நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

மிக விரைவில், அடுத்த சில வாரங்களில் பிரபலமான ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரின் இரு புதிய வெர்சன்களை இந்தியாவில் டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது இந்த புதிய ஃபார்ச்சூனர் கார்களின் டீசர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

டொயோட்டா ஃபார்ச்சூனரின் புதிய வெர்சன்கள் என்பன, அவை ஃபேஸ்லிஃப்ட் மற்றும் டாப் லெஜண்டர் வெர்சன்கள் ஆகும். இதில் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் சில சிறிய காஸ்மெட்டிக் மற்றும் கூடுதல் வசதிகளை பெற்று வரவுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

இரண்டாவது லெஜண்டர் வெர்சன் ஸ்போர்டியான தோற்றத்தை ஏற்றுவரவுள்ளது. இந்த் இரு வெர்சன்களின் இந்திய அறிமுகங்களும் வருகிற ஜனவரி 6ஆம் தேதிக்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

லெஜண்டர், புதிய ஃபார்சூனர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி காரின் ஸ்போர்டியர் வெர்சனாக இருக்கும் என்று முன்பே கூறியிருந்தோம். இதன் காரணமாக சில கூடுதல் காஸ்மெட்டிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கும்.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

இந்த நிலையில்தான் தற்போது இந்த இரு வெர்சன்களின் டீசர் படங்களை டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த டீசர் படங்கள் இந்த இரு கார்களின் ஹெட்லேம்ப்களைதான் ஹைலைட்டாக காட்டுவதுபோல் உள்ளது. ஏனெனில் இரண்டின் ஹெட்லேம்ப் அமைப்பும் சற்று வேறுபடுகின்றன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

இவற்றின்படி பார்க்கும் 2021 ஃபார்சூனர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் உடன் ஹெட்லேம்ப் அமைப்பை பெற்றுவரவுள்ளது. ஃபார்ச்சூனர் லெஜண்டர் கூடுதல் ஸ்போர்டியான ஹெட்லேம்ப் குழிகளை கொண்டுள்ளது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

மேலும் நேர்த்தியான க்ரில், பம்பரில் பெரிய காற்று ஏற்பான் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகளுக்கு வித்தியாசமான டிசைனில் குழிகளுடன் லெஜண்டரின் முன்பக்கம் மிகவும் முரட்டுத்தனமான தோற்றத்தில் இந்த படங்களில் காட்சியளிக்கிறது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

அதேநேரம் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரும் தற்போதைய ஃபார்ச்சூனரை காட்டிலும் அப்கிரேடான முன்பக்கத்தை கொண்டுள்ளது. அப்கிரேட் செய்யப்பட்ட முன்பக்கம் மட்டுமில்லாமல் உட்புற கேபினிலும் ஏற்கனவே கூறியதுபோல் மேம்படுத்த வசதிகள் சிலவற்றை இவை கூடுதலாக பெற்று வரவுள்ளன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

தற்போதைய ஃபார்ச்சூனர் 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் என்ற இருவிதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்னும் இதே என்ஜின் தேர்வுகளைதான் மாற்றமில்லாமல் பெற்றுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

அதேநேரம் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்போர்டியர் வெர்சனில் வழக்கமான 2.8 லிட்டர் டீசல் என்ஜினின் ஆற்றல்மிக்க வெர்சனையும் எதிர்பார்க்கலாம். இவற்றுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டும் 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட்!! 6ஆம் தேதி அறிமுகம்

மேலும் ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் லெஜண்டர் வெர்சன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 4-சக்கர ட்ரைவ் மற்றும் 2-சக்கர ட்ரைவ் அமைப்புகளும் வழங்கப்படவுள்ளன. 2021 டொயோட்டா ஃபார்ச்சூனர் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை ரூ.28 லட்சத்தில் இருந்து ரூ.34 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்படலாம்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Fortuner Legender Teaser Image
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X