Maruti Suzuki Ciaz ஏழைகளின் காரா?.. யாருப்பா சொன்னது? இந்த காரோட விலை எவ்வளவு தெரியுமா?
Maruti Suzuki Ciaz காரை சின்ன திரையுலகைச் சேர்ந்த ஓர் நடிகர் பயன்படுத்தி வந்த காரணத்திற்காக தேவையில்லா விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கின்றார். இதுமாதிரியான விமர்சனத்திற்கு ஆளாகும் வகையில் மாருதி சுசுகி சியாஸ் விலை குறைவான காரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழும்பியுள்ளது. இக்காரின் விலை மற்றும் அதுகுறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

Maruti Suzuki (மாருதி சுசுகி) நிறுவனம் தயாரித்து வரும் மிக முக்கியமான கார் மாடல்களில் Ciaz (சியாஸ்) மாடலும் ஒன்று. இந்த காரை பயன்படுத்தியதற்காகவே ஓர் நடிகரை ஏழை என்றும் சில தேவையில்லாத விமர்சனங்களையும் அவர்மீது முன் வைத்திருக்கின்றனர் சில பத்திரிக்கையாளர்கள்.

தனக்கு நேர்ந்த இந்த நிலையை தானே தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கின்றார் அந்த நடிகர். இந்தி சின்னத் திரை உலகைச் சேர்ந்தவர் கரன்வீர் போஹ்ரா. இவர் மீத சில முன்னணி பத்திரிகை உலகைச் சேர்ந்த நபர்கள் தேவையில்லா விமர்சனைத்தை முன் வைத்திருக்கின்றனர்.

கரன்வீர் போஹ்ரா மாறுபட்ட நடிப்பிற்கு பெயர்போன ஓர் நபராக இந்தி சின்ன திரையுலகில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவர் மிக சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த நடிகர் சித்தார்த் சுக்லாவின் தாயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அவரது இல்லம் சென்றிருந்தார்.

தனது பெண் தோழி உடன் இவர் மாருதி சுசுகி சியாஸ் காரில் சென்றிருக்கின்றார். அந்த நேரத்தில் அங்கு கவரேஜிற்காக வந்திருந்த சில பத்திரிக்கையாளர்கள், கரன்வீர் போஹ்ரா, காவலர்கள் சிலருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, "தான் ஒரு ஏழை என்பதை காண்பிக்கும் வகையில் நடிகர் சியாஸ் காரில் வந்திருக்கின்றார்" என தேவையற்றை விமர்சனங்களை முன் வைத்தனர்.

இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த கரன்வீர் போஹ்ரா, "நான், தனது மகனை இழந்த தாய்க்கு ஆறுதல் சொல்லவே அங்கு சென்றேன். ஐந்து நட்சத்திர தோற்றத்தைக் காண்பிக்க அல்ல. இது மிகவும் சோகமான நிகழ்வு. இந்த மாதிரியான காரணத்தினால்தான் ஊடக நபர்கள் மீது மாறுபட்ட கருத்து நிலவுகின்றது" என பதிவிட்டுள்ளார்.

நடிகரின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வீடியோவின் பின்னணியில் இருக்கும் குரலுக்கு சொந்தக்காரரையும் அவர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றனர். இத்துடன், பலர் கரன்வீர் போஹ்ராவிற்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கியிருக்கின்றனர்.

மாருதி சுசுகி சியாஸ் கார் அவ்வளவு மிகக் குந்த விலைக் கொண்ட கார் அல்ல என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். இந்த கார் இந்திய சந்தையில் ரூ. 8.52 லட்சம் தொடங்கி ரூ. 11.50 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், சொகுசு வசதிகளும் இந்த காரில் ஏராளமாக இருக்கின்றன.

இது ஓர் செடான் ரக காராகும். அதிக இட வசதி மற்றும் சொகுசான பயணத்திற்கு உகந்த காராக இது பார்க்கப்படுகின்றது. எனவேதான் சில முன்னணி நடிகர்கள்கூட சியாஸ் காரை பயன்படுத்தி வருகின்றது. அதேவேலையில், கரன்வீர் இடத்தில் இந்த வாகனம் மட்டுமே இல்லை.

இன்னும் பல வாகனங்கள் அவரிடம் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் நைட் ராட் எனும் பைக் விலையுயர்ந்த பைக் இருக்கின்றது. ஃபேன்சியான என் கொண்ட இந்த பைக்கை அவர் ஏழு வருடங்களாக பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுபோன்று விலைக்குறைவான வாகனங்களை பயன்படுத்துவது புதிதல்ல. நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏழ்மையான வாழ்க்கைக்கு பெயர்போனவராக இருக்கின்றார். பல கோடிகளை சம்பளமாக பெறும் இவர் தற்போதும் டொயோட்டா இன்னோவா காரை பயன்படுத்தி வருகின்றார். இவர் மட்டுமல்ல மலாய்கா அரோரா, ஆமிர் கான், குல்சன் மற்றும் ஜாக்கி ஸ்ரோஃப் ஆகியோரும் இன்னோவா காரையே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் மிக அதிக சம்பளத்தைப் பெறும் மற்றுமொரு நடிகரான அமிதாப் பச்சன்கூட தனது பொது பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா காரையே பயன்படுத்தி வருகின்றார். இவரை போலவே பல நடிகர்கள் தங்களின் கராஜில் விலையுயர்ந்த கார்கள் இருப்பினும் பொதுவான பயணங்களுக்கு விலை குறைந்த அல்லது மிகவும் சாதாரணமான வாகனங்களையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








