விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux! எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) பிக்-அப் ட்ரக் எப்போது அறிமுகமாக இருக்கின்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்கலாம். வாங்க.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

இந்தியாவில் பிக்-அப் ட்ரக் ரக வாகனங்களுக்கு சற்றே டிமாண்ட் அதிகம். ஆனால், இந்த ரக வாகனங்கள் மிக குறைந்த அளவிலான தேர்விலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த நிலையைத் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் விதமான முயற்சியில் தற்போது டொயோட்டா களமிறங்கியிருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

நிறுவனம் அதன் ஹைலக்ஸ் பிக்-அப் ரக வாகனத்தை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக சமீப காலமாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், இவ்வாகனம் எப்போது இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது என்கிற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை ஆட்டோகார் இந்தியா ஆங்கில தளம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இது வெளியிட்டிருக்கும் செய்தியில் வாகனத்தின் அறிமுக மாதம் பற்றிய தகவல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. துள்ளியமான தேதி பற்றிய விபரம் வெளியிடவில்லை. ஜனவரியின் தொடக்கத்தில் இக்காரின் அறிமுகம் அரங்கேறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெகு நாட்களாக இவ்வாகனம் இப்போது வந்துவிடும், அப்போது வந்துவிடும் என இதன் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த அதன் ரசிகர்களுக்கு இத்தகவல் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி மற்றும் ஃபார்ச்சூனர் பிரீமியம் எஸ்யூவி ஆகிய கார்களின் அம்சங்களைத் தழுவியே புதிய டொயோட்டா ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இக்கார்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அதே ஐஎம்வி-2 பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே டொயோட்டா நிறுவனம் அதன் ஹைலக்ஸ் பிக்-அப் ட்ரக்கை உருவாக்கி இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

ஹைலக்ஸ் 5.3 மீட்டர் நீளம் மற்றும் 3.1 மீட்டர் வீல் பேஸ் அளவுகளைக் கொண்டிருக்கின்றது. உலக நாடுகள் சிலவற்றில் இக்கார் ஏற்கனவே விற்பனையில் இருக்கின்றது. அந்தவகையில், இந்தோனேசியா சந்தையில் இவ்வாகனம் ரெவோ ரோக்கோ எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

இதுவே சில மாற்றங்களுடன், அதாவது, இந்திய சந்தைக்கு உகந்த மாற்றங்களுடன் விற்பனைக்கு வர இருக்கின்றது. மேலும், இதன் இரட்டை கேப் வெர்ஷன் மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதேநேரத்தில், விரைவில் இதன் ஒற்றை கேப் வெர்ஷனும் இந்தியாவின் வர்த்தகை மையப்படுத்தி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் அறிமுகம் சற்றே இடைவெளியில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

ஏற்கனவே கூறியதைப் போல் ஹைலக்ஸ், இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனரின் அம்சங்கள் சிலவற்றை அதன் உட்பகுதியில் தாங்கியிருக்கின்றது. 8 இன்ச் அளவுள்ள தொடுதிரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி, எலெக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் ஓட்டுநர் இருக்கை, தானியங்கி ஏசி, எக்ஸ்டீரியர் எல்இடி மின் விளக்கு உள்ளிட்டவை அக்கார்களில் இருப்பதைப் போலவே ஹைலக்ஸிலும் இடம் பெற்றிருக்கும்.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

எஞ்ஜினைப் பொருத்தவரை 2.4 லிட்டர் மற்றும் 2.8 லிட்டர் டர்போ டீசல் ஆகிய மோட்டார் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில், 2.4 லிட்டர் மோட்டாரானது அதிகபட்சமாக 150 பிஎஸ் மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது. இதேபோல் 2.8 லிட்டர் எஞ்ஜினானது 204 பிஎஸ் மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளியேற்றும்.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

இரு எஞ்ஜினிலும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி 2 வீல் இயக்கம் மற்றும் 4 வீல் இயக்கம் ஆகிய வசதிகளும் ஹைலக்ஸில் வழங்கப்பட இருக்கின்றது. முழுக்க முழுக்க ஹைலக்ஸ் இந்தியாவில் இசுஸூ வி-க்ராஸ் வாகனத்திற்கு போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது.

விரைவில் அறிமுகமாகிறது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கார் Toyota Hilux... எப்போனு தெரியுமா? இதோ உங்களுக்கான தகவல்!

ரூ. 21.06 லட்சம் தொடங்கி ரூ. 25.60 லட்சம் வரையிலான விலையில் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் டொயோட்டா ஹைலக்ஸ் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இசுஸுவின் பிக் அப் ட்ரக்குகள் ரூ. 18.05 லட்சம் தொடங்கி ரூ. 25.60 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 1, 2021, 12:24 [IST]
English summary
Toyota hilux pickup india launch set for 2022 january
மேலும்... #டொயோட்டா #toyota
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+