டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

உலகளவில் தொடர்ந்து அதிகரித்துவரும் சிப்-களுக்கான தேவையை சமாளிக்க முடியாமல் வருகிற 2022ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கு கிட்டத்தட்ட 5 தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பணிகளை டொயோட்டா நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

கொரோனா, ஒமைக்ரான் என வைரஸ் பரவல் ஒருபக்கம் நம்மை பாடாய் படுத்தி கொண்டிருக்க, மறுப்பக்கம் இவற்றினால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளினால் உலகளவில் நிலவிவரும் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை பல காப்பிரேட் நிறுவனங்களை திக்குமுக்காட செய்து வருகிறது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

குறைக்கடத்திகள் பெரும்பாலும், மொபைல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. என்றாலும், தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் குறைக்கடத்திகளான சிப்-கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. இதன் காரணமாக இந்த உலகளாவிய பற்றாக்குறையில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிக்கியுள்ளன.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், மாருதி சுஸுகி. இந்திய- ஜப்பானிய கூட்டு நிறுவனமான இது குறைக்கடத்திகளுக்கான அதிகப்படியான தேவையை சமாளிக்க முடியாமல் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது. இதன் விளைவாக, கடந்த செப்டம்பரில் இருந்து மாருதி சுஸுகியின் இந்திய தொழிற்சாலைகளில் வாகன தயாரிப்பு பணிகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருவதை பார்த்து கொண்டுதான் வருகிறோம்.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

இதன் தொடர்ச்சியாக, தற்போது மற்றொரு பிரபல ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா வரும் 2022ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கு ஜப்பானில் உள்ள தனது ஐந்து தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி பணிகளை நிறுத்தி கொள்ளவுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில் இருந்தே உள்ளது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த 2021ஆம் வருடம் முழுவதுமாக இந்த தேவையுடன் கழிய, புதிய 2022ஆம் வருடம் இந்த பற்றாக்குறையை குறைப்பதற்கான தீர்வுடன் வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் இந்தியா உள்பட பல உலக நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதால், தற்போதைய நெருக்கடியான சூழல் இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என்றே தெரிகிறது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

டொயோட்டா அடுத்த ஆண்டில் மொத்தம் 9.3 மில்லியன் வாகனங்களை தயாரிக்க இலக்கு நிர்ணயித்து கொண்டது. ஆனால் அதன்பின் இந்த இலக்கு ஒன்பது மில்லியனாக குறைத்து கொள்ளப்பட்டது. 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தி கொள்ளப்பட்டாலும், இந்த ஒட்டுமொத்த இலக்கை அது பாதிக்காது என்றே டொயோட்டா கூறுகிறது. அத்துடன் குறுகிய காலத்தில் 20 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கவும் இந்த ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் வரும் ஜனவரி மாதத்தில் மொத்தம் 8 லட்ச கார்களை தயாரித்து புதிய சாதனையை நிகழ்த்த தயாராகி வருவதாக தெரிவித்து இருந்தது. இந்த எண்ணிக்கை ஆனது 2021 ஜனவரியில் தயாரிக்கப்பட்ட மொத்த டொயோட்டா கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 60,000 யூனிட்கள் அதிகமாகும்.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

இந்த நிலையில் தான் தற்போது ஜப்பானில் உள்ள 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்த டொயோட்டா முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக இருப்பினும், மற்ற முன்னணி பிராண்ட்களை போல் சிப் பற்றாக்குறையால் நேரடியாக டொயோட்டா பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

இதனால், வட அமெரிக்காவில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையிலும் உற்பத்தி பணிகள் 50,000 யூனிட்களாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் சிப் பற்றாக்குறை நெருக்கடியானது டொயோட்டாவின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான திட்டங்களையும் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

டெஸ்லா, ஃபோக்ஸ்வேகன் போன்ற முன்னணி பிராண்ட்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஏற்கனவே கோலோச்சி வரும் நிலையில், டொயோட்டா அதன் உலகளாவிய வரிசையில் 16 பேட்டரி வாகனங்களை இணைக்கும் திட்டங்களை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, பி.இசட்4எக்ஸ் இவி மாடல் அடுத்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டொயோட்டா நிறுவனத்தாலேயே சமாளிக்க முடியல!! சுமார் 5 தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்துகிறது!

இதனை தொடர்ந்து முழு-எலக்ட்ரிக் நடுத்தர அளவு செடான் மற்றும் பெரிய அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் டொயோட்டா பிராண்டில் இருந்து அடுத்தடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் & உற்பத்தி பணிகளில் ஏற்பட்டுள்ள சவாலானது இந்த திட்டங்களை தாமதப்படுத்தக்கூடும்.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota to halt production in five plants in january 2022 details
Story first published: Tuesday, December 21, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X