சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து உள்நாட்டில் கார்களை விற்பனை செய்யவும், வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் தேர்வு உள்ளது என டெஸ்லாவிடம் பேசி வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

அமெரிக்க, ஐரோப்பிய அளவிற்கு எலக்ட்ரிக் வாகன பயன்பாடு தற்போதைக்கு நம் நாட்டில் இல்லை என்றாலும், எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இதனால் புதிய புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் அறிமுகமாகி வருவதை தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம். புதிய வருகைகளில் மிகவும் எதிர்பார்ப்பில் இருப்பது டெஸ்லா தான்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

அமெரிக்காவை சேர்ந்த இந்த எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான பிராண்ட்டாக விளங்குவது உங்களுக்கே நன்றாக தெரியும். இத்தகைய நிறுவனத்தையே இந்திய சந்தைக்கு கொண்டுவர மத்திய அரசாங்கம் பலகட்ட நடவடிக்கைகளிலும், பேச்சுவார்த்தைகளிலும் ஈடுப்பட்டு வருகிறது.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க இந்தியாவிலேயே உங்களால் தொழிற்சாலையை நிறுவ முடியும் என டெஸ்லாவிடம் மத்திய அரசு சார்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு உதவியாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு டெஸ்லாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

அதேநேரம், சீனாவில் தயாரிக்கப்படும் டெஸ்லா கார்களை தயவுசெய்து இந்தியாவில் விற்பனை செய்ய பார்க்காதீர்கள் எனவும் திட்டமிட்டவட்டமாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

பிரபல இந்திய செய்தித்தளம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய கட்கரி, எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு இந்திய அரசாங்கமே வழிவகுத்து தரும், இதனை டெஸ்லா நிச்சயம் எண்ணிப்பார்க்க வேண்டும் என மறுபடியும் அரசாங்கத்தின் கருத்தை பதிவு செய்துள்ளார்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

"உங்கள் நிறுவனம் சீனாவில் தயாரிக்கும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்க வேண்டாம் என்று நான் டெஸ்லாவிடம் கூறியுள்ளேன். நீங்கள் (டெஸ்லா) இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும். மேலும் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்" என இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், என்ன தேவைகள் உள்ளதோ அதனை எங்களது அரசாங்கம் பூர்த்தி செய்யும் என்றார்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

சீனாவில் ஷாங்காய் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் 2019இல் நிறுவியது. அமெரிக்காவை தாண்டி டெஸ்லா நிறுவிய முதல் வெளிநாட்டு தொழிற்சாலை இதுவாகும். டெஸ்லாவின் ஷாங்காய் தொழிற்சாலையில் பெரும்பான்மையான டெஸ்லா மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

இவ்வாறு தயாரிக்கப்படும் டெஸ்லா கார்கள் சீனாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐரோப்பாவிற்கே ஏற்றுமதி செய்யப்படும்போது சீனாவிற்கு அண்டை நாடான இந்தியாவில் ஏற்றுமதி செய்வதில் ஒரு முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமாக டெஸ்லாவிற்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

ஆனால் இந்திய அரசாங்கம் இந்தியாவிலேயே தொழிற்சாலையை நிறுவிக்கொள்ள வற்புறுத்தி வருகிறது. இது இந்தியாவிற்கு மட்டுமின்றி டெஸ்லாவிற்கும் சில விதங்களில் நன்மையை பயக்கக்கூடியது. ஏனெனில் உள்நாட்டில் கிடைக்கும் பாகங்களை கொண்டு தயாரிப்பதால் தனது எலக்ட்ரிக் கார்களின் விலைகளை டெஸ்லா நிறுவனத்தால் இந்திய சந்தைக்கு ஏற்ப நிர்ணயிக்க முடியும்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

அதுவே முழுமையாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அதிகளவிலான வரியினை மத்திய அரசாங்கம் நிர்ணயிக்கிறது. இதற்கு டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க்கும், இந்திய அரசாங்கம் முழுமையாக தயாரிக்கப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு அதிகப்படியான வரிகளை விதிப்பதாக தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

எவ்வாறாயினும், வரிச் சலுகைகள் தொடர்பான நிறுவனத்தின் கோரிக்கை குறித்து டெஸ்லா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதிப்படுத்தியுள்ளார். டெஸ்லா இந்திய சாலை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில், சுங்க மதிப்பை பொருட்படுத்தாமல் எலக்ட்ரிக் கார்களுக்கான கட்டணத்தை 40 சதவீதமாக கொடுக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான சமூக நலக் கட்டணத்தில் 10%-ஐ திரும்ப பெறவும் அரசாங்கத்தை கேட்டு கொண்டுள்ளது.

சீன டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை!! உறுதியாக இருக்கும் ஒன்றிய அரசு!

இந்தியாவில் தற்சமயம் சிபியூ முறையில், அதாவது முழுவதுமாக கட்டமைக்கப்பட்ட நிலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் கார்களுக்கு 60%-இல் இருந்து 100% வரையில் தனிப்பயன் வரி விதிக்கப்படுகிறது. உலகளவில் பிரபலமானது டெஸ்லா பிராண்ட் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (ஜூலை- செப்டம்பர்) 241,300 கார்களை உலகளவில் டெஸ்லா விற்பனை செய்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Union Minister Nitin Gadkari repeatedly told Tesla to consider local production.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X