Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Lifestyle
எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்க?உங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா?
- Movies
உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
- Finance
இந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன?
- News
"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செல்ஃபீ எடுத்ததற்கு ரூ.7,500 அபராதம்! வழக்கு பதிவையும் பரிசாக வழங்கிய காவல்துறை! காரணத்தை கேட்ட மிரண்டுடுவீங்க
செல்ஃபீ எடுத்ததற்காக இளைஞர்கள் சிலருக்கு போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

செல்ஃபீ எடுத்ததற்காக இளைஞர்கள் சிலர்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், ஃபிரோசாபாத் எனும் பகுதியிலேயே இந்த விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், அவர்களுக்கு ரூ. 7,500க்கான அபராத செல்லாணையும் வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அபராத சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. செல்ஃபீ எடுப்பது என்பது மிகவும் சாதாரண ஒன்று. இதற்கு இந்த உச்சபட்ச அபராதமா?, என்ற கேள்வியை அனைவரின் மனத்தில் தோற்றுவித்துள்ளது. ஆனால், போலீஸார் அபராதத்தை வழங்கியதற்கு செல்ஃபீ எடுத்தது மட்டுமே காரணமல்ல. மற்றுமொரு காரணமும் இருக்கின்றது.

இளைஞர்கள் இணையத்தில் டிரெண்டாக வேண்டும் என்பதற்காக ஓடும் காரின் பேனட்டின் மீது அமர்ந்து செல்ஃபீ எடுத்திருக்கின்றனர். இந்த ஆபத்தான விதிமீறல் செயலுக்காகவே உபி காவல்துறை அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றது.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி பொது சாலையில் வாகனங்கள் சார்ந்து ஸ்டண்ட் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த விதிமீறலில் ஈடுபட்டதற்காகவே இளைஞர்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். இதுபோன்ற விதிமீறல் செயல்களைக் குறைக்க வேண்டும் என்பதற்காக போலீஸார் மிக கடுமையான கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், காவல்துறையின் கழுகு பார்வையில் மண்ணைத் தூவிவிட்டு சாகசம் மற்றும் ரேஸ் போன்ற விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக காவல்துறையிடம் சிக்கி கடுமையான நடவடிக்கைகளுக்கு ஆளாகுகின்றனர். இதுபோன்று என்னதான் கெடுபிடி அதிகமாக இருந்தாலும் விதிமீறல் ஆசாமிகளின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் நீண்டுக் கொண்டே இருக்கின்றது.
Image Courtesy: Sakshya News
இந்த நிலையிலேயே சமூக வலைதளத்தில் வைரலாகிய வீடியோவை அடிப்படையாகக் கொண்டு மூன்று இளைஞர்கள்மீது உபி போலீஸார் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். ஸ்டண்ட் செய்ய பயன்படுத்திய காரையும் காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்துடன், இளைஞர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. கல்லூரிக்கு செல்லும் வழியிலேயே காரின் பேனட் மீது அமர்ந்து இளைஞர்கள் செல்ஃபீ எடுத்திருக்கின்றனர். ஒரு இளைஞர் காரை இயக்கிக் கொண்டிருக்க, மற்ற இரு இளைஞர்கள் காரின் பேனட்மீது அமர்ந்து வீடியோவிற்கு போஸ் கொடுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

இதுகுறித்த வீடியோ இணையத்தில் அதி-வேகமான வைரலாகியது. இதனைத் தொடர்ந்தே போலீஸார் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கின்றனர். இளைஞர்கள் ஸ்டண்ட் செய்ய பயன்படுத்தியது மாருதி சுசுகி எர்டிகா காராகும். இது ஓர் எம்பிவி ரக கார். இந்தியாவில் இக்கார் ரூ. 7.69 லட்சம் எனும் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த விலையுயர்ந்த காரையே போலீஸாரிடத்தில் இளைஞர்கள் பறிகொடுத்திருக்கின்றனர்.