கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

டொயோட்டாவின் சமீபத்திய அறிமுகமான புதிய லேண்ட் க்ரூஸர் 300 காரை விவரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரை லேண்ட் க்ரூஸர் 300 என்கிற பெயரில் சில வாரங்களுக்கு முன்பு தான் சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தி இருந்தது.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் கவனிக்கத்தக்க அப்டேட்களை பெற்றுவந்துள்ள இந்த புதிய தலைமுறை டொயோட்டா கார் சில வெளிநாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்தியாவில் தான் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியிருக்க, புதிய லேண்ட் க்ரூஸர் 300 மாடலில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை விவரிக்கும் வீடியோ ஒன்று என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

Image Courtesy: DRIVETERRAIN

இதன் மூலம் புதிய லேண்ட் க்ரூஸரை மிக நெருக்கமாக பார்க்கலாம். ஆஃப்-ரோடு பயணங்களுக்கு மிகவும் ஏற்ற வாகனமான டொயோட்டா லேண்ட் க்ரூஸரின் புதிய தலைமுறை டிஎன்ஜிஏ-எஃப் கட்டமைப்பின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

பாடி-ஆன்-ஃப்ரேம் வடிவமைப்பை மீண்டும் தொடர்ந்தாலும், புதிய ப்ளாட்ஃபாரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் புதிய லேண்ட் க்ரூஸரின் ஒட்டுமொத்த வலிமையும் அதிகரித்துள்ளதுடன், வாகனத்தின் ஈர்ப்பு விசை மையமும் தாழ்வாகியுள்ளது.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

முந்தைய தலைமுறையில் இருந்து லேண்ட் க்ரூஸரின் எடை கிட்டத்தட்ட 200 கிலோ வரையில் குறைந்துள்ள போதிலும், காரின் பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை. தொழிற்நுட்ப மேம்பாடுகளாக, இ-கேடிஎஸ்எஸ் (எலக்ட்ரிக் இயக்கவியல் டைனாமிக் சஸ்பென்ஷன் சிஸ்டம்) மற்றும் வெவ்வேறான ட்ரைவ் செலக்ட் மோட்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

உலகளவில் வாகன மாசு உமிழ்வு விதிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதால், வழக்கமான வி8 என்ஜின்களை டொயோட்டா நீக்கியுள்ளது. அவற்றிற்கு பதிலாக இரு வி6 என்ஜின்களை தேர்வுகளாக புதிய லேண்ட் க்ரூஸரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

இதில் ஒன்றான 3.5 லிட்டர் வி6 இரட்டை-டர்போ என்ஜின் அதிகப்பட்சமாக 415 பிஎஸ் மற்றும் 650 என்எம் டார்க் திறனையும், மற்றொன்றான 3.3 லிட்டர் இரட்டை-டர்போ வி6 என்ஜின் 309 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

கம்பீரத்திற்கு மறுபெயர் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தான் போல!! இந்த வீடியோவில் பாருங்க, இன்னும் பயங்கரமா இருக்கு!

இவை இரண்டுடனும் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. புதிய தலைமுறை லேண்ட் க்ரூஸரை தொடர்ந்து அதன் செயல்திறன்மிக்க லேண்ட் க்ரூஸர் 300 ஜிஆர் ஸ்போர்ட் மாடலின் தயாரிப்பு பணிகளிலும் ஈடுப்பட்டு வருவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Land Cruiser 300 Detailed In Walkaround Video.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X