அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவின் மாநில முதல் அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு அதிரடியான கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் (R K Singh) தற்போது ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல் அமைச்சர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ அலுவல் பணிகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அவரது கோரிக்கை. இது தொடர்பாக தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் மாநிலங்களின் முதல் அமைச்சர்களுக்கு ஆர்.கே.சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் அரசின் திட்டத்தில் இணைய வேண்டும் என அனைத்து ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநில/யூனியன் பிரதேச முதல் அமைச்சர்களுக்கு, ஒன்றிய மின்சக்தி மற்றும் புதிய & புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

மின்சக்தி மற்றும் புதிய & புதுப்பிக்கதக்க எரிசக்தி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட அனைத்து அரசு துறைகளிலும் வழக்கமான ஐசி இன்ஜினில் (Internal Combustion Engine - ICE) இயங்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்த வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்றுவதற்கு ஒன்றிய அமைச்சர்களும், மாநில முதல் அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் கோரிக்கை வைத்துள்ளார். ஒன்றிய அமைச்சர்களும், மாநில முதல் அமைச்சர்களும் தங்களுக்கு கீழ் செயல்படும் அரசு துறைகள்/அமைச்சரவைகளுக்கு இந்த அறிவுரையை வழங்க வேண்டும் என்பது அவரின் கோரிக்கை.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங்கின் இந்த கோரிக்கைக்கு முன்னதாகவே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசு துறைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பணிகள் வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அத்துடன் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தை இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை சார்ந்து இருக்கும் நிலையை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறது.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்ளிட்ட பலர் இதனை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவை குறைக்கலாம்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அத்துடன் காற்று மாசுபாடு பிரச்னையையும் இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதுதவிர பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் அளவிற்கு, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு செலவு ஆகாது என்பது கூடுதல் சிறப்பம்சம். எனவே பொதுமக்கள் பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதும், பொதுமக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி திருப்பி வருகிறது. எனவே வரும் காலங்களில் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன.

அரபு நாடுகள் எப்படி சமாளிக்க போகுதோ? இந்திய அரசின் மாஸ்டர் பிளான்... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அதற்கு ஏற்ப தற்போதே இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களின், குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களும் தொடர்ச்சியாக இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. வரும் காலங்களில் இந்திய சாலைகளில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் காண முடியும் என்பது உறுதி.

Most Read Articles
English summary
Union power minister r k singh urges chief ministers to switch to electric vehicles
Story first published: Saturday, August 28, 2021, 19:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X