இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவில் குறிப்பிட்ட நாட்களில் தயாரித்த அர்பன் க்ரூஸர் கார்களை டொயோட்டா நிறுவனம் அழைத்திருக்கின்றது. இதற்கான காரணத்தை இப்பதவில் காணலாம்.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று அர்பன் க்ரூஸர். இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். மாருதி நிறுவனத்தின் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மாடலையே டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் எனும் பெயரில் ரீபேட்ஜ் செய்து விற்பனைச் செய்து வருகின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக இது இருந்தாலும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் மாடலாக இக்கார் மாறியிருக்கின்றது. இந்த நிலையில், ஏற்கனவே விற்பனைச் செய்யப்பட்ட சுமார் 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி வருமாறு டொயோட்டா நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

குறிப்பாக, கடந்த 2020ம் ஆண்டு ஜீலை 28 தொடங்கி 2021 பிப்ரவரி 11 தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களையே நிறுவனம் திரும்பி வருமாறு அழைத்திருக்கின்றது. இந்த குறிப்பிட்ட நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் மாடல் கார்களில் பழுதான பாகம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

இதனைச் சரி செய்து தரும் நோக்கிலேயே டொயோட்டா உடனடியாக குறிப்பிட்ட நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் க்ரூஸர் கார்களை அழைத்துள்ளது. ஓட்டுநரின் பக்கவாட்டு பகுதியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஏற் பேக் விரிவதிலேயே கோளாறு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

இதனைச் சரி செய்யும் நோக்கிலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார்களை அழைத்திருக்கின்றது. விபத்து போன்ற பேரிடர் காலங்களில் பாதுகாப்பு வழங்கும் நோக்கில் கார்களில் ஏர் பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதிலேயே கோளாறு ஏற்பட்டிருப்பது அர்பன் க்ரூஸர் கார் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

இருப்பினும், இதுகுறித்து எந்த கவலையும்கொள்ள தேவையில்லை, நாங்களே அதனை சரி செய்து தருகின்றோம் என டொயோட்டா கூறியிருக்கின்றது. குறிப்பாக, எந்தவொரு கட்டணமுமின்றி இலவசமாக கோளாறுகளை நீக்க இருப்பதாக டொயோட்டா அறிவித்திருக்கின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

அழைப்புகுறித்த தகவல் செல்போன் குறுஞ்செய்தி மற்றும் செல்போன் அழைப்புகள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், இந்த பழுதான பாகத்தின் காரணமாக இதுவரை எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை டொயோட்டா நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 10.3 பிஎச்பி மற்றும் 138 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படுகின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

இத்தகைய சிறப்பு திறன்கள் கொண்ட காரையே டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து கூடுதல் பிரீமியம் தர காராக இந்தியாவில் விற்பனைச் செய்து வருகின்றது. தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த காரின் மீது ஏற்பட்டிருக்கும் கலங்கத்தை முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

டொயோட்டா நிறுவனம் இந்தியர்களைக் கவரும் வகையில் ஆர்விஏ4 எனும் புதிய காரை இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. இந்த நிலையில், இந்தியா சாலையில் வைத்து இக்காரை தீவிர பல பரீட்சையில் நிறுவனம் ஈடுபடுத்தி வருகின்றது. டொயோட்டாவின் இந்த நடவடிக்கையால் ஆர்விஏ4 கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்த 9,498 அர்பன் க்ரூஸர் கார்களை திரும்பி அழைக்கும் டொயோட்டா... என்ன காரணம் தெரியுமா?

2021ம் ஆண்டிற்கு இக்கார் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் சிபியூ (முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்படுவது) வாயிலாக இக்காரை டொயோட்டா விற்பனைச் செய்யும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இறக்குமதி மற்றும் பிற சேவை வரிகள் என அனைத்தும் சேர்த்து ரூ. 60 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் இக்கார் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Reacalls Urban Cruiser SUV In India; Here Is Why?.. Read In Tamil.
Story first published: Wednesday, March 17, 2021, 19:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X