டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா எலெக்ட்ரிக் காரில் சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்தவருக்கு மிகவும் குறைவாகவே செலவு ஆகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எலெக்ட்ரிக் வாகனங்கள் தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல என பலர் நினைக்கின்றனர். ஒரு முறை சார்ஜ் செய்தால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயணிக்கும் தொலைவு (ரேஞ்ச்) குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம். ஆனால் இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

முன்பெல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்களை பார்ப்பது மிகவும் அரிதாக இருக்கும். ஆனால் தற்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் பெட்ரோல் பங்க்குகளுக்கு இணையான எண்ணிக்கையில் சார்ஜிங் ஸ்டேஷன்களும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்த சூழலில், அன்ஜாய் சைனி என்பவர் தற்போது டெல்லியில் இருந்து ஹிமாச்சல பிரதேச மாநிலம் காஸா வரை தனது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் (Tata Nexon EV) பயணம் செய்துள்ளார். அன்ஜான் சைனி தனது நண்பர்கள் 2 பேருடன் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், இந்த தொலைதூர பயணத்தை அன்ஜாய் சைனியும், அவரது நண்பர்களும் வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதுதான் இதற்கு காரணம். அன்ஜாய் சைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒட்டுமொத்தமாக 1,900 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர். இதற்கு ஆன செலவு அதை விட ஆச்சரியம்.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆம், இந்த பயணம் முழுவதும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கு வெறும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு ஆகியுள்ளது. சொல்லப்போனால் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு கிட்டத்தட்ட 1 ரூபாயை மட்டுமே அவர்கள் செலவு செய்துள்ளனர். இதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் மகிமை.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதுவே பெட்ரோல், டீசல் கார் என்றால், 1,900 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்கு மிகப்பெரிய அளவில் செலவு ஆகியிருக்கும். அன்ஜாய் சைனியும் மற்றும் அவரது நண்பர்களும் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்பே முழுமையாக தயாராகி விட்டனர். அவர்கள் தங்கிய ஹோட்டல்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்வதற்கான வசதி உள்ளதா? என அவர்கள் விசாரித்துள்ளனர்.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

மேலும் எங்கெல்லாம் காரை சார்ஜ் செய்ய முடியுமோ? அதனை முன்கூட்டியே திட்டமிட்டு, அந்த இடத்தை ஓய்வு எடுக்கும் இடமாக மாற்றியுள்ளனர். மேலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் எங்கு உள்ளது? என்பதை காட்டும் செல்போன் செயலிகளையும் அவர்கள் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தனர்.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதன் மூலம் அவர்களால் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகி கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் பெறுகிறது. டாடா நிறுவனம் ஏற்கனவே ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட நெக்ஸான் காரை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இந்த கார்.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், விலை மிகவும் முக்கியமானது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் தற்போது நேரடி போட்டி என எந்த எலெக்ட்ரிக் காரும் இல்லை. எம்ஜி இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் கோனா ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் சற்று விலை உயர்ந்தவை.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

எனவே குறைவான விலையில் கிடைப்பதால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை அனைவரும் விரும்புகின்றனர். இதற்கு அடுத்த காரணம் ரேஞ்ச். டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 312 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் காரில் 2,000 கிலோ மீட்டர் பயணம்... சார்ஜ் போட எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால் நடைமுறை பயன்பாட்டில் இவ்வளவு ரேஞ்ச் கிடைக்குமா? என்பது சந்தேகம். 240-250 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும் இது நல்ல ரேஞ்ச்தான் என்பதில் சந்தேகம் இல்லை. நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில், 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Trip by tata nexon ev from delhi to kaza
Story first published: Thursday, September 30, 2021, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X