டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார் எப்படி இருக்கு? மிஸ் பண்ணாமல் இந்த ரிவியூ வீடியோவை பாருங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற டொயோட்டா கார்களுள் ஒன்றான ஃபார்ச்சூனரின் லெஜண்டர் வெர்சனை டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வாய்ப்பு சமீபத்தில் எங்களுக்கு கிடைத்தது. அதன் மூலம் நாங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை வீடியோவாக தொகுத்து வழங்கியுள்ளோம். அந்த வீடியோ இதோ உங்களது பார்வைக்காக,
டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரை தொடர்ந்து அதன் லெஜண்டர் மாடல் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் உடன் ஒப்பிடுகையில் ஃபார்ச்சூனர் லெஜண்டர் கார் தோற்றத்தில் பல விதங்களில் வேறுபடுகிறது.

உட்புறத்தில் மூன்று இருக்கை வரிசை உடன் லெஜண்டர் விற்பனை செய்யப்படுகிறது. முன்பக்கத்தை போல் இதன் பின்பகுதியும் இரண்டாக பிரிக்கப்பட்ட வடிவிலான டெயில்லைட்கள் உடன் அருமையாக உள்ளது. இதன் விலை ரூ.46 லட்சத்தில் டொயோட்டா நிறுவனம் நிர்ணயித்துள்ளது.


Click it and Unblock the Notifications