர். புதிய ஸ்கோடா கோடியாக்கும், ஜீப் கமெண்டர் வாகனமும், ஃபார்ச்சூனர் அளவிற்கு விற்பனையாகுமா? இந்த புதிய அறிமுகங்களின் மூலம் இந்திய சந்தையில் முழு-அளவு எஸ்யூவி கார்கள் மேலும் பிரபலமடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Most Read Articles

மேலும்... #விற்பனை #sales
English summary
Toyota fortuner leads large suv race as ford endeavour exits 2021 nov sales
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X