30 எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

டொயோட்டா கார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மாபெரும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நடப்பு தசாப்தத்தில் மொத்தம் 30 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டுள்ளது.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் மின்சார வாகனங்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. எதிர்பார்த்ததைவிட மின்சார வாகனங்களுக்கான தயாரிப்புப் பணிகளும், விற்பனையும் மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

இந்த நிலையில், பெரும்பாலான வாகன நிறுவனங்கள் மின்சார வாகனத் தயாரிப்பில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அந்த வகையில், பல முன்னணி கார் நிறுவனங்களும் மின்சார கார்களை களமிறக்குவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றன.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

இந்த நிலையில், உலக அளவில் விற்பனையில் முன்னணி கார் நிறுவனமாக விளங்கும் டொயோட்டா தனது மின்சார கார் தயாரிப்புத் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை அடுத்து வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

இதுதொடர்பாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோடா கூறுகையில்," வரும் 2030ம் ஆண்டுக்குள் உலக அளவில் 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க உள்ளோம். மேலும், 3.5 மில்லியன் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரக் கார்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

மேலும், வரும் 2030ம் ஆண்டு முதல் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளது. வரும் 2035ம் ஆண்டு முதல் உலக அளவில் எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்வதற்கான திட்டத்தையும் செயல்படுத்த உள்ளது.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

முதல்கட்டமாக டொயோட்டா கீழ் செயல்படும் லெக்சஸ் சொகுசு கார் பிராண்டில் எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், டொயோட்டா பிராண்டிலும் புதிய எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர இருக்கிறது. மொத்தத்தில் 2035ம் ஆண்டு முதல் முற்றிலுமாக மின்சார கார்களை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக 13.6.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

தற்போது விற்பனையில் இருக்கும் சில கார்களை தழுவிய எலெக்ட்ரிக் கார்களையும், புதிய எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்கும் திட்டத்தையும் டொயோட்டா செயல்படுத்த உள்ளது. மேலும், புதிய எலெக்ட்ரிக் கார்களை தனது e-TNGA என்ற விசேஷ கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கவும் முடிவு செய்துள்ளது.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

சிறிய வகை கார்கள், எஸ்யூவி ரக கார்கள் மற்றும் சொகுசு கார்கள் என அனைத்து வகைகளிலும் எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கி தனது சந்தையை வலுவாக தக்க வைத்துக் கொள்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது. உலக அளவிலான இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவிலும் பல புதிய எலெக்ட்ரிக் கார்களை டொயோட்டா அறிமுகம் செய்யும்.

 30 புதிய எலெக்ட்ரிக் கார்களை களமிறக்க டொயோட்டா மாபெரும் திட்டம்!

இந்த அறிவிப்பு உலக அளவில் பிரபலமான போட்டி கார் தயாரிப்பு நிறுவனங்களையும், வாடிக்கையாளர்களையும் உற்று நோக்க வைத்துள்ளது. இது நிச்சயமாக பெருநகரங்களில் வாகனப் புகையால் ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் பாதிப்பை தவிர்ப்பதற்கான முதற்கட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota plans to launch 30 electric cars globally by 2030
Story first published: Wednesday, December 15, 2021, 11:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X