இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

நம்ம ஊரு இளைஞர்களை ஏங்க வைக்குகின்ற ஸ்டைலில் யாரிஸ் க்ராஸ் அட்வென்சர் எஸ்யூவி ரக காரை டொயோட்டா நிறுவனம் ஐரோப்பாவில் வெளியீடு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் இப்பதிவில் காணலாம்.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

உலக புகழ்பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா, அதன் யாரிஸ் கார் மாடலில் 'க்ராஸ் அட்வென்சர்' எனும் புதிய தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இதனை பிரத்யேகமாக ஐரோப்பிய சந்தையில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

க்ராஸோவர் எஸ்யூவி ஸ்டைல் இக்காருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், கூடுதல் கவர்ச்சியை கொடுக்கும் வகையில் கட்டுமஸ்தான உடல் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வழக்கமான யாரிஸ் மாடலைக் காட்டிலும் இது முரட்டுத்தனமான மற்றும் கூடுதல் அட்வென்சுரஸ் தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

4.18 நீளம், 1.76 மீட்டர் அகலம், 1.56 மீட்டர் உயரம் மற்றும் 2.56 மீட்டர் வீல் பேஸ் என மிரட்டும் வகையில் இதன் உருவ அமைப்பு இருக்கின்றது. ஆகையால், வழக்கமான யாரிஸ் காரைக் காட்டிலும் இதில் அதிக இட வசதியையும் பெற முடியும். இதுதவிர, 18 இன்ச் அளவிலான இரு நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட அலாய் வீல்கள் இக்காரில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

அது, அடர் சாம்பல் நிறம் மற்றும் குரோம் பூச்சுடன் காட்சியளிக்கின்றது. இக்காருக்கு டொயோட்டா நிறுவனம் கூடுதல் உடல் பேனல்களை கூடுதல் தேர்வாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, காருக்கு முரட்டுத்தனமான தோற்றத்தை வழங்கும் வகையில் முன் மற்றும் பின் பக்கங்களில் சற்று இறக்கமான இடத்தில் பம்பர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இத்துடன், ஸ்கிட் பிளேட்டுகளும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

இதுதவிர கூடுதலாக சில பாகங்களை வழங்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கூடுதல் தேர்வாக கிடைக்கும் இந்த பேனல்கள் டொயோட்டா யாரிஸ் க்ராஸ் அட்வென்சர் காரை மேலும் முரட்டுத்தனமான தோற்றத்திற்கு உயர்த்த உதவும். இதற்காக அதிக கட்டுமஸ்தான உடல்வாகுக் கொண்ட பேனல்களையே நிறுவனம் கூடுதல் தேர்வாக வழங்கி வருகின்றது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

இவை மட்டுமின்றி கூடுதல் கவர்ச்சிகரமான சேர்ப்பாக லெதர் இருக்கை, கோல்டு நிற லைன்கள் என பல சிறப்பு அம்சங்கள் இக்காரில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. டொயோட்டா நிறுவனம் இக்காரை கட்டமைக்க ஜிஏ-பி பிளாட்பாரத்தை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தில் வைத்தே இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஹைபிரிட் வாகனங்களை தயாரித்து வருகின்றது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

ஆகையால், இக்காரிலும் ஹைபிரிட் வசதி இடம்பெற்றிருக்கின்றது. இத்துடன், அதிக உறுதியான உடல் மற்றும் செயல்திறன் மிக்க எஞ்ஜின் ஆகியவற்றையும் இக்கார் பெற்றிருக்கின்றது. இந்த காரில் நான்காம் தலைமுறை எலெக்ட்ரிக் ஹைபிரிட் தொழில்நுட்பம் அடங்கிய 1.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 116 எச்பி திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், புத்திசாலி தனம் நிறைந்த இழுவை திறன் இக்காருக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. இது நிலபரப்பின் தன்மைக்கு ஏற்றவாறு காரை 4X2 அல்லது 4X4 எனும் திறனுக்கு மாற்றிவிடும்.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

இத்தகைய மிரட்டலான வசதிக் கொண்ட யாரிஸ் காரையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்துள்ளது. மிக விரைவில் இக்காருக்கு புக்கிங்கை தொடங்கி, விற்பனைக்குக் கொண்டு வர டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இக்காரை வாடிக்கையாளர்கள் விரும்பினால் பிரீமியர் எடிசனிலும் பெற்றுக் கொள்ளலாம் என நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த டொயோட்டாவுக்கு இந்தியானு ஒரு நாடு இருக்கிறதே தெரியாதா?.. கவர்ச்சியான யாரிஸ் கார் ஐரோப்பாவில் அறிமுகம்...

இந்த எடிசனில் கிடைக்கும் யாரிஸ் க்ராஸ் அட்வென்சர் எஸ்யூவி அதிக பிரீமியம் வசதிகளுடன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, கிக் சென்சார், அதிக லக்சூரி வசதிக் கொண்ட கேபின் என எக்கசக்க வசதிகளுடன் இந்த பதிப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota Unveiled The Yaris Cross Adventure SUV In Europe. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X