காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

ஜீப் கமெண்டர் 7-இருக்கை எஸ்யூவி சமீபத்தில் பிரேசில் இருந்து உலகளவில் வெளியீடு செய்யப்பட்டது. ஜீப் மெரிடியன் என்ற பெயரிலான இந்திய சந்தைக்கான மாடல் அடுத்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இந்த நிலையில் தற்போது இந்த 7-இருக்கை எஸ்யூவி காரின் ஆஃப்-ரோடு திறனை வெளிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. யு கார் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை தான் கீழே காண்கிறீர்கள்.

இந்த வீடியோவின் மூலம், வழக்கமான சாலையில் கம்பீரமான தோற்றத்தை தரும் வகையில் வடிவமைக்கப்படும் அதேசமயம், பாறைகள் நிறைந்த பகுதிகள் என வாகனங்களை எளிதாக ஓட்ட முடியாத ஆஃப்-ரோடுகளில் கூட இயங்கும் திறன் உடனும் ஜீப் கமெண்டர் கொண்டுவரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

வீடியோவில், கற்பாறைகளின் மீது எளிதாக ஏறி இறங்கும் புதிய ஜீப் கமெண்டர் இத்தகைய ஆஃப்-ரோடையும் எளிதாக கையாள்கிறது. கமெண்டர் 7-இருக்கை எஸ்யூவி கார் தற்போதைக்கு பிரேசில் தயாரிக்கப்படும் அளவில் மிக பெரிய மற்றும் அதிநவீன ஜீப் வாகனமாகும்.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இந்தியாவில் உள்ள ஜீப் நிறுவனத்தின் ரஞ்சகன் தொழிற்சாலையில் கமெண்டரின் வலது-கை ட்ரைவ் வெர்சன் தயாரிக்கப்பட உள்ளது. பிரேசில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீப் கமெண்டரில் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின்கள் தேர்வுகளாக வழங்கப்பட்டுள்ளன.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இதில் 1.3 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 185 பிஎச்பி & 270 என்எம் டார்க் திறனையும், டர்போ-டீசல் என்ஜின் 178 பிஎச்பி & 380 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன. இதில் பெட்ரோல் என்ஜின் உடன் முன்சக்கர ட்ரைவ் & 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

டீசல் என்ஜின் உடன் அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பு மற்றும் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஜீப் மெரிடியன் அதிகப்பட்சமாக 200 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர், 4-சிலிண்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

இந்த டீசல் என்ஜின் உடன் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளாக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளன. அதேநேரம் மைல்ட் ஹைப்ரீட் சிஸ்டமும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தோற்றத்தை பொறுத்தவரையில், விற்பனையில் காம்பஸை காட்டிலும் கமெண்டர் நீளம் அதிகமானது.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

ஆதலால் மெர்டியன் 7-இருக்கை எஸ்யூவி காரின் நீளமும் அதிகமாக இருக்கும். ஆனால் ஸ்டைலில், சில காஸ்மெட்டிக் மாற்றங்கள் செய்யப்பட்ட காம்பஸ் 5-இருக்கை எஸ்யூவி வாகனத்தை போலவே கமெண்டர் உள்ளது. குறிப்பாக கமெண்டர் காரை சுற்றிலும் வழங்கப்பட்டுள்ள க்ரோம் தொடுதல்கள், முன்பக்க க்ரில் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளின் மேல்பக்க முனைகள் நமக்கு காம்பஸையே ஞாபகப்படுத்துகின்றன.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

ஜீப் கமெண்டரின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், செவ்வக வடிவ முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள், பெரிய ஃபாக்ஸ் துவாரங்களுடன் வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்ட முன்பக்க பம்பர், பின்பக்க overhangs மற்றும் மெல்லியதான டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

புதிய ஜீப் கமெண்டர் 7-இருக்கை காரின் நீளம் 4769மிமீ, அகலம் 1,859மிமீ மற்றும் உயரம் 1,682மிமீ ஆகும். இது தற்போதைய காம்பஸ் மாடலை காட்டிலும் 364மிமீ நீளமானது, 41மிமீ அகலமானது மற்றும் 42மிமீ உயரமானது. ஜீப்பின் இந்த புதிய 3-வரிசை எஸ்யூவி காரின் வீல்பேஸ் 2,794மிமீ. இது 5-இருக்கை காம்பஸ் கார் உடன் ஒப்பிடும்போது 158மிமீ நீளம் அதிகமாகும்.

காம்பஸ் மாடலையே மிஞ்சிவிடும்!! ஆஃப்-ரோடில் கலக்கும் புதிய ஜீப் கமெண்டர், இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்?

மெரிடியனின் அறிமுகத்திற்கு முன்னதாக 2021 ஜீப் காம்பஸ் வாகனத்தின் மாடல் எஸ் வேரியண்ட் அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த வகையில் புதிய இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் தன்னிச்சையாக செயல்படக்கூடிய ஓட்டுனர் இருக்கையை காம்பஸின் மாடல் எஸ் வேரியண்ட் பெற்றுள்ளது.

நடப்பு 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.17.19 லட்சத்தில் இருந்து ரூ.28.49 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஜீப் #jeep
English summary
Jeep Commander Gets Some Serious Off-Road Capabilities.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X