அபராத செல்லாண் வழங்கிய காவலர்! தனியாக அழைத்து தரமான சம்பவம் செய்த அமைச்சர்! ரொம்ப நல்லவரா இருப்பாரு போலிருக்கே

தனது காருக்கு போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத செல்லாணை வழங்கிய காவலரை தனியாக அழைத்து அமைச்சர் ஒருவர் வாழ்த்து தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிகழ்வு எந்த மாநிலத்தில் அரங்கேறியது என்பது பற்றிய முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

தெலங்கானா மாநிலத்தின் அமைச்சர் கேடி ராம ராவ் காருக்கு அண்மையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் இருவர் செல்லாணை அனுப்பி வைத்தார். போக்குவரத்து காவலர்களின் இந்த துணிச்சலான செயல் ஆளும் கட்சியின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

அதேசமயம், பொதுமக்கள் மத்தியில் காவலரின் இந்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரபலம் என்பதை அறிந்தும் காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறி நெட்டிசன்கள் அவர்களை வாழ்த்து மழையில் நனைத்தனர்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

அக்டோபர் 2ம் தேதி அன்று அரசியல்வாதியின் காரின் மீது காவலர்கள் நடவடிக்கை எடுத்திருந்தார். இந்நிகழ்வு நடைபெற்ற இரண்டு நாட்கள் கழித்து தனக்கு செல்லாணை வழங்கிய இரு காவல்துறை அதிகாரிகளையும் அமைச்சர் ராம ராவ் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

பொதுவாக, இதுமாதிரியான நிகழ்வுகளின் போது அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது வழக்கம். ஆனால், விநோதமாக அமைச்சர் ராம ராவ், தன்மீது நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துணை ஆய்வாளர் இளையா மற்றும் கான்ஸ்டபிள் வெங்கடேஸ்வரலு ஆகிய இருவரையும் வாழ்த்தி, அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து அனுப்பி வைத்திருக்கின்றார்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

அமைச்சர் என்ற விலக்கு இல்லாமல் சட்டப்படி காவலர்கள் நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்டி அவர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார். அமைச்சரைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுத்த போக்குவரத்துக் காவலர்களுக்கு ஹைதராபாத் நகர காவல் ஆணையர் அஞ்ஜனி குமாரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபு காட் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்த அமைச்சர் கேடிஆர் சென்றிருக்கின்றார். இந்நிகழ்வில் மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஹர்யானா மாநில ஆளுநர் பந்தாரு தத்தாத்ரேயா மற்றும் உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி ஆகியோர் கலந்துக் கொண்டிருக்கின்றனர்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

இவர்களுடன் சேர்ந்தே கேடிஆர்-ம் அப்பகுதியை விட்டு கிளம்பியதாகக் கூறப்படுகின்றது. அந்த நேரத்தில் ஆளுநர் தமிழிசையின் கான்வாயை இடைமறைக்கும் வகையில் அமைச்சர் கேடிஆருக்கு சொந்தமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா கார் எதிர் திசையில் வந்திருக்கின்றது. அந்த நேரத்தில் அதே பகுதியில் பணியில் இருந்த துணை ஆய்வாளர் இளையா, காரை நிறுத்தி, அதன் ஓட்டுநருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

தொடர்ந்து, அமைச்சரின் இன்னோவா காருக்கு அபராத செல்லாணையும் காவலர் வழங்கினர். இந்த நிகழ்வு கேடிஆரின் ஆதரவாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. ஆகையால், சில நேரங்கள் அந்த பகுதி பரப்புடன் காணப்பட்டது. இதுகுறித்த வீடியோ அண்மையில் வைரலாகியது குறிப்பிடத்தகுந்தது. காவலரின் இந்த செயலுக்கே தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

அமைச்சர்கள், அரசியல்வாதிகளுக்கு சிறப்பு பாதையை காவலர்கள் ஏற்படுத்தி வந்த காலம் தற்போது மாறி, அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டால் அபராத செல்லாண் வழங்கும் நிகழ்வு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. இது பொதுமக்கள் மத்தியில் ஆச்சரியம் கலந்த வரவேற்பைப் பெற தொடங்கியிருக்கின்றது. காவல்துறை இணையத்தில் வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் போக்குவரத்து விதிமீறல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

இதுமாதிரியான நடவடிக்கையில் காவலர்கள், அரிசயல்வாதிகள் மற்றும் அரசின் முக்கிய பணிகளில் இருப்பவர்கள்கூட அண்மைக் காலமாக சிக்கி வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தகுந்தது. போக்குவரத்து விதிமீறல்களே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம். எனவேதான் காவல்துறை அதிகாரிகள் விதிமீறல் வாதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

அபராத செல்லாண் வழங்கிய காவலர்... தனியாக அழைத்து தரமான சம்பவத்தை செய்த அமைச்சர்... ரொம்ப நல்லவரா இருப்பார் போலிருக்கே!

சிசிடிவி கேமிரா, சமூக வலை தளத்தில் வைரலாகும் வீடியோ என பல கோணங்களில் தங்களின் பார்வையை செலுத்தி நடவடிக்கை வலையை வீசி வருகின்றனர். இதன் விளைவாக போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அதனால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: முதல் இரு படங்களை தவிர மற்ற அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Ts minister ktr wishes police officers who fined his car after traffic violation
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X